
தற்போது சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின்கள் கிடைக்கின்றது. ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற நன்மைகளும் குறைபாடுகளும் உள்ளது. உங்கள் சலவை சுமையைக் குறைப்பதற்கு உங்கள் வீட்டிற்கு ஒரு வாஷிங் மெஷின் வாங்க முடிவு எடுத்துள்ளீர்கள் என்றால் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு சில குறிப்புகளை நாங்கள் பரிந்துரைக்கிறோ ம். இந்த குறிப்புகள் உங்கள் வாஷிங்மெஷினை சிறந்த முறையில் தேர்வு செய்ய உங்களுக்கு உதவும்.
நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாஷிங்மெஷின் வாங்குவதற்கு முன்னால் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்களை உங்களுக்காக நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்
1) தானியங்கி vs. அரை-தானியங்கி
சந்தையில் தொழில்நுட்பம் வாரியாக 2 வகையான வாஷிங் மெஷின்கள் கிடைக்கின்றது. ஒன்று தானியங்கி மற்றும் இன்னொன்று அரை-தானியங்கி. தானியங்கி வாஷிங்மெஷினில் துவைப்பதற்கும் உலர்த்துவதற்கும் சேர்த்து ஒரு ட்ரம்மே செயல்படும். ஆனால் அரை-தானியங்கி வாஷிங்மெஷினில் இரண்டு ட்ரம்கள் உள்ளன. ஒன்று துவைப்பதற்கு மற்றொன்று உலர்த்துவதற்கும் உபயோகப்படும். துணிகளை துவைத்து முடித்தபின், அதை உபயோகப்படுத்துபவர்கள், அந்த துணிகளை எடுத்து உலர்த்தும் ட்ரம்மிர்க்குள் போட வேண்டும். தானியங்கி வாஷிங் மெஷினுடன் ஒப்பிடுகையில், அரை-தானியங்கி வாஷிங்மெஷின் மிகக் குறைவான விலைக்கே விற்கப்படுகிறது..
2) ஃப்ரன்ட்- லோடிங் vs டாப்- லோடிங்
இது நீங்கள் வாஷிங்மெஷினை வாங்குவதற்கு முன் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான முடிவாகும். ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்கள் பொதுவாக குறைந்த இடத்தை எடுப்பதோடு குறைந்த அளவு நீரையும் பயன்படுத்துகிறது. அதன் சுழற்சியின் வேகம் அதிகமாக இருப்பதால், துணிகளை உலர்த்துவதற்கு குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்ளும். ஆனால் இவ்வகை மெஷின்களின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

டாப் லோடிங் வாஷிங் மெஷின்கள் பார்ப்பதற்கு பெரியதாக தெரிவதோடு விலை சற்று மலிவாகவே விற்கப்படுகிறது. இவை அதிக கொள்திறன் உடையதாகும். இவை சிறந்த முறையில் துணிகளை அலசுவதோடு குறைந்த நேரத்தில் சலவை சுழற்சியை முடித்து விடும் ஆற்றல் கொண்டது.
3) செயல்திறனின் மதிப்பீடு
நீங்கள் வாஷிங் மெஷின் வாங்குவதற்கு முன்னர் அதன் மதிப்பீட்டை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சில மெஷின்கள் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும் ஆனால் மற்றவையோ அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். இதை வைத்து நீங்கள் மிஷின்களை மதிப்பிடலாம். அதிக அளவு மதிப்பீடு இருந்தால் குறைந்த அளவு மின்சாரத்தையே அந்த மெஷின் உபயோகப்படுத்தும் என்று பொருள். எனவே தெளிவாக முடிவெடுங்கள்.
4) ஆர்பிஎம் (1 நிமிடத்தில் எத்தனை முறை சுழலும்)
ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை உங்கள் வாஷிங் மெஷினுடைய டிரம் சுழல்கிறது என்பதன் கணக்கீட்டை ஆர்பிஎம் (ரெவல்யூஷன் பெர் மினிட்) என்கிறோம். அதிக அளவு ஆர்பிஎம் இருந்தால் துணிகளை உலர்த்துவதற்கு குறைந்த நேரமே தேவைப்படும். இருப்பினும் ஆர்பிஎம் நாம் எந்த வகை துணியை துவைக்கிறோம் என்பதையும் பொறுத்து அமையும். மென்மையான துணிகளை துவைக்கும் போது 300 முதல் 400 வரை ஆர்பிஎம் வைக்கலாம். டெனிம் போன்ற ஆடைகளை துவைக்கும்போது 1000 வரை ஆர்பிஎம் வைக்கலாம்.
இந்த உதவிக் குறிப்புகள், நீங்கள் சரியான வாஷிங்மெஷினை தேர்ந்தெடுத்து வாங்க உதவும் என்று நம்புகிறோம்.