கடின நீர் கறைகளை நீக்குவது நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு கடினமானது அல்ல.

கடின நீர் கறைகள் உங்களுடைய சமையலறை மற்றும் குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள பொருள்களையும் பாழாக்குகிறதா? கவலைப்படாதீர்கள். அந்த கறைகளை எளிதில் போக்கிட இந்த பயன் மிக்க குறிப்புகளை முயற்சியுங்கள். பின்னர் எங்களுக்கு நன்றி பாராட்டுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Getting Rid of Hard Water Stains Isn’t as Hard as You Think
விளம்பரம்
Surf Excel Matic Liquid

இந்தியாவின் பெரும் பகுதியில் கடின நீர்தான் கிடைக்கிறது. கடின நீரில் அதிகஅளவில் தாது அடக்கங்கள் உள்ளன. அவை வெள்ளை சாக் போன்ற படிவை படியச் செய்கின்றன. இது சுவையை பாதிப்பதோடு, கடின நீர் இதர பிரச்சினைகளுக்கும் காரணமாகலாம். இவ்வாறு படியும் வெள்ளை சாக் போன்ற தாது படிவுகள் உருவாகி உங்கள் பொருத்தப்பட்ட பொருள்கள் மீது கறைகளை ஏற்படுத்தலாம். இவை பார்ப்பதற்கு வெறுப்பை ஏற்படுத்தும் மற்றும் ஷவர்ஹெட், குழாய் மற்றும் பலவற்றின் செயல்திறனை பாதிப்படையச் செய்யலாம்.

கவலை வேண்டாம். கடின நீர் கறைகள் உங்களுடைய மோசமான எதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை! உங்களுடைய பொருள்களிலிருந்து மற்றும் படிந்துள்ள பரப்புகளிலிருந்து அவற்றை சுத்தம் செய்ய இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.

1) வினிகர் உபயோகிக்கவும்

இறுகி படிந்துள்ள கறைகள் மீது வினிகர் எப்போதும் நன்றாக செயல்புரிகிறது. தண்ணீர் 2 கப் மற்றும் வெள்ளை வினிகர் 2 கப் சேர்த்து கவலையாக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ளவும். பின்னர் பாதிக்கப்பட்ட பரப்புகள் மீது தெளிக்கவும். 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஒரு சுத்தமான கந்தல் துணி கொண்டு துடைத்துவிடவும். வினிகர் பயன்படுத்துவதன் ப‘னாக உங்கள் பரப்பு பிரகாசமாகவும் இருக்கும்.

2) சமையல் சோடாவை உபயோகிக்கவும்

எங்கு கடின நீர் கறைகள் இறுகிப்போய் நீக்குவது கஷ்டமாக இருக்கிறதோ அங்கே சமையல் சோடா உபயோகிப்பதுதான் சிறந்த தீர்வாக அமையும். 2 மேசைக்கரண்டி சமையல் சோடா மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு பசையை உருவாக்கிக் கொள்ளவும். ஒரு பழைய பிரஷ்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதி மீது நேரடியாக பூசவும். மற்றும் 45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். அடுத்து ஒரு சுத்தமான கந்தல் துணியை உபயோகித்து துடைத்து எடுத்து அ‘சவும். அப்புறம் உ‘ர விட்டுவிடவும்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) அவை மீண்டும் வராமல் தடுக்கவும்

வரும் முன் காப்பது நன்று. முதலில் கறை படியும் வாய்ப்புகளை குறைக்கவும். எப்போதும் ஒரு சுத்தமான கந்தல் துணியை உபயோகித்து பரப்புகளை துடைத்துவிடுவதை நினைவில் கொள்ள வேண்டும். குளியலறை பயன்பாட்டிற்கு பிறகு தண்ணீர் பின்னால் படிந்திருக்காது இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இது கடின நீர் கறைகளை அண்டவிடாது.

இந்த குறிப்புகள் பின்பற்றப்படும்போது கடின நீர் கறைகள் காணாமல் போவதை கண்கூடாகக் காண முடியும். குளியலறையும் சமையலறையும் கறைகள் இன்றி பளிச்சென்று இருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது