
உங்கள் வீட்டு சமையலறையை நன்கு சுத்தம் செய்வது சோர்வடைய வைக்கும் வேலையாகத் தோன்றும். கவலை வேண்டாம்! உங்கள் வேலையை எளிமையான பகுதிகளாக பிரித்து அதை சுலபமாக்கியுள்ளோம். இந்த முறை மகிழ்ச்சிகரமானது, இதை வேலையாகவே நினைக்கவிடாது.
1) தூசை நீக்கவும்
ஒரு பிரஷ்ஷை எடுத்து சமையலறையின் மேற்புறங்கள் மற்றும் கேபினட்களின் மீது லூஸாக படிந்திருக்கும் தூசுகளை நீக்கவும்.
2) அழுக்கான மற்றும் பிசுக்கான பகுதிகள்
கிச்சன் க்ளீனர்கள் மூலம் மேற்பரப்பில் ஸ்ப்ரே செய்யுங்கள். அழுக்கான மற்றும் பிசுக்கான பகுதிகள் மேல் எல்லாம் ஸ்ப்ரே செய்யவும். அடுத்ததாக ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை எடுத்து அந்த பகுதிகளை துடைக்கவும். கிச்சன் க்ளீனர் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும்.

3) மேற்பரப்புகளை கழுவுங்கள்
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து அதில் டிஷ்வாஷ் லிக்விட்டை2-3 துளிகள் சேர்க்கவும். அதன் பிறகு துடைக்கும் துணியை இந்த கரைசலில் நனைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்துவிட்டு, சமையலறையின் மேற்புறங்களையும் கேபினெட்டுகளையும் துடைக்கவும். மேலிருந்து தொடங்கி கீழ்ப்புறமாக துடைக்கவும். இதன் மூலம் தண்ணீர் சொட்டிய அடையாளங்களை நீக்கலாம்.
4) மூலை முடுக்குகளில் பிரத்யேக கவனம்
சமையலறையில் மேற்புறங்களில் இருக்கும் மூலை முடுக்கள் கஷ்டமானவை. அவற்றை கவனிக்காமல் விடுகிறோம். வீட்டு சுவர் ஓரங்களையும் நாம் கவனிப்பது இல்லை. எனவே, இந்தப் பகுதிகளில் சிறிது பிரத்யேக கவனம் செலுத்துங்கள். ஒரு பழைய டூத் பிரஷ் எடுத்து இந்த கடினமான இடங்களை சுத்தம் செய்யவும். அங்கு படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கவும்.
5) புதிய பொருள்களுக்கு இடம் ஏற்படுத்தவும்.
பயன்படுத்தப்படாத மற்றும் காலாவதியான பொருள்களை கிச்சன் கேபினெட் மற்றும் ஃபிரிட்ஜிலிருந்து அப்புறப்படுத்தி புதிய பொருள்களுக்கு இடம் ஏற்படுத்தவும். இந்த இடங்களை சுத்தமாக துடைத்து வைக்கவும். இதன் மூலம் புதிய பொருள்களை அழுக்கி ல்லாத இடத்தில் வைக்க முடியும்.
6) உலர்வாக வைத்திருக்கவும்
சமையலறையை ஈரமான துணியால் துடைத்த பிறகு ஒரு சுத்தமான உலர்ந்த துணியை எடுத்து துடைக்கவும். இதன் மூலம் தண்ணீர் அடையாளங்களை நீக்கிவிடலாம். சிச்கின் பக்கத்தில் மற்றும் க்ர்ளொம் சாதனங்களின் மீது தண்ணீர் தெளித்த அடையாளங்களை ஒரு உலர்ந்த துணியால் துடைக்கவும்.
7) தரையை பெருக்கவும்.
உங்கள் சமையலறை பகுதிகளை முழுவதுமாக சுத்தம் செய்த பிறகு, தரையை பெருக்க மறக்காதீர்கள். இது உங்கள் சமையலறை சுத்தத்தை முழுமையாக்கி இன்னும் பளபளக்க வைக்கும்.
சமையலறை சுத்தமாக இருந்தால் சமைக்கும் வேலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த குறிப்புகள் உங்கள் சமையலறையை அடிக்கடி சுத்தம் செய்ய உதவிகரமாக இருக்கும்.