முதல் முறையாக வாஷிங் மெஷின் பயன்படுத்துவோருக்கான ஒரு எளிமையான வழிகாட்டி

நீங்கள் வீட்டிற்கு வாங்கும் அனைத்து மின் சாதனங்களிலேயே மிகவும் அதிக பயன்பாடு கொண்ட சாதனங்களில் ஒன்று வாஷிங் மெஷின்தான். இதோ வாஷிங் மெஷினை பயன்படுத்துவதற்காக ஒரு விரைவு வழிகாட்டி உங்களின் சாதனத்தை பயன்படுத்துவதற்கு கற்றுக் கொடுக்கும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

An Easy Instruction Guide For First-Time Washing Machine Users
விளம்பரம்
Surf Excel Matic Liquid

நீங்கள் தற்போதுதான் வாஷிங் மெஷின் வாங்கியுள்ளீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை மிகவும் சுலபமாகப் போகிறது. நீங்கள் மிகச் சிறந்த ஒரு சாதனத்தை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளீர்கள். இது உங்கள் துணிகளை சுத்தமாக, திறமையாக துவைப்பது மட்டுமின்றி, உங்கள் நேரத்தையும் அதிகம் மிச்சப்படுத்தும். இது முக்கியமாக வைத்திருக்க வேண்டிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக உங்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும் சமையத்தில். 

இருந்தாலும் நீங்கள் முதல் முறையாக வாஷிங் மெஷின் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் ஃபிரன்ட் லோடு வாஷிங் மெஷினை அல்லது உங்கள் டாப் லோடிங் மெஷினை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அது மிகவும் சுலபம்! இதோ உங்கள் புதிய மெஷினை பயன்படுத்துவதற்கு  உதவக்கூடிய வழிகாட்டி. 

ஸ்டெப் 1: உங்கள் துணிகளை வகை பிரிக்கவும்.

உங்கள் துணிகளை கலருக்கு ஏற்றபடி பிரிக்கவும். கலர் துணிகளையும் வெள்ளை துணிகளையும் தனித்தனியாக பிரித்து துவைக்கவும். ஒரே வகையான துணிகளை ஒன்றாக மெஷினில் போடவும்.  மெஷினில் துணிகளை போட்டு அடைக்காதீர்கள். ஏனென்றால் துணிகளை அசைவதற்கு இடம் தேவைப்படுகிறது; இன்னும் துணிகள் மீதம் இருந்தால் இன்னொரு முறை மெஷினை பயன்படுத்தி துவைக்கவும். நாசூக்கான  துணிகளை துவைக்க வேண்டும் என்றால் அதை வலை பையில் போட்டு துவைக்கவும்.  

ஸ்டெப் 2: துவைப்பதற்கான சுழற்சியை தேர்வு செய்யவும்.

வெவ்வேறு வகையான துணிகளுக்கு சரியான துவைப்பதற்கான சுழற்சியை தேர்வு செய்யவும்.  உங்கள் துணிகளிலேயே அதை துவைப்பதற்கான அறிவுரை லேபிள்கள் இருக்கும். மேலும் வாஷர் மேனுவலிலும் கொடுக்கப்பட்டிருக்கும். இது உங்கள் துணிகளை சிறப்பாக சுத்தம் செய்து பாதுகாப்பதற்கு உதவும்.  

விளம்பரம்
Surf Excel Matic Liquid

ஸ்டெப் 3: டெம்பரேச்சரை செட் செய்யவும்.

தண்ணீரின் டெம்பரேச்சரை செட் செய்யவும்:  நாசூக்கான துணிகளுக்கு குளிர்ந்த தண்ணீரையும், இதர துணிகளுக்கு சூடான தண்ணீரையும் பயன்படுத்தவும். 

ஸ்டெப் 4: டிடெர்ஜென்டை சேர்க்கவும்.

மெஷினில் 1 கப் டிடெர்ஜென்ட் ஊற்றவும். அதாவது ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் போன்றவை. இவை உங்கள் மெஷினிற்காக் விஷேமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் ஃபேப்ரிக் சாஃப்ட்னரும் பயன்படுத்தினால், அது துணிகளை புத்துணர்வுடனும் நறுமணத்துடனும் வைத்திருக்கும். 

ஸ்டெப் 5: நீங்கள் வாஷ் செய்வதை தொடங்குங்கள்

நீங்கள் மெஷினில் பட்டனை அழுத்தினால் மட்டும்போது உங்கள் வாஷர் எல்லா வேலையையும் செய்துவிடும். 

வேலை முடியும்! மேலும் எப்போதும் துணியின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பார்க்கவும். அந்த துணியை வாஷிங் மெஷினில் துவைக்கலாம் என்று போட்டிருந்தால் மட்டுமே வாஷிங் மெஷினில் துவைக்கவும். இல்லை என்றால் அதை கையால் துவைக்கவும் அல்லது ட்ரை க்ளீன் செய்யவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது