
எலிகள் எப்படியோ உங்கள் வாஷிங் மெஷினிற்குள் போயி, இன்சுலேஷனை கடித்து சரியாக்க முடியாத சேதத்தை விரைவில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவே உங்கள் வாஷிங் மெஷின் பராமரிப்புப் பட்டியலில் முக்கியமான விஷயம் எலிகளால் உங்கள் மெஷின் ஒயர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்பதுதான். இப்பொழுதே இந்த குறிப்புகளை பின்பற்றி எலிகளை தடுத்திடுங்கள்.
நீடித்த தீர்விற்கு, துவாரங்களை வெள்ளை சிமெண்டால் அடைக்கவும். இதன் மூலம் எலிகள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கலாம்.
1) ஒலிகளை கேட்டு எச்சரிக்கையாக இருங்கள்.
திறந்திருக்கும் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக எலிகள் உங்கள் வீட்டிற்குள் நுழைகின்றன. முடிந்த வரை இந்த வழிகளை அடைத்து வைத்திருங்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஒரு சிறிய துவாரம் இருந்தாலும் எலிகள் அதன் வழியாக உள்ளே புகுந்துவிடும். இவ்வாறான துவாரங்கள் இருந்தால் அதில் லேட்டெக்ஸ் பசையை ஸ்ப்ரே செய்து வைத்திருங்கள் அல்லது அதை இரும்பு வூல் போட்டு அடைத்து வையுங்கள்.
2) உங்கள் மெஷினின் அருகிலுள்ள இடத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
உங்கள் வாஷிங் மெஷினிற்கு அருகில் உணவு துண்டுக ள் கிடந்தால் அது எலிகளை ஈர்க்கும். எனவே வாஷிங் மெஷினிற்கு பக்கத்திலுள்ள இடங்களை நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.

3) ஒயர்களை மற்றும் கார்டுகளையும் முறையாக வைத்திருங்கள்.
கார்டு க்ளிக்குகளை பயப்படுத்தி உங்கள் மெஷினின் ஒயர்களை சுவற்றில் ஒழுங்காக பொருத்தி வைக்கவும். இவ்வாறு செய்தால் அவற்றை எலிகளிடமிருந்து விலக்கி வைக்க முடியும்.
4) அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தவும்
சில பஞ்சு உருண்டைகளை எடுத்து அதை பெப்பர்மின்ட் எண்ணெயில் நனைத்து அவற்றை வாஷிங் மெஷின் போன்ற மின் சாதனங்களுக்கு அருகில் வைக்கவும். அந்த வாசனை எலிகளையும் சுண்டெலிகளையும் விரட்டும். அவற்றின் வாசனை மங்கி விட்டால் புதிய பஞ்சு உருண்டையை அந்த எண்ணெயில் நனைத்து திரும்ப வைக்கவும்.
ஈரமான மற்றும் வெப்பமான இடங்களில் எலிகள் வரும். அவை உங்கள் வாஷிங் மெஷின் ஒயரை மட்டும் கடிப்பதில்லை, அவை வாஷிங் மெஷின்ன் டிரம்மிற்குள்ளும் சிக்கிக் கொள்ளும்
இந்த குறிப்புகளை பயன்படுத்தி எலிகளை தடுத்து உங்கள் வாஷிங் மெஷினை பாதுகாத்திடுங்கள்.