
உங்கள் வீட்டிற்கு வாஷிங் மெஷின் வந்தததிலிருந்து துணி துவைக்கும் வேலை வேகமாகவும் மற்றும் சுலபமாகியும்விட்டது. இருந்தாலும் இந்த சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும்போது இந்த வாஷிங் மெஷின் வழிகாட்டியை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். இது உங்கள் வாஷிங் மெஷின் நீண்ட காலம் வரை சொயல்படுவதற்கு உதவியாக இருக்கும்.
1) லோடு
உங்கள் வாஷிங்மெஷினை ஒவர்லோடு செய்தால் உங்கள் துணிகள் சரியாக துவைக்கப்படாது. அளவுக்கு அதிகமாக துணிகள் இருந்தால் அது அசைவதற்கு போதுமான இடம் இருக்காது. எனவே டிடெர்ஜென்ட்டும் முழுமையாக நீங்காது. இதனால் துணிகள் அழுக்காகவே இருக்கும். இதைத் தவிர ஒவர்லோடு செய்வதால் மெஷினின் மோட்டாருக்கு அழுத்தம் ஏற்பட்டு அதன் ஆற்றலும், ஆயுளும் குறைந்துவிடும்.
2) டிடெர்ஜென்ட்
சரியான டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்வது உங்கள் மெஷினிற்கும் உங்கள் துணிகளுக்கும் மிகவும் முக்கியம். நாங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேட்டிக் லிக்விடை பரிந்துரை செய்கிறோம். இது உங்கள் மெஷினிற்காவே விசேஷமாக உருவாக்கப்படுள்ளது. இது லிக்விடாக இருப்பதால் தண்ணீரில் முழுமையாக கரையும். மேலும் சகடுகள் எதையும் விடாது. சரியான டிடெர்ஜென்ட்டை தேர்வு ச ெய்தால் அது துணிகளை மிருதுவாகவும் சுதமாகவும் வைத்திருக்க உதவும். மேலும் உங்கள் மெஷினின் ஆயுளைப் பராமரிக்கவும் இது உதவுகிறது.

3) உங்கள் துணிகளின் பாக்கெட்டுகளை பார்க்கவும்.
உங்கள் துணிகளை மெஷினில் போடுவதற்கு முன்பு, எப்போதும் பாக்கெட்டுகளைப் பார்க்கவும். அதில் ஏதேனும் பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். காசுகள், பேனாக்கள் போன்ற பொருள்கள் துவைக்கும் போது மெஷினை சேதமாக்கக்கூடும். அவை நாசூக்கான துணிகளையும் நாசமாக்கலாம்.
4) ப்ரீ வாஷ் சைக்கிள்
உங்கள் மெஷினில் ப்ரீ வாஷ் செட்டிங் இருந்தால் அதை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதால் துவைக்கதற்கு முன்பு அதிகப்படியான அழுக்கை இது தளர்த்தும். எனவே அதிகப்படியான அழுக்குள்ள துணிகளை மீண்டும் துவைக்கும் அவசியம் இருக்காது.
a. காலியாக சுழலவிடவும்.
மாதம் ஒரு முறை உங்கள் வாஷிங் மெஷ ினில் வெந்நீரை நிரப்பி, துணிகள் எதுவும் போடாமல் சுழலவிடவும். அப்போது அந்த தணீரில் ஒரு கப் வினிகர் விடவும். இது டிடெர்ஜென்ட் கசடுகளையும், பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும்.
இதன் மூலம் பலன் கிடைக்கும்! அடுத்த முறை துவைக்கும்போது இந்த எளிமையான குறிப்புகளை செய்து பார்க்கவும்.