வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

உங்கள் வீட்டிற்கு வாட்டர் ப்யூரிஃபையர் வாங்க திட்டமிடுகிறீர்களா? பலவிதமான தேர்வுகளைப் பார்த்து குழம்பாதீர்கள். எவ்வாறு சுலபமாக தேர்நெடுக்கலாம் என்பதை அறிய மேலே படியுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Things You Should Know Before Buying a Water Purifier
விளம்பரம்
Surf Excel Matic Liquid

பலவிதமான தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கடைகளில் பல விதமான வாட்டர் ஃப்யூரிஃபையர்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட பலன் இருக்கிறது.

நீங்கள் சரியான வாட்டர் ப்யூரிஃபையர் வாங்குவதற்கான  குறிப்புகள்

1) உங்களுக்கு எந்த வகையான வாட்டர் ப்யூரிஃபையர் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கும் முன்பு வாஷரில் இருக்கும் மாசு பொருள்களை கருத்தில்கொள்ள வேண்டியது முக்கியம். தண்ணீரில் அதிக அளவு கரையும் திடப்பொருள்கள் (TDS)  இருந்தால், அதற்கு  RO (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) அடிப்படையிலான வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கலாம். வாட்டர் ப்யூரிஃபையரில் குறைந்த அளவு TDS இருந்தால்  நீங்கள் UV (அல்ட்ரா வயலட்) அல்லது UF (அல்ட்ரா ஃபில்ட்ரேஷன்) அடிப்படையிலான வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கலாம். இருந்தாலும் RO+UV+UF மூன்று தொழில்நுட்பங்களுமே  இருக்கும் வாட்டர் ப்யூரிஃபையர்கள் அனைத்து அசுத்தங்களையும் நீக்கி ஆரோக்கியமான தண்ணீரைத் தரும். என்வே   நீங்கள் வாங்கும் வாட்டர்ப்யூரிஃபையரில் இந்த அம்சங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து வாங்கவும் 

இன்னும் சில வகையான ப்யூரிஃபையர்கள் உள்ளன - அதாவது நான்-எலெக்ட்ரிகல் ப்யூரிஃபையர் - இது குறைவான TDS உள்ள தண்ணீரை புவிஈர்ப்பு சக்தியை பயன்படுத்தி மற்றும் பல நிலை ஃபில்டரிங் முறைகளின் மூலம் வடி கட்டுகிறது. எலெக்ட்ரிக் ப்யூரிஃபையர்  RO விற்காக தண்ணீரை ஃபில்டரில் அழுத்தி  மெம்பரேன் வழியாக அனுப்பி UV கதிர்வீச்சு மூலம் மைக்ரோப்ஸை கொல்ல மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

இந்த ப்யூரிஃபையர்கள் அதிக அளவு TDS இருக்கும் தண்ணீரை சுத்திகரிக்க ஏற்றவை.

2) தண்ணீர் வைக்கும் கொள்ளளவை பார்க்கவும்

உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து போதுமான தண்ணீரை சேமித்து வைக்கும் வாட்டர் ப்யூரிஃபையரை வாங்கவும். இதன் மூலம் மின்சாரம் தடைபட்டால் உங்கள் குடும்பத்திற்கு போதுமான தண்ணீர் இருக்கும்.  நான்-எலெக்ட்ரிகல் ப்யூரிஃபையர்கள் 25 லிட்டர் வரை  வடிகட்டிய தண்ணீரை சேமித்து வைக்கும். ஆனால் மின்சார ப்யூரிஃபையர்களில் 12 லிட்டர் கொள்ளளவு டேங்க் இருக்கும். மேலும் RO ப்யூரிஃபையர்கள் 1லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க  3 லிட்டர் வீண் தண்ணீரை உற்பத்தி செய்யும் என்பதை கவனத்தில் கொள்க.

3) பட்ஜெட்டை ஒதுக்கவும்.

உங்கள் வீட்டில் வரும் தண்ணீரிலுள்ள TDS அளவை பொறுத்து பட்ஜெட்டை ஒதுக்கவும்.  நான்-எலெக்ட்ரிக் ப்யூரிஃபையரை சுமார் ₹ 5000 விலையில் வாங்கலாம். மின்சார  ப்யூரிஃபையர்களின் விலை ₹ 6000 முதல் ₹ 20000 வரை இருக்கும். இது நீங்கள் வாங்கும் ப்யூரிஃபையரில் இருக்குRO, UV அல்லது UF அம்சங்களைப் பொறுத்தது.

வாட்டர் ஃப்யூரிஃபையர்கள் என வரும் போது உங்களின் தேர்வுகள் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது முக்கியமானது.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது