
நமக்குப் பிடித்தமான நிறத்தில் உள்ள துணியின் நிறம் மங்கிய உடன் அதை உடுத்துவதை தவிர்த்த அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. அதிலும் மோசமான விஷயம் என்னவென்றால், துணிகளின் நிறங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து அனைத்து துணிகளையும் ஒட்டுமொத்தமாக தூக்கி எரிய வேண்டிய நிலையும் ஏற்படலாம். சில சமயங்களில், கண்கவர் நிறங்களில் இருக்கும் ஆடைகளிலிருந்து கறைகளை அகற்றுவது எப்படி? என்கிற சவாலை எதிர்கொள்கிறோம். பேக்கிங் சோடா போன்ற வீட்டு உபயோகப் பொருள் முதல் டிட்டெர்ஜென்ட் பவுடர் வரை அனைத்தையும் நாங்கள் முயற்சித்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவை கறை படிந்த பகுதிகளின் நிறத்தை மங்கலாக்கி அந்த இடம் மட்டும் தனியாகக் காட்சி அளித்தது. துவைத்த துணிகளில் சோப்பினால் ஏற்படும் வெள்ளைக் கோடுகள் பார்ப்பதற்கு மட்டுமின்றி நம் சருமத்திற்கும் எரிச்சல் அளிக்கும். ஆதலால், சில எளிய வழிமுறைகளை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து பார்த்தோம். இதனால் வண்ண ஆடைகள் நீண்ட காலம் நீடித்து வருவதை உணர்ந்தோம், மற்றும் ஆடைகள் புதியவை போலவும் தோற்றமளித்தன!
1. லேசான கறை மற்றும் அழுக்குகளை நீக்க அந்த இடத்தை மட்டும் சுத்தம் செய்யுங்கள்
துணிகளில் அழுக்கு இல்லை என்றாலோ அல்லது அதை தினமும் அணியாவிட்டாலோ அவற்றை முழுமையாக துவைக்காமல் 4 முதல் 5 முறை பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதற்கு பதிலாக, துணிகளைத் துவைப்பதற்கு இடையில் லேசான கறை மற்றும் அழுக்குகளை நீக்க அந்த இடத்தை மட்டும் சுத்தம் செய்யுங்கள். வண்ண ஆடைகளிலிருந்து கறைகளை எவ்வாறு அகற்றுவது? என்பதற்கான பதில் தூள் டிட்டெர்ஜென்டிலிருந்து லிக்விட் டிட்டர்ஜென்ட்டுக்கு மாறுவதே ஆகும் என்பதை அறிந்து கொண்டோம். அதற்காக நாங்கள் சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் -ஐ பயன்படுத்தினோம். அதை பயன்படுத்த ஏதுவாகவும் ,பயன்படுத்தும் போது லிக்விட் வழிவதை தவிர்க்கும் வண்ணம் கூர்மையான வடிவில் மூடியைக் கொண்டது. துணிகளை துவைத்த பின் காற்றில் உலர்த்தினோம்.
2. சலவை செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் துணிகளின் நிறங்களுக்கு ஏற்ப வகைப் படுத்துங்கள்
சிவப்பு நிற சாக்ஸ்-ஐ வெள்ளைத் துணிகளோடு சேர்த்து துவைத்தால் அதனோடு இருக்கும் எஞ்சிய துணிகளும் வீணாகிவிடும் என்பதை நாம் நன்கு அறிவோம். அடர்ந்த நிறமுடைய ஆடைகளின் சாயமானது துவைக்கும் போது மென்மையான நிற ஆடைக்குள் நுழைந்து அவற்றின் நிறத்தை மாற்றும். இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதை தடுக்க, உங்களின் மென்மையான மற்றும் அடர் நிற ஆடைகளை தனித்தனியாக துவைப்பது சிறந்தது.

