
பெரும்பாலான நேரங்களில் வாஷிங் மெஷின் ஈரமாக இருக்கிறது. இதனால் இதில் பூஞ்சைகள் உருவாகின்றன. இவை உங்கள் வாஷர்களில் மோசமான வாடையை ஏற்படுத்தும். இதன் விளைவாக உங்கள் மெஷினும் துர்நாற்றம் வீசும்.
கவலை வேண்டாம், பின் வரும் குறிப்புகளை செய்து துர்நாற்றத்தைப் போக்குங்கள்.
சுத்தம் ச ெய்வதற்காக வினிகர் ஒரு இயற்கையான கரைசல் என்றாலும், சுத்தம் செய்யும்போது நீங்கள் ரப்பர் கையுறை அணிய வேண்டும்.
1) வழக்கமான பராமரிப்பு
துர்நாற்றத்தை தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி உங்கள் மெஷினை காற்றோட்டமாக வைப்பதுதான். துணி துவைத்து முடித்ததுமே வாஷிங் மெஷினிலிருந்து துணிகளை எடுத்துவிடுங்கள். அதன் கிளாஸ் மற்றும் டோர் கேஸ்கெட்டை உலர்ந்த துணியால் துடைக்கவும். மெஷினை திறந்து வைத்து உட்பக்கத்தை உலர விடுங்கள்.

2) இயற்கையான க்ளீனர்களை பயன்படுத்துங்கள்
இயற்கையான வீட்டுபயோக பொருள்கள் அதாவது ஒயிட் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா மிக பயனுள்ளது. 2 கப் வெந்நீரில் 3 கப் வினிகர் மற்றும் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து அதை வாஷரில் நேரடியாக போட்டு அதை மிக நீள வாஷிங் சைக்கிளில் வைக்கவும். ஒரு முறை இவ்வாறு செய்த பிறகு அது ஒரு மணி நேரம் அப்படியே இருக்கட்டும். இதன் மூலம் அழுக்கு உறிஞ்சி எடுக்கப்படும். பிறகு தண்ணீரை வடித்துவிடவும்.
ப்ளீச் போலவே வினிகரும் டிஸ்ஸின்ஃபெக்ட் செய்கிறது. ஆனால் மிகவும் மென்மையான முறையில். இதில் அமிலத் தன்மை இருப்பதால், வாஷ் டப்பில் இருக்கும் எந்த ஒரு சோப்பு கசடையும் அது கரைத்துவிடுகிறது. மேலும் பேக்கிங் சோடா சோப்பு படிந்திருப்பதை நீக்குகிறது. மேலும் துர்நாற்றத்தையும் நீக்கிவிடுகிறது.
3) வாஷரை சுத்தம் செய்யவும்
உங்கள் டாப் லோடிங் அல்லது ஃபிரன்ட் லோடிங் வாஷிங் மெஷினின் கிளாஸ் மற்றும் டோரை வாரம் ஒரு முறை சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணதில் க்ளீனிங் சொல்யூஷனை தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும் பிறகு மிருதுவான துணியை அந்த சொல்யூஷனில் நனைத்து மெஷினை சுத்தம் செய்யவும். டிஸ்பென்சர் அல்லது டோர் கேஸ்கெட்டில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்வதற்கு டூத் பிரஷ்ஷ ை பயன்படுத்தவும்.
இந்த குறிப்புகளை அவ்வப்போது பின்பற்றுவதால் இந்த மாதிரியான ஈர வாடை மற்றும் துர்நாற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் வாஷிங் மெஷின் எவ்வளவு பழையதாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு அதிக காலம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் சரி