
உங்கள் சமையலறையின் நறுமணத்தை நீங்கள் விரும்புவதை நாங்கள் அறிவோம்! ஆனால், அறையை எவ்வாறு நல்ல நறுமணத்துடன் வைத்துக்கொள்வது என்பதை அறிவதோடு, அலமாரிகள் போன்ற மூடப்பட்ட இடங்களுக்கும் புதுவிதமான வாசனை சேர்க்க வேண்டும். இந்த படிநிலைகளை கடைப்பிடிக்கவும், உங்களுடைய சமையலறையை வருடம் முழுவதும் நல்ல நறுமணத்துடன் அலமாரிகளை நீங்கள் வைத்திருக்கலாம்.
படிநிலை 1: அலமாரிகளை வெறுமையாக்குவது
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்களுடைய சமையலறையின் அலமாரிகளிலிருந்து அனைத்து பொருட்களையும் அகற்றுவது தான். உங்களுக்கு இனி பயன்படாது என எண்ணுகின்ற எந்த பொருட்களையும் அதிலிருந்து எடுத்து விடவும்.
படிநிலை 2: அலமாரிகளை தூசு தட்டவும்
ஒரு தூய்மையான, நன்கு உலர்ந்த துணியை எடுத்து அலமாரியில் உள்ள தூசுகளை சுத்தப்படுத்தவும், அவற்றிலிருந்து ஏதேனும் அழுக்குகள் அல்லது உணவு துணுக்குகளையும் சுத்தப்படுத்தவும். உங்களிடம் ஒரு வாக்வம் கிளீனர் இருந்தால், அதை நீங்கள் உபயோகப்படுத்தலாம்.

படிநிலை 3: சுத்தம் செய்யக்கூடிய கரைசலைத் தயார்செய்யுங்கள்
ஒரு பாத்திரத்தில் 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 தேக்கரண்டி ல ிக்கியுட் டிஷ்வாஷரை அதனுடன் சேர்க்கவும். அவற்றை நன்றாக கலக்கவும்.
படிநிலை 4: மேற்பரப்புகளைத் துடைக்கவும்
ஒரு சுத்தமான துணியை எடுத்து, படிநிலை 3 இல் தயார் செய்யப்பட்ட கரைசலில் அந்த துணியை நனைத்து, அதிகப்படியான நீரை வெளியேற்ற லேசாகப் பிழியவும், இழுப்பறைகளின் அனைத்து மேற்பரப்புகளையும் சுத்தம் செய்யவும்.
படிநிலை 5: மூலைகளைச் சுத்தம் செய்யவும்
ஒரு பழைய பல்துலக்கும் தூரிகையை எடுத்துக் கொண்டு, அதை சோப்பு கரைசலில் நனைத்து, மூலையிலும், துணியால் சுத்தம் செய்ய இயலாத மிகவும் கஷ்டமாக இருக்கக் கூடிய பின்புற பகுதிகளை சுத்தம் செய்யவும்.
படிநிலை 6: நறுமண கலவையைத் தயார் செய்யவும்
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, உங்களுக்குப் பிடித்த நறுமண எண்ணெய்யை 1 தேக்கரண்டி சேர்த்து 1 கப ் வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்க்கவும். ஒரு சுத்தமான துணியை எடுத்து, இந்த கரைசலில் அந்த துணியை நனைத்து, உங்களுடைய முழு இழுப்பறையை அதைக் கொண்டு சுத்தம் செய்யவும். இது உங்களுடைய இழுப்பறை யில் சுத்தத்தையும் நறுமணத்தையும் சேர்க்கும்.
படிநிலை 7: உலர்ந்த துணியால் துடைக்கவும்
உலர்வான துணியை எடுத்துக்கொண்டு, நீர்வரிக் குறிகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய உங்கள் இழுப்பறைகளைத் துடைக்கவும்.
படிநிலை 8: அனைத்தையும் திரும்ப வைக்கவும்
கடைசியாக, நீங்கள் அகற்றிய அனைத்து பொருட்களையும் உங்களுடைய அலமாரிகளில் வைக்கலாம்.
உங்களுக்குத் தேவையானது அங்கே இருக்கிறது! இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும், உங்கள் சமையலறை அலமாரிகள் சுத்தமாகவும், நீங்கள் விரும்பும் விதமாகவும் இருக்கும். இந்த நற ுமணமானது 3-4 வாரங்கள் வரையிலும் நீடிக்கும், எனவே ஒவ்வொரு மாதமும் ஒரு முறையாவது இந்த நடைமுறையைத் திரும்பவும் செய்யப் பரிந்துரைக்கிறோம்