உங்கள் வாஷிங் மெஷினில் இருந்து தண்ணீரை வெளியேற்ற எளிய வழிகள்!

உங்கள் வாஷிங் மெஷின் அடைத்துக் கொள்ளாமல் தண்ணீரை சரியான முறையில் வெளியேற்ற இதோ வழிகாட்டி. இந்த முறையானது உங்கள் வாஷிங் மெஷினை பராமரிப்பதற்கும் கூட உதவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Buying a Washing Machine? Here’s What You Should Know
விளம்பரம்
Surf Excel Matic Liquid

உங்கள் வாஷிங் மெஷினை சரியான முறையில் கையாள்வது முக்கியம். உங்கள் வாஷிங் மெஷினில் இருந்து தண்ணீர் சரிவர வெளியேறாவிட்டால் ஏதேனும் சில பாகங்கள் இயங்குவது நிற்கலாம் அல்லது கழிவுநீர் வெளியேறும் பைப்பில் ஏதேனும் அடைத்திருக்கலாம். கவலைப்படாதீர்கள், இந்த பிரச்சினையை தீர்க்க உங்களுக்கு நாங்கள் சில வழிகளை இங்கே அளிக்கிறோம்.

உங்கள் வாஷிங் மெஷினில் உள்ள பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டவுடன் அது நன்றாக இயங்கும். உங்கள் வாஷிங் மெஷினில் இருந்து கழிவு தண்ணீர் வெளியேறாமல் இருப்பதை நீங்கள் கவனித்தால் நீங்களே சரிசெய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இதோ. இது உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும் அதே வேளையில் உங்கள் மெஷின் மிக விரைவில் பயன்படுத்த தயாராகி விடும்.

உங்கள் வாஷிங் மெஷினில் இருந்து சுலபமாக தண்ணீரை வெளியேற்ற இந்த எளிய வழிகளை பயன்படுத்திப் பாருங்கள். 

செயல் 1: பிளக்கை சரிபாருங்கள்

வாஷிங் மெஷின் சரியான முறையில் பிளக் செய்யப்பட்டுள்ளதா, அதன் வயர் உலர்வாக உள்ளதா என்று பாருங்கள். சேதத்தின் அறிகுறிகள் எதையேனும் பார்த்தால் ஏதேனும் பாகங்கள் மாற்றப்பட வேண்டி இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

செயல் 2: பைப்பை செக் செய்யுங்கள்

பைப்  அகற்றப்படக் கூடியது என்பதால் நீங்கள் எங்கு அடைத்திருக்கிறது என்று சுலபமாக கண்டறிய முடியும். சிறு பொருட்கள் கூட தண்ணீர் வெளியேறும் இடத்தில் அடைத்துக் கொள்ளலாம் மற்றும் தண்ணீர் வெளியேறாமல் நிறுத்தி விடலாம். எனவே, ஏதேனும் உள்ளே அடைத்துக் கொண்டுள்ளதா என்று பார்த்து  அகற்றி விடுங்கள்.

செயல் 3: பைப்பை சுத்தம் செய்யுங்கள்

பைப்பை சுத்தம் செய்து மீண்டும் பொருத்துங்கள். வழக்கம் போல வாஷரை ஓட விடுங்கள்.

மேலும் உங்கள் ஆடைகளில் பாக்கெட்டுகளில் நாணயங்கள்  ஏதேனும் உள்ளதா என்று எப்போதுமே நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் மெஷினை சேதப்படுத்துவதில் மிக முக்கியமானவை இந்த நாணயங்கள்தான். இந்த எளிய வழிகள் உங்கள் வாஷர் பைப்பில் அடைப்பை சுலபமாக அகற்ற உங்களுக்கு உதவும்!

முக்கிய நடவடிக்கை:

உங்கள் பைப்பில் அடைப்பு ஏற்படுத்தும் மற்றொரு காரணம் டிடர்ஜெண்ட் கறைகள். இதை தடுக்க நாங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விட் போன்ற லிக்விட் டிடர்ஜென்டை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். வாஷிங் மெஷின்களுக்காகவே இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தண்ணீரில் முழுமையாக கரைந்து விடுவதால் கறை எதையும் விட்டுச் செல்வதில்லை.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது