
மெஷினில் துவைத்த துணிகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் பல சமயங்களில் துவைத்த துணிகளில் வெள்ளை நிறத்தில் திட்டுகள் இருப்பதை பார்த்திருப்போம். நம்மில் பலர் இந்த பிரச்சனையை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் . வெள்ளைத் திட்டுகள் இருப்பதால் அனைத்து துணிகளையும் மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டால் அது நமக்கு வெறுப்பாகவும் அதற்காக நிறைய நேரத்தையும் செலவிட வேண்டியதாகவும் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். பல முயற்சிகளை மேற்கொண்ட பின் மெஷினில் துவைத்த துணிகளில் வெள்ளைத் திட்டுகள் உருவாகுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற சில எளிய உதவிக்குறிப்புகளை கண்டுபிடித்துள்ளோம்.
மெஷினில் துவைத்த பின் துணிகளில் கறை படிந்திருப்பதற்கான காரணங்கள்
1. வழக்கமான டிட்டெர்ஜென்ட் தூளை பயன்படுத்துவது
வாஷிங் மெஷின் மூலம் துணிகளை துவைத்த பின், ஆடைகளில் படிந்திருக்கும் வெண்நிற கறைக்கான முக்கியக் காரணம் சோப்புத் தூள் ஆகும். பெரும்பாலும் தூள் சோப்பானது நீரில் முழுமையாக கரையாமல் துணிகளில் கோடுகளை விட்டுச் செல்கிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக தூள் சோப்பை தவிர்த்து லிக்விட் சோப்பு பயன்படுத்த ஆரம்பித்தோம். இதனை செயல்படுத்தும் வகையில் சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் -ஐ பயன்படுத்தினோம். எங்கள் ஆடைகள் சுத்தமாகவும், சோப்பினால் ஏற்படும் அழுக்குகள் ஏதும் இல்லாமல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இந்த லிக்விட், வாஷிங் மெஷினின் உயர் நீர்மட்ட சூழலுக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீரில் எளிதாகவும் நன்றாகவும் கரையும் தன்மையைக் கொண்டது. இந்த தயாரிப்பை பயன்படுத்தய பின் எங்கள் துணிகளில் படிந்திருந்த கடினமான கறைகளை எளிதில் நீக்கியதோடு மட்டுமல்லாமல் வெள்ளை திட்டுகள் ஏதும் இல்லாமல் சுத்தம் செய்தது.
2. மெஷின் வடிகால் ஃபில்டரில் அடைப்பு

மெஷின் வடிகால் குழாயின் ஃபில்டரில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மெஷினிலிருந்து நீர் மெதுவாகத்தான் வெளியேறும். இதனால் கரையாத சோப்புத் தூள் மற்றும் மண் ஆகியவை உங்கள் துணிகளின் மீது அழுக்காக படியும் வாய்ப்புகள் அதிகம். அடைப்பு ஏற்பட்ட எங்கள் மெஷினின் வடிகாலில் பட்டன்கள், பஞ்சு, தூள் சோப்பு கட்டிகள் மற்றும் காசுகள் இருப்பதை பார்த்த போது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்கு பின் சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் -ஐ நாங்கள் பயன்படுத்த ஆரம்பித்த போது வடிகால் குழாய் ஃபில்டரில் எந்தவொரு சோப்பு மிச்சமும் இல்லை என்பதை கவனித்தோம். இந்த லிக்விடை பயன்படுத்துவதோடு சேர்த்து வடிகட்டியை அவ்வப்போது சுத்தம் செய்தால் மெஷினின் சுத்தம் செய்யும் ஆற்றலும் அதிகரிக்கும். இதை செய்வதன் மூலம் சோப்பு மிச்சத்தால் துணிகளில் ஏற்படும் கறைகளை தவிர்த்து, அதனால் ஏற்படும் தோல் எரிச்சலை தவிர்க்கலாம்.
