
செமி ஆடோமேட்டிக் மெஷின் என்பது வீட்டிற்கு நல்ல உபயோகமான சாதனம் ஆகும். நீங்கள் கையால் துவைப்பதற்கு பதிலாக வாஷிங் மெஷின் பயன்படுத்தி துவைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், செமி ஆட்டோமேட்டிக் மெஷின் வாங்கலாம். உங்கள் துணிகளை வாஷிங் மெஷின்ல் துவைத்து பராமரிக்க மிகவும் எளிதானது. இதை இயக்குவதும் சுலபம். இதோ உங்கள் செமி ஆடோமேட்டிக் வாஷிங் மெஷினை பயன்படுத்தி பராமரிப்பதற்காக சுலபமான வழி காட்டி உங்களுக்கு உதவும்.
ஸ்டெப்1 : வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு டிடெர்ஜென்ட் சேர்க்கவும்.
அழுக்கான துணிகளை மெஷினில் உள்ள ட்ரம்மில் போட்டு, ஒரு கப் டிடெர்ஜென்ட் விடவும்.
ஸ்டெப் 2: டெம்பரேச்சரை செட் செய்யவும்.
ட்ரம்மில் தண்ணீரை நிரப்பி டெம்பரேச்சரை செட் செய்யவும். எவ்வளவு தண்ணீர் நிரப்ப வேண்டும் மற்றும் அந்த அளவு தண்ணீருக்கு எவ்வளவு டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டும் என்பதை விளக்கப்புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளவும்.

ஸ்டெப் 3: துவைக்கும் சுழற்சி
பட்டனை அழுத்தி ட்ரம்மை சுழலவிடுங்கள். குறைவான துணிகளுக்கு தேவைப்படும் நேரத்தைவிட அதிக துணிகளுக்கு அதிக நேரம் சுழல விட வேண்டும்.
ஸ்டெப் 4: அலசும் சுழற்சி
துவைத்து முடித்தவுடன், அழுக்கான தண்ணீரை வடி குழாய் மூலம் வெளியேற்றம். பிறகு ட்ரம்மில் புதிய தண்ணீர் நிரப்பி அலசவும்.
ஸ்டெப் 5: உலர்த்தும் முறை
அலசும் சுழற்சிக்கு பிறகு உங்கள் துணிகள் சுத்தமாக இருக்கும். இப்போது துணிகளை உலர்த்த வேண்டும். அதற்கு துணிகளை வாஷிங் ட்ரம்மிலிருந்து எடுத்து ஸ்பின்னிங் ட்ரம்மில் போட வேண்டும். இதுதான் ஆட்டோமேட்டிக் மெஷினிற்கும் செமி ஆட்டோமேட்டிக் மெஷினிற்கும் உள்ள அடிப்படி வித்தியாசம். எவ்வளவு துணி போடுகிறீர்களோ அவ்வளவு அதிக நேரம் துவைக்க வேண்டியது அவசியம்.
ஸ்டெப் 6: துணிகளை வெளியில் எடுத்தல்
ஸ்பின் சுழற்சி செய்து முடித்தவுடன். நீங்கள் உடனே துணிகளை வெளியில் எடுத்து அதை கயிற்றில் உலர்த்த வேண்டும்.
புதிய செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை நீங்கள் வாங்கி இருந்தால் இந்த வழிகாட்டியை உடன் வைத்திருக்கவும்.
முக்கியமான ஸ்டெப்
உங்கள் வாஷிங் மெஷினை பாதுகாத்து பராமரிக்க வேண்டியதும் மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் வாஷிங் மெஷினை பயன்படுத்திய பிறகு அவற்றின் கதவுகளை திறந்து வைக்கவும். அப்போதான் உள்ளே இருக்கும் ட்ரம் காற்றில் உலரும். இதன் மூலம் உங்கள் டிரம்மின் சுவர்களில் ஈரத்தால் ஏற்படும் பூஞ்சாக்காளன்கள் உருவாகமல் தடுக்கலாம்.