உங்கள் வீட்டில் தெய்வீக நறுமணத்தை உண்டாக்க விரும்புகிறீர்களா? அது எளிதான ஒன்று தான்!

பருவகால நிலையைக் கருத்தில் கொள்ளாமல் உங்கள் வீட்டில் நறுமணத்தை உருவாக்க விரும்புகிறீர்களா? உங்களால் பயன்படுத்தக்கூடிய சில அற்புத குறிப்புகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Want to Make Your Home Smell Divine? It’s Easy!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

நீண்ட நாளுக்குப் பிறகு வீட்டில் மீண்டும் வீசுகின்ற நறுமணத்தை போல் வேறு எதுவும் இல்லை. இது உங்கள் மனதை உடனடியாக உற்சாகப்படுத்தி உங்களைத் தளர்வாக்க உதவுகிறது. உங்கள் வீட்டில் நல்ல நறுமணத்தை உருவாக்க பல வழிகள் உள்ளன, இதில் எளிய மற்றும் மிகவும் பொருத்தமான வழி தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் நறுமண எண்ணெய்களுடன் சில துளிகள் சமையல் சோடாவை சேர்த்து பயன்படுத்தலாம், சிறந்த நறுமணத்திற்காக அதைச் சிறு கிண்ணங்களில் வைத்து உங்கள் வீட்டின் பல மூலைகளில் வைத்துக் கொள்ளவும். நறுமண எண்ணெய்களினால்குடும்ப உறுப்பினர்களுக்கு ஒவ்வாமை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதிக்க அதனை முதலில் வீட்டின் சிறிய பகுதியில் வைத்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

1) தெளிப்பான்களை பயன்படுத்தவும்

ஒரு கிண்ணத்தில், 1 கப் தண்ணீர், 2 மேஜைக்கரண்டி வெண்ணிலா சாறு மற்றும் 6 முதல் 7 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும். இதை ஒரு கரண்டியால் நன்கு கலக்கிய பின் தெளிப்பானில்  ஊற்றவும். தேவைப்படும் போதெல்லாம் தெளிக்கவும்.

வெண்ணிலா சாறானது நறுமண எண்ணெய் தண்ணீருடன் நன்கு கலந்துவிட உதவுகிறது. இது வீட்டில் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. நறுமண எண்ணெய்களில், பல வேறுபட்ட திரவியங்களில் மிகவும் சிறந்தது என நீங்கள் கண்டறிந்ததைத் தேர்ந்தெடுக்கவும். ஆரஞ்சு அல்லது பம்ப்ளிமாஸ் போன்ற சிட்ரஸ் திரவியங்களைப் புதுமையாக்குகிறது, அதுபோல் மல்லிகை அல்லது ரோஜா போன்ற பல திரவியங்களும் நன்றாகச் செயல்படும். 

விளம்பரம்
Surf Excel Matic Liquid

2) நாணல் விரவிகளைப் பயன்படுத்தவும்

நாணல் விரவிகள் அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ளன, அதை உருவாக்குவதும் எளிதானது. இந்த இயற்கையான அறை சுத்திகரிப்புக்கு, ஒரு ஜாடி, மூங்கில் குச்சிகள், பேபி எண்ணெய், நறுமண எண்ணெய்கள், மற்றும் அலங்காரத்திற்கான ரிப்பன்கள் அல்லது பசைகள் (விருப்பத்திற்கேற்ப) போன்றவை உங்களுக்குத் தேவைப்படும். ஜாடியினுள் 3 முதல் 4 துளிகள் ஒன்று அல்லது பல நறுமண எண்ணெய்களின் கலவையை ஊற்ற வேண்டும். அதில் 2 மேஜைக்கரண்டி பேபி எண்ணெய்யைச் சேர்க்கவும். பின்னர், மூங்கில் குச்சிகளை அதில் சேர்க்கவும். இவைகளில், கரைசல் அந்த குச்சியின் வழியாகக் கடந்து சென்று நறுமணத்தைப் பரப்ப உதவுகின்ற சிறிய சேனல்கள் காணப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த குச்சிகள் உங்கள் ஜாடியின் உயரத்தை விட நீண்டு உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஜாடியையும் அலங்கரிக்கலாம்.     

3) இளஞ்சூடான பானைகளைப் பயன்படுத்தவும்

ஒரு பானையில் 4 கப் தண்ணீரை நிரப்பி கொதிக்க வைக்கவும். மலர்களின் நறுமணத்திற்கு, நீங்கள் ஒரு கைப்பிடி அளவு லேவண்டார் இலைகள், பாதி மாதுளம்பழம், சில உலர்த்தப்பட்ட இலைகள், மற்றும் அத்தி ஆகியவற்றைச் சேர்க்கவும். காரமான நறுமணத்திற்கு, 2 இலவங்கப்பட்டைகள், ஒரு கைப்பிடி அன்னாசிப் பூ மற்றும் கிராம்புகளைச் சேர்க்கவும். புத்துணர்ச்சியான நறுமணத்திற்கு, நீங்கள் சில எலுமிச்சை பழ துண்டுகள், ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை வைத்திருக்கும் காலத்தைச் சார்ந்து நீங்கள் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம். எலுமிச்சை, புதினா மற்றும் ரோஸ்மெரி ஆகியவை கோடைக்காலத்திற்குச் சிறந்தது, அதுபோல ஆரஞ்சு மற்றும் இலவங்கப்பட்டையின் சிறந்த நறுமணம் குளிர்காலத்தில் உங்கள் வீட்டைச் சௌகரியமாக உணரவைக்கும்!     

நீங்கள் சேர்க்க விரும்பிய நறுமணத்தை தேர்ந்தெடுத்த பின், அதனைத் தண்ணீர் நிரம்பிய கொள்கலனில் சேர்க்கவும். இதைக் குறைவான தீயில் வைத்துச் சூடுபடுத்தவும். சூடு ஆறியதும் இந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த நறுமண கிண்ணத்தை எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் அறைக்கு நல்ல நறுமணத்தைத் தரும். நீங்கள் வெவ்வேறு அறைகளுக்காக பல பானைகளை உருவாக்கி ஒவ்வொரு இடத்துக்கும் வெவ்வேறு நறுமணத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் சென்று உங்கள் வீட்டில் தெய்வீக மணம் கமழச் செய்யுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது