
குளிர்சாதன பெட்டிகள், சமைத்த அல்லது சமைக்காத அனைத்து வகையான உணவுகளையும், பழங்கள், காய்கறிகளையும், குளிர்பானங்களையும், பால், இறைச்சி மற்றும் பல்வேறு பொருட்களையும் சேமித்து வைக்க உதவுகின்றன. உள்ளே வைக்கப்பட்டுள்ள எல்லா உணவு பொருட்களும் புதியதாக இருக்கும் வரை, குளிர்சாதனப் பெட்டியும் நன்றாக இருக்கும், ஆனால் ஒன்று அல்லது மற்றொன்று கெட்டுப்போனாலோ அல்லது காலாவதியானாலோ, அதன் துர்நாற்றம், உங்கள் குளிர்சாதன பெட்டியில் பயங்கரமாக பரவக்கூடும். நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்காக உங்கள் குளிர்சாதன பெட்டியை தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. குளிர்சாதன பெட்டியை எளிதில் சுத்தப்படுத்த சில எளிய வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.
உங்கள் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய இந்த வழிகளை பின்பற்றவும்.
Step 1: குளிர்சாதன பெட்டியை காலி செய்யுங்கள்
முதலில், அனைத்து உணவுப் பொருட்களையும் வெளியே எடுக்கவும். பயன்படுத்தப்படாத அல்லது காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்தி, அனைத்து நல்ல பொருட்களையும் சுத்தமான இடத்திற்கு நகர்த்தவும்.
Step 2: பிரிக்கக்கூடிய ட்ரேக்களை அகற்றி, வெளியே எடுக்கவும்.
பிரிக்க க்கூடிய ட்ரேக்கள் மற்றும் ஐஸ் கியூப் தட்டுகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து அகற்றவும். குளிர்சாதன பெட்டியில் மின்சாரத்தை நிறுத்தி, டீஃப்ரீஸ் செய்யவும்.

Step 3: சுத்தம் செய்யும் கரைசல்
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும், அதில் 1 கப் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்கு கலக்கவும்.
Step 4: தெளிக்கவும்
குளிர்சாதன பெட்டியின் உட்புறம் முழுவதும் சுத்தம் செய்யும் கரைசலை சமமாக தெளிக்கவும், 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.
Step 5: தேய்க்கவும்
இப்போது சிராய்ப்பு இல்லாத ஸ்க்ரப்பரை பயன்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் இருக்கும் விடாப்பிடியான உணவுத் துகள்கள் / பூஞ்சை கறைகளை மெதுவாக துடைக்கவும். குளிர்சாதனப் பெட்டியின் எல்லா மூலைமுடுக்குகளிலும் நன்றாக தேய்க்கவும்.
Step 6: துடைக்கவும்
ஒரு சுத்தமான ஈர துணியை எடுத்து, குளிர் சாதன பெட்டியில் இருக்கும் சோப்பு மற்றும் அழுக்கை அகற்ற, குளிர்சாதன பெட்டியின் உட்புறத்தை முழுவதுமாக துடைக்கவும். அது முற்றிலும் சுத்தமாகும் வரை, துணியை ஈரமாக்கி, திரும்பத் திரும்ப துடைக்கவும்.
Step 7: வினிகர் கரைசல்
இப்போது ஒரு சுத்தமான துணியை எடுத்து அதில் சிறிது வெள்ளை வினிகரை தெளிக்கவும். இந்த துணியால் குளிர்சாதன பெட்டியின் உட்புறத்தை சமமாக தேய்க்கவும்.
Step 8: உலர்ந்த துணி
இப்போது சுத்தமான உலர்ந்த பருத்தி துணியால் குளிர்சாதன பெட்டியை துடைக்கவும். குளிர்சாதன பெட்டி நன்கு உலரும் வரை, அதன் கதவை திறந்து வைக்கவும்.
Step 9: வெளிப்பகுதி
இப்போது ஒரு ஈரமான துணியை எடுத்து , குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறத்தில் உள்ள தூசியை மெதுவாக துடைக்கவும். இதற்குப் பிறகு, மென்மையான உலர்ந்த துணியால் துடைத்து உலர வைக்கவும். குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறத்திற்கு அதிக பிரகாசத்தை சேர்க்க, க்ளாஸ் கிளீனர்களைப் பயன்படுத்தலாம், ஆனால் இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
Step 10: ஸ்விட்ச் ஆன் செய்யவும்
இப்போது மின்சாரத்தை இயக்கவும். குளிர்சாதன பெட்டி, முழுமையாக குளிர்ந்தவுடன், உங்கள் உணவுப் பொருட்களை நேர்த்தியாக அதில் அடுக்கி வைக்கவும்.
Step 11: எலுமிச்சை வாசனை
ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக வெட்டி, குளிர்சாதன பெட்டியின் உள்ளே வைக்கவும். இது உங்கள் குளிர்சாதன பெட்டிக்கு ஒரு நல்ல எலுமிச்சை மணத்தை தருகிறது.
அவ்வளவுதான்! உங்கள் குளிர்ச ாதன பெட்டி இப்போது சுத்தமாகவும் புதியதாகவும் உள்ளது!