3. சரியான டிட்டெர்ஜென்ட்டை பயன்படுத்துங்கள்
சில டிட்டெர்ஜென்ட்கள் துணிகளுக்கு சேதத்தை உண்டாக்குவதையும் , மேலும் அதை அன்றாடம் பயன்படுத்துவதினால் நிறம் மங்கும் வாய்ப்புகளும் அதிகம் என்பதை நாங்கள் கவனித்தோம். மேலும் அவை துணிகளில் வெண் நிறத் திட்டுகளை ஏற்படுத்துவதால் அதை பயன்படுத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், பல சோதனைகளுக்குப் பிறகு, இறுதியாக நாங்கள் சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட்-ஐ தேர்ந்தெடுத்தோம். ஏனென்றால், இந்த தயாரிப்பை பயன்படுத்தி பல சலவைகள் செய்த பிறகும், வண்ண மிகு ஆடைகள் பளபளப்பாகவும் புதியதாகவும் தோன்றின. இது ஒரு லிக்விட் டிட்டெர்ஜென்ட் என்பதால் விரைவாகக் கரைந்து, கடினமான கறைகளைக் நீக்குகிறது. இது லிக்விட் டிட்டெர்ஜென்ட் ஆக இருப்பதால் துணிகளில் வெள்ளைக் கோடுகளை விட்டுச் செல்லவில்லை. நீண்ட நேரத்திற்கு நல்ல நறுமணத்தையும் தருகிறது.
4. சலவை செய்வதற்கு முன் துணிகளின் உட்புறத்தை வெளியே திருப்புங்கள்
இந்த எளிய உதவிக்குறிப்பை பின்பற்றியதன் மூலம் எங்கள் ஆடைகளில் எப்போதும் ஏற்படும் நிறம் மங்கலாவதை தடுப்பதற்கு உதவியாக இருந்தது. இதன் மூலம் துணிகளின் வெளிப்புறம் மற்ற ஆடைளுடன் உராய்வதை தவிர்க்கலாம், மற்றும் இழைகள் உடையாமல் பாதுகாக்கலாம். துணிகளை சுத்தம் செய்வதானால் ஏற்படும் பிரச்சினைகளான நூல் பிரிதல், இழைகளில் முடிச்சு ஏற்படுதல் போன்றவை துணிகளின் உட்புறத்தில் மட்டுமே பாதிக்கும் அதே சமயம் வெளிப்புறம் எப்போதும் புதியதாக பளிச்சென்று இருக்கும்.
5. வாஷிங் மெஷினில் அளவுக்கு அதிகமான துணிகளைப் போட்டு அடைப்பதை தவிருங்கள்
வாஷிங் மெஷினில் அளவுக்கு அதிகமான துணிகளைப் போட்டு ஒரே முறையில் ஆனைத்து துணிகளையும் சலவை செய்து முடித்து விடலாம் என்ற எண்ணம் பலமுறை நமக்கு தோன்றும். ஆனால் இந்த செய்முறையில் பல குறைபாடுகள் இருப்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். இதை செயலால் மெஷினில் உள்ள சோப்பையும் நீரையும் சரியான முறையில் அனைத்து துணிகளுக்கும் பகிர்ந்து அளிக்க முடியாமல் போய்விடலாம். இதனால் மெஷினின் வேலைப் பளுவானது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் துணிகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக சரியான முறையில் துணிகள் சுத்தம் ஆகாமல் போகலாம், நிறம் மங்கலாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
6. குளிர்ந்த நீரில் துணிகளை சுத்தம் செய்யுங்கள்
வண்ண ஆடைகளை துவைப்பதற்கு குளிர்ந்த நீரே சிறந்தது என்பதை எங்கள் அனுபவத்தால் அறிந்து கொண்டோம். ஏனென்றால் சூடான நீர் துணிகளில் இழைகளைத் திறந்து சாயத்தை வெளியிடுகிறது, அதேசமயம் குளிர்ந்த நீர் சாயத்தை உள்ளே தக்க வைத்து வண்ணங்க ள் கரைவதிலிருந்து தடுக்கிறது. சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட்- போன்ற டிட்டெர்ஜென்ட் சூடான நீர் மற்றும் குளிர்ந்த நீர் இரண்டிலும் சமமாக வேலை செய்கிறது.
இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் வண்ண உடைகளின் நிறம் மங்காமல் பாதுகாக்கலாம்.