
தொடர்ந்து பயன்படுத்துவதால், உங்கள் வாஷிங்மெஷின் பெரும்பாலும் ஈரமாக இருக்கும். எனவே அதை சுத்தம் செய்யாவிட்டால், கிருமிகள் மற்றும் பூஞ்சாணம் குவியும் இடமாக அது மாறி நாற்றம் ஏற்படுத்தும். அதோடு உங்கள் துணிகளும் சுத்தமாக சலவை செய்யப்பட இயலாது. அழுக்கு போகாமல் நெடி அடிக்கும். நீங்கள் உங்கள் வாஷிங் மெஷினில் இத ்தகைய நாற்றத்தை விரட்டுவதற்கான முக்கிய சில குறிப்புகளை கீழே நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். உங்கள் மெஷினை புத்தம்புதிது போல் வைத்திருக்க வழி இதோ.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் வாஷிங் மெஷினில் இருந்து தேவையற்ற நாற்றங்கள், நெடிகளை எளிதாக அகற்ற இந்த எளிய குறிப்புக்களை பயன்படுத்தினாலே போதும்.
உங்கள் வாஷிங் மெஷினில் துணிகள் போட்டு மெஷின் ஓடிக் கொண்டிருக்கும் போது ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் பயன்படுத்துங்கள். இது உங்கள் துணிகளுக்கு மற்றும் வாஷருக்கு ஒரு புத்துணர்வு நறுமணத்தை அளிக்கும்.
1) பாடி அமைப்பை சுத்தம் செய்யுங்கள்
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வினிகர் தலா ஒரு கப் கலந்து கொள்ளுங்கள். இந்த கரைசலில் ஒரு சுத்தமான துணியை முக்கி உங்கள் வாஷிங் மெஷின் முழுவதையும் நன்கு துடையுங்கள். மேலும் நீங்கள் கேஸ்கட்டை சுத்தம் செய்யவும் இதே கரைசலைப் பயன்படுத்தலாம். தேவையெனில் மீண்டும் ஒரு முறை இதை செய்யுங்கள்.

2) சோப் டிஸ்பென்ஸர்களை சுத்தம் செய்யுங்கள்
2 கப்கள் பேக்கிங் சோடா, 2கப் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் 2 தேக்கரண்டி உங்களுக்கு மிகவும் பிரியமான டிஸ்வாஷ் லிக்விட் என அனைத்தையும் சேர்த்து ஒரு கரைசலாக்குங்கள். சாதாரண தண்ணீரில் சோப் டிஸ்பென்சரை அலசுங்கள். அதன் பின் இதமாக இந்தக் கரைசலால் தேயுங்கள். மீண்டும் சாதாரண தண்ணீரால் அலசுங்கள். ஒரு சுத்தமான மைக்ரோஃபைபர் துணியால் ஒற்றி உலர விடுங்கள். தண்ணீரால் அலசும்போது மூலைகளில் கவனமாக சுத்தப்படுத்துங்கள், ஏனெனில் அது மிக அதிகமான பூஞ்சாணம் குவியும் பகுதி. சுத்தப்படுத்த இயலாத கடினமான பகுதிகள் ஏதும் இருந்தால் தேய்க்க, பழைய சுத்தமான டூத் பிரஷ் பயன்படுத்துங்கள்.
3) ஹோம்மேட் கிளீனிங் ஏஜெண்ட்
ஒரு கப் வெந்நீர், ஓரு கப் பேக்கிங் சோடா மற்றும் இரண்டு கப்கள் வினிகர் மூன்றையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றுங்கள். உங்கள் வாஷரை தண்ணீரால் நிரப்பி இந்த கரைசலை டிரம்மில் நேரடியாக ஊற்றி, நீண்ட நேர வாஷ் முறையை வெந்நீருடன் ஓட விடுங்கள். இந்தக் கரைசல் உங்கள் வாஷிங் மெஷினில் தங்கியுள்ள அழுக்கு, கழிவுகளை நீக்க உதவும் மற்றும் கிருமிகளை கொல்வதால் டியோடைரைஸ் செய்யும்.
4) சரியான காற்றோட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் வாஷிங் மெஷினில் உள்ள டிரம்மை தொடர்ந்து பயன்படுத்துவதால் அது ஈரமாகவே இருக்கும். எனவே, காற்றோட்டத்தை ஏற்படுத்த லோடுகளுக்கு இடையே உங்கள் மெஷின் கதவைத் திறந்து வையுங்கள். சுதந்திரமாக சுற்றி வரம் காற்று அங்கே பூஞ்சைகள் குவியாமல் தடுத்து விடும்.
எனவே, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்பும் ஒரு சிறித ளவு பராமரிப்பு உங்கள் வாஷிங் மெஷினில் நாற்றங்கள் அனைத்தையும் விரட்டி விடும்.
உங்கள் வாஷிங் மெஷினில் எப்போதுமே புத்துணர்வு மணம் வீச இந்த எளிய சுலபமான வழிகளை பயன்படுத்துங்கள்.