உங்கள் வீட்டிற்கு எந்த வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? இதோ டாப் மற்றும் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்களின் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கே காணலாம்.

ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின் மற்றும் டாப்-லோடிங் வாஷிங் மெஷின் ஆகியவற்றில், எதை வாங்க வேண்டும் என்பதில் குழப்பமாக உள்ளதா? இங்கே கொடுத்துள்ள குறிப்புகளை பின்பற்றி சரியான முடிவை எடுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Confused About Which Washing Machine to Buy? Here’s the Difference Between Top and Front-loaders
விளம்பரம்
Surf Excel Matic Liquid

இரண்டு விதமான வாஷிங் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றது 1 ஃப்ரண்ட் லோடிங் மற்றும் இன்னொன்று டாப் லோடிங் இந்த இரண்டு வகையிலுமே அதற்கேற்ப நன்மைகள் உள்ளன. இது உங்களுக்கு குழப்பத்தை தரலாம்! எனவே நாங்கள் தரும் ஆலோசனைகளை பின்பற்றி சரியான முடிவை எடுக்கவும்.

1) கொள்திறன்

ஃப்ரன்ட்- லோடிங் வாஷிங் மெஷின்கள், டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களை விட அதிக கொள்திறன் கொண்டது. ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின்களில் நீங்கள் சுலபமாக அதிக அளவு துணிகளை ஒரே சலவையில் போடலாம். இது உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும்! அதுமட்டுமின்றி ஒரு சிறந்த சோப்புத்தூளை உபயோகப்படுத்துவது உங்கள் சலவையை மேலும் சுலபமானதாக மாற்றும். இதற்கு ஸர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் போன்ற சோப்பு திரவத்தை உபயோகிக்க நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். ஏனென்றால் திரவ சோப்பாக இருப்பதினால் இது தண்ணீரில் நன்றாக கரையும் அதுமட்டுமின்றி மற்ற சோப்பு தூள்களை போலல்லாமல் இது எந்த ஒரு பொடி போன்ற மிச்சத்தையும், துவைத்த பிறகு, துணிகளின் மேல் படிய விடாது மற்றும் இது மெஷின்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது.

2) மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவை

ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மிஷின்கள், டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களை விட மிகக் குறைவான தண்ணீரையே உபயோகிக்கும். டாப்-லோடிங் வாஷிங் மெஷின்கள், 40- 50 லிட்டர் தண்ணீர் வரை ஒரு சுழற்சிக்கு பயன்படுத்துகின்றன. ஆனால் ஃப்ரன்ட் -லோடிங் வாஷிங் மெஷின்கள் இதில் பாதியே பயன்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின்கள், டாப் லோடிங் வாஷிங் மெஷின்கள் செலவழிப்பதில் ⅓ பங்கு மின்சாரத்தையே செலவழிக்கின்றன. இதனால் மின்சார கட்டணம் உங்களுக்கு குறைவாகவே வரும்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) ஒலி அளவு

பெரும்பாலான ஃப்ரன்ட்-லோடிங் வாஷிங் மெஷின்கள், வைப்ரேஷன்- கண்ட்ரோல் அமைப்பை கொண்டு இருக்கின்றன. இது சுழற்சியின் போது அதிக சத்தம் வராமல் தடுக்கும். ஆனால் டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களோ சலவை சுழற்சியின் போது அதிக ஒலி எழுப்பும்.

4) விலை

தற்போதுள்ள வாஷிங் மெஷின்கள், அதிக சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால், விலை சற்று அதிகமாகவே விற்கின்றன. இருப்பினும் டாப்-லோடிங் வாஷிங் மிஷின்கள் , ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்களைவிட விலை குறைவானதாகவே விற்கின்றது.

5) வசதி

டாப் லோடிங் வாஷிங் மெஷின்களில் நீங்கள் எளிதாக சலவை சுழற்சியின் போது துணிகளை எடுக்கவும் போடவும் செய்யலாம். ஆனால் ஃப்ரன்ட்- லோடிங் வாஷிங் மெஷினில் இந்த வசதி இல்லை. அதுமட்டுமின்றி உங்களுக்கு முதுகெலும்பு பிரச்சனைகள் இருந்தால் டாப்-லோடிங்  மெஷின்கள் ஒரு சிறந்த தேர்வாகும் ஏனென்றால் ஃப்ரன்ட் -லோடிங் வாஷிங் மெஷின்களை உபயோகிக்கும் பொழுது நீங்கள் குனிந்து துணிகளை எடுக்கவும் போடவும் செய்ய வேண்டும்.

இந்த அற்புதமான கையேடு, உங்கள் தேவைக்கு ஏற்றவாறு, நீங்கள் ஒரு சிறந்த வாஷிங்மெஷினை தேர்வு செய்ய உதவும் என்று நம்புகிறோம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது