
டாப் லோடிங் வாஷிங் மெஷின்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அதை பயன்படுத்துவது சுலபம், ஆனாலும் நீங்கள் வாஷிங் மெஷினை பராமரிப்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். டாப் லோடிங் வாஷிங் மெஷினை சுத்தம் செய்வது எளிது. நீங்கள் பின்பற்றுவதற்காக நாங்கள் படிப்படியான வழிமுறைகளை கொடுத்துள்ளோம்.
ஸ்டெப் 1: சுழல விடவும்.
மெஷினை காலியாக சுழலவிட்டு மெஷினில் தங்கி இருக்கும் டிடெர்ஜென்ட் துகள்களை நீக்கவும். துணி துவைக்க பயன்படுத்தும்போது நீங்கள் லிக்விட் டிடெர்ஜென்டை அதில பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஏனென்றால் இது தண்ணீரில் கரைந்து கசடுகளை விட்டுச் செல்வதில்லை.
ஸ்டெப் 2: வினிகர் மற்றும் சமையல் சோடா சேர்க்கவும்.
அடுத்த முறை வெந்நீருடன் ஓடவிடவும். மெஷினில் தண்ணீர் நிரம்பிய உடன் அதில் 3 கப் ஒயிட் வினிகரும், அரை கப் பேக்கிங் சோடாவும் சேர்க்கவும்.

ஸ்டெப் 3: அது சற்று நேரம் அப்படியே இருக்கட்டும்
இந்த கலவை 30 நொடிகளுக்கு அப்படியே இருக்கட்டும். பிறகு மெஷினை ஆஃப் செய்துவிடவும். பிறகு மெஷினில் அதை 45 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு வைகக்வும்.
ஸ்டெப் 4: மெஷினை மீண்டும் இயக்கவும்.
மீண்டும் சுழலவிட்டு முடிக்கவும். சில மெஷின்களில் தண்ணீரை வடிக்கும்போது சுழலவிடும் செட்டிங்கு களை மாற்றுவதற்கு உங்களை அனுமதிக்கும்.
ஸ்டெப் 5: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும்.
உங்கள் மெஷினை ஆஃப் செய்யவும். 2 கப் வெந்நீரில் 2 கப் வினிகர் விட்டு கரைசலை தயாரிக்கவும். ஒரு சுத்தமான துணியை எடுத்து அந்த கலவையில் நனைத்து எடுத்து உங்கள் வாஷிங் மெஷினின் உள் பாகங்க்ளை துடைக்கவும். இதில் டப்பின் விளிம்பும் அடங்கும்.
முக்கியமான ஸ்டெப்
ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் போன்ற தரமான சலவை டிடெர்ஜென்டை பயன்படுத்தவும். இது உங்கள் வாஷிங் மெஷினிற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் மெஷின் நீண்ட நாள் வரும் மற்றும் சிறப்பாக செயல்படும்.