
உங்கள் அறையில் விருந்தினர்கள் இருக்கும் போது அல்லது நீங்கள் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் அறையை சிறந்த வாசனையோடு எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதை அறிய விரும்புவீர்கள். நீங்கள் இதை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்திப் பெறுவதற்கான அற்புத குறிப்புகளை நாங்கள் வைத்துள்ளோம்.
1) காபி கொட்டை நறுமணம்
புதிதாக வடிகட்டப்பட்ட காபியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமானால், நிச்சயமாக இந்த குறிப்பு உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் அறையின் வாசனை ஆர்டிசனல் காபியகத்தைப் போல் உருவாக்க, ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் ¾ பாக அளவு காபி கொட்டையை நிரப்பி, அதன் மேல் ஒரு மூடி அல்லது தட்டை போட்டு மூடவும். அதன் பின் இதன் மேல் சிறு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவும். எரியும் மெழுகுவர்த்தி காபி கொட்டைகளைச் சூடாக்கி, சூடான காபியின் நறுமணத்தை உங்கள் அறை முழுவதும் பரப்பும்!
2) ஆரஞ்சு பழத் தோல் மெழுகுவர்த்தி
ஆரஞ்சு பழத்தைப் பாதியாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கரண்டியைப் பயன்படுத்தி சதைப் பகுதியை சுரண்டி எடுத்து விடவும், இதில் தோல் மீதமிருக்கும். ஆரஞ்சு பழத்தின் சதைப் பகுதியை அகற்றும் போது, வெள்ளை தண்டு பகுதி(மெழ ுகுவர்த்தி திரியை ஒத்திருக்கின்ற பகுதி) மீதமிருக்க வேண்டும். இந்த பகுதி தோலுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், அல்லது நீங்கள் சந்தையிலிருந்து திரிகளை வாங்கியும் பயன்படுத்தலாம். பாதியாக இருக்கும் ஒவ்வொரு ஆரஞ்சு தோலிலும் ஆலிவ் எண்ணெய்யை, தோலின் விளிம்பிலிருந்து ஒரு செ.மீ இடைவெளி இருக்குமாறு நிரப்பவும். இப்போது ஆரஞ்சு நறுமணம் நிரம்பிய விளக்கை நீங்களே உருவாக்கியுள்ளீர்கள்!

3) வெண்ணிலா சாறு மற்றும் நறுமண எண்ணெய் சுத்திகரிப்பி
வீட்டில் சுயமாகத் தயாரிக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பீயை உருவாக்க, ஒரு கிளாசில் ¾ கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் 1 மேஜைக்கரண்டி வெண்ணிலா சாற்றைச் சேர்க்கவும், அதனுடன் 6 முதல் 7 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யைச் சேர்க்கவும். இந்த கலவையைத் தெளிப்பான் பாட்டிலில் ஊற்றி, தேவை ஏற்படும் போதெல்லாம் உங்கள் அறையில் தெளிக்கவும். இது உங்கள் வீட ்டில் சிறந்த நறுமணத்தை உண்டாக்கும். புதினா எண்ணெய்யானது உங்கள் வீட்டில் நறுமணத்தை உண்டாக்குவதற்கான சிறந்த நறுமண எண்ணெய்களில் ஒன்றாகும்.
4) வினிகர் மற்றும் நறுமண எண்ணெய் சுத்திகரிப்பி
இது வினிகரை பயன்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். ஒரு கிண்ணத்தில் ¾ பாக அளவு சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் 2 தேக்கரண்டி வினிகரை சேர்க்கவும், அதனோடு 6 முதல் 7 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாடைகளை போக்கி புதிய வாசனையை உருவாக்குவதற்கும், வரவேற்பை நல்கவும் இதை உங்கள் அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும்.
இந்த எளிய குறிப்புகளை கொண்டு, சோஃபாவில் அமர்ந்து வசதியாகப் பேசுவதற்காக உங்கள் வீடு தேடி நண்பர்கள் வருவார்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.