
சுத்தமான குடிநீர் உங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். எனவே சரியான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். வீட்டிற்கான சரியான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் கீழே உள்ளன. இந்த கட்டுரையில் சரியான ஒன்றை வாங்குவதற்கான முடிவை எடுக்க உதவ நாங்கள் ஒரு சில குறிப்புகளை பட்டியலிட்டுள்ளோம். உங்களை வரவேற்கிறோம்!
நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வாங்குவதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
Step 1: நீர் தரத்தை சரிபார்க்கவும்
உங்கள் இல்லத்தின் நீர் தரம், வினியோக மூலம், பொதுவான அசுத்தங்கள், போன்றவற்றை நன்கு ஆராய வேண்டியது அவசியமானதாகும். மொத்தக்கரைந்த திடப் பொருட்கள்(டிடிஎஸ்) அதிக அளவில் உள்ள தண்ணீருக்கு மாற்று ஆஸ்மாசிஸ் (ஆர்ஓ) அடிப்படையிலான சுத்திகரிப்பு ஒரு சிறந்த தேர்வாகும். தண்ணீரில் குறைந்த அளவு டிடிஎஸ் இருந்தால் நீங்கள் புற ஊதா / (யுஎஃப்) அல்ட்ரா பில்ட்ரேஷன் அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பை தேர்வு செய்யலாம். இருப்பினும் ஆர்ஓ+ யுவி+ யுஎஃப் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்புகள் உள்ளன. அவை அனைத்து அசுத்தங்களையும் நீக்கி, சு த்தமான குடிநீரை உறுதிசெய்கின்றன.
Step 2: சேமிப்புத்திறனை சரிபார்க்கவும்
உங்கள் குடும்பத்தின் அளவு மற்றும் நீர் நுகர்வு முறையைப் பொறுத்து, போதுமான தண்ணீரை சேமிக்கும் ஒரு சுத்திகரிப்பு இயந்திரத்தை தேர்வுசெய்க. மின் தடை ஏற்பட்டாலும் கூட உங்கள் முழு குடும்பத்திற்கும் ஏராளமான குடிநீர் சேமிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.

Step 3: சிக்கனத்திறனை கணக்கிடுங்கள்
உங்கள் நீர் சுத்திகரிப்பு வடிகட்டியை அவ்வப்போது மாற்ற வேண்டும். அதை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்ற செலவைக் கணக்கிட வேண்டும். மாற்றுவதற்கான தேவை மற்றும் செலவு ,சுத்திகரிப்பு இயந்திரத்தின் மாதிரியைப் பொறுத்தது.
சரியான பகுப்பாய்வு மூலம் உங்கள் வீட்டிற்கு சரியான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை எளிதில் தேர்ந்தெடுக்கலாம். சுத்தமான குடிநீர், குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, கவனமாக தேர்வு செய்யவும். இந்த குறிப்புகளை பின்பற்றி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பான குடிநீரை உபயோகிப்பதை உறுதிசெய்யுங்கள்!