
வாஷிங் மெஷினில் நிலவும் வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த சுற்றுச்சூழல் எலிகளுக்கு மிக பிடிக்கும். இதனால், மெஷின் உள்ளே நுழையும் எலிகள், அங்கேயே/வெளியே வந்தும் இறந்துவிட நேரிடும். இதனால், துர்நாற்றம், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றி, வாஷிங் மெஷின ் ஒயர்களை எலி கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஓட்டைகள் இருந்தால், அவற்றை ஒயிட் சிமெண்ட் போட்டு மூடிவிடுங்கள். நீண்ட கால அடிப்படையில், எலியை தடுக்க, இது சிறந்த யோசனையாகும்.
1) இடைவிடாது அரிக்கும் சத்தம்
எலிகள் பெரும்பாலும் ஜன்னல் வழியாக வருபவை. ரொம்ப அரிதாகவே, திறந்த கதவு வழியாக வர வாய்ப்புள்ளது. அதனால், எப்போதும் கொறித்துண்ணிகள் மற்றும் துளையிடும் பூச்சிகள் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
2) ஓட்டைகளை அடைத்துவிடுங்கள்
அரை இன்ச் அகலம் உள்ள ஓட்டை வழியாகக் கூட எலிகள், வீட்டின் உள்ளே வந்துவிடும். அந்த ஓட்டைகளை சரியாகக் கண்டுபிடித்து, அவற்றின் மீது லேட்டக்ஸ் நுரையை பூசுங்கள் அல்லது கம்பி வலை வைத்து ஓட்டையை அடைத்துவிடுங்கள்.

3) வாஷிங் மெஷினை சுற்றியுள்ள பகுதியை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
வாஷிங் மெஷினை சுற்றி, உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது எலிகளை கை நீட்டி வரவேற்பது போலாகிவிடும். எனவே, வாஷிங் மெஷினை சுற்றிய பகுதியில் உணவுப்பொருட்கள் எதுவும் சிதறி கிடக்காமல், எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
4) ஒயர்கள், கார்ட் மற்றும் கேபிள்களை ஒளித்து வையுங்கள்
கார்ட் கிளிப்களை பயன்படுத்தி, இவற்றை சுவர் மீது பிணைத்து வையுங்கள். அல்லது ஏதேனும் மறைப்பானில் இவற்றை பத்திரமாக வையுங்கள்.
5) வீட்டிலேயே தீர்வு உள்ளது
ஆம். பெப்பர்மின்ட் ஆயில் ஒரு நல்ல வாய்ப்பு. பஞ்சை சிறு சிறு பந்துகளாக உருட்டி, அவற்றை பெப்பர்மின்ட் ஆயிலில் நனைத்து எடுத்து, எலிகள் வந்து செல்லும் பாதையில் வைத்து விடுங்கள். சில நாட்களுக்கு ஒருமுறை, இந்த பஞ்சு உருண்டையை மாற்றிவிட்டு, பு தியதை வைக்க வேண்டும். எலிகள் அந்த பக்கமே வராது.