3. மெஷினில் அளவுக்கு மீறி துணிகளை அடைத்தல்
துணி துவைக்கும் வேலையை விரைவில் முடிப்பதற்காக மெஷினில் அளவுக்கு அதிகமான துணிகளை திணிக்க முயற்சி செய்வோம். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்திவிடலாம் என்று நம்புகிறோம் ஆனால் துணிகளை அடைப்பதன் மூலம் அது துணிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியாது. அளவுக்கு அதிகமான துணிகள் மெஷினில் இருப்பதினால் அது நீரின் ஓட்டம் மற்றும் வடிகாலின் செயல் திறமையை குறைக்கும். இதனால் துணிகளுக்கு அவசியமான டிட்டெர்ஜென்ட் இல்லாமல் அதனால் துணிகளை சரியாக சுத்தம் செய்ய முடியாமலும் போகலாம். வெளியே செல்ல இயலாத தூசு, சோப்பு நுரை மற்றும் அழுக்கு ஆகியவை துணிகளில் வெள்ளை கறையை விட்டுச்செல்லும் வாய்ப்புகளும் அதிகம். இதன் விளைவாக நாம் துணிகள் அனைத்தும் மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்வதற்கான சூழலும் எழலாம். ஆகவே எந்த நிலையிலும் மெஷினில் அளவுக்கு மேல் அதிக துணிகளை திணிக்காமல் இருப்பதை தவிர்த்திடுங்கள் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
4. தேவைக்கு அதிகமாக டிட்டெர்ஜென்ட்டை பயன்படுத்துதல்
தேவைக்கு அதிகமாக டிட்டெர்ஜென்ட்டை பயன்படுத்தும் பழக்கமானது சிறந்தது அல்ல. மெஷினில் துணிகளை துவைக்கும் போது அளவுக்கு அதிகமான சோப்பை பயன்படுத்தினால் அது துணிகளில் கசடுகளை விட்டுச்செல்லும் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். நாங்கள் சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் உபயோகிக்கும் போது அதன் வழிமுறைகளைப் படித்து அதன்படி நடந்ததைப் போல டிட்டெர்ஜென்ட்டை பயன்படுத்தும் முறையை அதன் கவரில் இருக்கும் வழிமுறைகளை படித்து அதனை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
ஃப்ரண்ட்- லோட் மற்றும் டாப் -லோட் ஆகிய மெஷின்களுக்கென்று பிரத்யேகமாக இரண்டு வகை தயாரிப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சிறப்பான மெஷின் வாஷை பெறுவதற்கு குறிப்பிட்ட அளவிலான டிட்டெர்ஜென்ட்-ஐ பயன்படுத்த வேண்டிது மிகவும் அவசியம் ஆகும். டாப் -லோட் மெஷின் என்றால் டிரம்மில் உள்ள துணிகளின் மீது நேரடியாக 1 மூடி சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் (டாப் -லோட்) பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. பிறகு வழக்கம் போல் வாஷ் செய்யவேண்டும். ஃப்ரண்ட் -லோட் மெஷின் என்றால் சர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் (ஃப்ரண்ட்- லோட்) 1 மூடி மெஷினின் சோப்பு பெட்டியில் அல்லது டிராயரில் ஊற்றி வழக்கம் போல் வாஷ் செய்ய வேண்டும். கடினமான கறைகள் இருப்பின் துவைப்பதற்கு முன்பு கறை மீது லிக்குவிட்டை நேரடியாக ஊற்றி அதன் பின் ஃப்ரண்ட்- லோட் மற்றும் டாப் -லோட் மெஷினில் சுத்தம் செய்யலாம்.
5. முறையற்ற விதத்தில் மெஷினை சுத்தம் செய்தல்
மேற்கூறிய அனைத்தையும் சரி செய்த பின்னும் துவைத்த துணிகளில் வெள்ளைக் கறை இருக்கிறது என்றால் உங்கள் வாஷிங் மெஷினை சுத்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அழுக்கான வாஷிங் மெஷினில் மண், அழுக்கு, தாதுக்கள், சோப்பு ஆகியவை இருக்கும். இவை அனைத்தும் துவைக்கும் துணிகளில் சென்று ஒட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகையால் உங்கள் வாஷிங் மெஷின் -ஐ சரியான இடைவெளியில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். வாஷிங் மெஷினின் சோப்புப் பெட்டி, டிரம் உடன் ரப்பர் சீல், மற்றும் பில்டர்கள் ஆகிய பகுதிகள் சுத்தமாக இருக்கிறதா? என்பதை அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, சூடான நீரில் விட்டு டிரம்மை சுழல விட வேண்டும். இதனால் சோப்பு மிச்சம் , கசடுகளை அகற்றி அடுத்த முறை பயன்பாட்டிற்காக உங்கள் மெஷின் தயாராகும்.
பழைய கறையை நீக்குவது எப்படி?
துவைத்த துணிகளில் தங்கி இருக்கும் வெள்ளைக் கறைகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். சிக்கல்களை கண்டறிந்து அதை ஒவ்வொன்றாக நீக்குவதன் மூலம் துணிகளில் ஏற்படும் வெள்ளைக் கறையை தவிர்த்திடலாம். ஆனால், துணிகளில் இருக்கும் பழைய கறைகளை நீக்குவது எப்படி ? துணிகளை மீண்டும் துவைப்பதனால் மட்டுமே பழைய கறைகளை நீக்க முடியும் என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். ஆடை பராமரிப்பு லேபிளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச வெட்பத்தில் இருக்கும் நீரைக் கொண்டு கறை படிந்த துணிகளை மீண்டும் சுத்தம் செய்யவும். இச்சமயம் கூடுதலாக சோப்பு சேர்ப்பதற்கு பதிலாக 1 கப் வினிகரைச் சேர்த்து மெஷினில் சுற்ற விடுங்கள். இதை செய்வதன் மூலம் இழைகளில் தங்கியுள்ள கறைகள், திட்டுகள் வெளிவரும்.
இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றுவதினால் ஒவ்வொரு மெஷின் வாஷ் -க்கு பிறகும் ஆடைகள் சுத்தமாகவும் புதிதாகவும் காட்சி அளிக்கும்.