உங்கள் விண்டேஜ் மர கடிகாரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது

நீங்கள் ஒரு அழகான விண்டேஜ் மர கடிகாரத்தின் பெருமை வாய்ந்த உரிமையாளரா? அதை சுத்தம் செய்வதற்கான வழிகளை தேடுகிறீர்களா? உங்கள் கடிகாரம், மீண்டும் புதியது போல தோற்றமளிக்க சில அற்புதமான உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Clean Your Vintage Wooden Clock
விளம்பரம்
Surf Excel Matic Liquid

விண்டேஜ் பொருட்கள் உங்கள் வீடுகளுக்கு அற்புதமான தோற்றத்தை அளிக்கிறது, குறிப்பாக விண்டேஜ் கடிகாரங்கள். அவை உங்கள் இடத்திற்கு ஒரு மாபெரும் அழகைக் கொடுக்கின்றன மற்றும் பார்வையாளர்களின் கண்களை எளிதில் ஈர்க்கின்றன. நன்கு பராமரிக்கப்படும் விண்டேஜ் கடிகாரத்தை 200 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம். கடிகாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க கவனமாக கையாளுதல் மற்றும் சுத்தம் செய்வது அவசியம்.

உங்கள் விண்டேஜ் மர கடிகாரத்தை சுத்தம் செய்து பராமரிக்க இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

Step 1: கடிகாரத்தை தூசி தட்டவும்

முதலாவதாக, மென்மையான தூசி தட்டும் பிரஷை பயன்படுத்தி கடிகாரத்தை தூசி தட்டவும். அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யவும்.

Step 2: துடைக்கவும்

ஒரு கிண்ணம் தண்ணீரை எடுத்து, அதில் 2 ஸ்பூன் வூட் கிளீனர் / லேசான சோப்பு தூள் சேர்க்கவும். அதில் ஒரு சுத்தமான மற்றும் உலர்ந்த துணியை ஊறவைத்து தண்ணீரை பிழிந்து, கடிகாரத்தில் இருக்கும் தூசித் துகள்களை அந்த ஈரமான துணியால் மெதுவாக துடைக்கவும்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

Step 3: நீர்

இப்போது ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சுத்தமான பருத்தி துணியை ஊற வைக்கவும். அந்தத் துணியை நன்கு பிழிந்து, அழுக்கு மற்றும் சோப்பு கறைகளை நீக்க கடிகாரத்தை துடைக்கவும். கடிகாரத்தின் மேற்பரப்பை சேதப்படுத்தும் என்பதால், அதில் அதிக நீர் ஊற்ற வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 4: மூலைகளில் துலக்குங்கள்

கடிகாரத்தின் மூலைகளில், தூசித் துகள்கள் சேர்ந்துவிடும், துணியால் துடைக்க கடினமாக இருக்கும் இடத்தில், மென்மையான பல் துலக்கும் தூரிகையை பயன்படுத்தி அழுக்கை மெதுவாகத் துலக்கவும்.

Step 5: உலர்ந்த துணி

இப்போது ஒரு உலர்ந்த துணியை எடுத்து கடிகாரத்தின் ஈரமான பகுதிகளை துடைத்து உலர வைக்கவும். எல்லா பகுதிகளையும் கவனமாக உலர்த்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 6: காற்றில் உலர்த்தவும்

கடிகாரத்தை காற்றில் உலர அனுமதிக்கவும், வெளியில் உலர வைக்க வேண்டாம், ஏனெனில் மீண்டும் தூசி துகள்கள் கடிகாரத்தின் மீது குடியேறும்.

Step 7: பாலிஷ்

கடிகாரத்தை முழுவதுமாக உலர்த்திய பிறகு, இந்த வகையான கடிகாரங்களுக்கென பிரத்தியேகமாக கடைகளில் கிடைக்கும் லேசான மர பாலிஷைப் பயன்படுத்துங்கள். கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சிறிதளவு ஆலிவ் எண்ணெயை ஒரு துணியில் தொட்டு, கடிகாரத்தின் மரப் பகுதிகளில், மெதுவாக, சமமாக தடவி பாலிஷ் செய்யலாம். இது கடிகாரத்தை மேலும் பிரகாசிக்கச் செய்யும்.

ரெடி! இப்போது உங்கள் விண்டேஜ் மர கடிகாரம் புதியது போல் தோன்றும்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது