
வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே உங்கள் வாஷிங் மெஷின் குலுங்குவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பொதுவாக ரின்ஸ்-ல் இருந்து ஸ்பின்னுக்கு இந்த வாஷிங் சுழற்சி மாறும் போது இது ஏற்படுகிறது. ஆனால் இது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வாஷிங் மெஷின் அதிக அளவு குலுங்கினால் அதற்கு காரணம் அது சமதளமான ப ரப்பில் இல்லை என்பதே. நீங்கள் நான்கு எளிய வழிகளில் இந்த பிரச்சனையை தீர்த்து விடலாம் மற்றும் உங்கள் வாஷிங் மெஷினையும் நன்கு கையாள முடியும்.
செயல் 1:சுவிட்சை ஆஃப் செய்யுங்கள்
நீங்கள் மெஷினை ஸ்டார்ட் செய்யும் முன்பு சுவிட்ச் ஆஃப் ஆக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். வாஷிங் மெஷின் குலுங்குவதற்கு காரணம் மெஷினில் முறையற்ற சமநிலையில் துணிகள் போடப்பட்டு இருக்கலாம் அல்லது அதோடு தரையில் நிலையாக வைக்கப்படாத காரணத்தினாலும் மெஷின் இவ்வாறு குலுங்கலாம்.
செயல் 2 : பிரச்சினையை சரிபாருங்கள்
வாஷிங் மெஷினின் உட்புறத்தில் இந்தப் பிரச்சினை இருந்தால் கனமான ஆடைகள் சிலவற்றை எடுத்து விடுங்கள் அல்லது பேலன்ஸ் சரியாகும் வரை உள்ளிருக்கும் துணிகளை இங்கும் அங்கும் மாற்றி போடுங்கள். மெஷினின் லெவலில்தான் பிரச்சினை எனில் மெஷினின் அடிப்புறத்தை அட்ஜஸ்ட் செய்ய ஒருபுறத்தை விட உயர்ந்து இருக்கும் மற்றொன்றை சரி செய்யுங்கள். இதனால் மெஷின் ஒரே உயரத்தில் அல்லது லெவலில் இருக்கும் மற்றும் மெஷினும் நிலையாக இருக்கும்.

செயல் 3: பிரச்சினையை சரி செய்யுங்கள்
ஸ்க்ரூக்கள் உடைந்திருந்தால் அல்லது சேதம் ஆகியிருந்தால் அவற்றை உடனடியாக மாற்றி விடுங்கள்/ அதே நேரத்தில் ஒரு இடைவெளியை சரி செய்ய நீங்கள் அதற்கு ஆதரவாக சில மரத்துண்டுகள் அல்லது அட்டைத் துண்டுகள் வைக்கலாம். கிட்டத்தட்ட எந்த ஒரு ஆதரவான பொருளையும் பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட பேலன்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்ய நீங்கள் அட்ஜஸ்ட் செய்யும் பொருளை ஒரு சில முறைகள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
செயல் 4: மெஷினை ரீஸ்டார்ட் செய்யுங்கள்
உங்கள் மெஷினை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
கவலையில்லை! இது மிகவும் சுலபமே!
முக்கிய நடவடிக்கை:
வாஷிங் மெஷினில் உங்கள் ஆடைகளை லோடிங் செய்யும்போது, லெவலிங் சீராக இருப்பதை உறுதி செய்ய அவற்றை சீராக லோடு செய்யுங்கள். இதனால் மெஷின் குலுங்கும் பிரச்சினையை தவிர்க்கலாம் மற்றும் உங்கள் வாஷிங் மெஷினும் நீண்ட காலம் நல்ல நிலையில் உழைக்கும்.