உங்கள் பாத்திரங்களை கிருமிகளற்றதாகவும் உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகவும் வைப்பது எப்படி?

நாள் முழுவதும் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால் சமையலறை தொட்டியில் பாத்திரங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. உங்கள் குழந்தைகளுக்காக உங்கள் பாத்திரங்களை சுத்தமாகவும், கிருமிகளற்றதாக வைக்க சில வழிகளை காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

பாத்திரங்களை கிருமிகளற்றதாக்கதாகவும் பாதுகாப்பானதாக்கவும் சில குறிப்புகள்
விளம்பரம்
Vim Dishwash Gel

இன்றைய சூழலில் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்காக பிடித்த சிறப்பான சில உணவுகளை செய்வதற்காக நாம் அனைவரும் சமையலறையில் வேகமாக செயல்பட வேண்டியுள்ளது. இதனால் நம் சமையல் திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இருந்தாலும் உணவை சமைத்த பின்னால் தொட்டியில் நிரம்பும் அழுக்கான பாத்திரங்களோடு போராடும் நிலையை நம்மால் தவிர்க்க முடியாது. பாத்திரங்களில் ஒட்டியுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் எஞ்சியுள்ள பொருட்களின் மூலம் கிருமிகள், பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புகள் உள்ளது. மேலும், தொற்றுநோய் காலத்தில் சுத்தத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டோம். அதிலும் அவசரமாக சுத்தம் செய்த பாத்திரத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நாம் எப்போதுமே விரும்பியதில்லை. வீட்டுப் பொருள்களான ஆப்பசோடா, வினிகர் போன்றவைகளால் பாத்திரங்களில் உள்ள கிருமிகளை அகற்ற முடியாது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் பாத்திரங்களை பளிச்சென்று தூய்மையாக வைத்திருக்கவும், குழந்தைகளை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும் பின்வரும் எளிய வழிகளை பின்பற்றுங்கள்.

உனக்கு தேவைப்படும்:

  • ஸ்கிரப்பர் / ஸ்கிரப் பிரஷ்
  • ஸ்பான்ஜ்
  • விம் டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட்
  • உப்பு
  • துணி / பேப்பர் டவல்
விளம்பரம்
Vim Dishwash Gel

வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானவர்கள்  மொறுமொறுப்பான தோசை செய்வதற்கு வார்ப்பிரும்பு தவாவையும் குழந்தைகளுக்காக முட்டைகள் சமைக்க வார்ப்பிரும்பு வாணலியை பயன்படுத்துகிறோம். இதில் எதுவாயினும் பாத்திரத்தின் மேல்பூச்சு கெடாமல் அதை திறம்பட சுத்தம் செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆதலால், வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை கிருமிகளின்றி எளிதாக சுத்தம் செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

  1. வழிமுறை 1: சூடான நீரால் கழுவுங்கள்

    முதலில் ஒட்டியுள்ள உணவுத்துகள்களை நீக்குவதற்கு சூடான ஓடும் நீரில் கழுவ வேண்டும். இல்லையென்றால் பாத்திரங்களை நீரில் 3-5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, ஆறிய பிறகு திடமான பிரஷால் சுத்தம் செய்யலாம்.

  2. வழிமுறை 2: சிறிதளவு சோப்பை பயன்படுத்துங்கள்

    வார்ப்பிரும்பு பாத்திரங்களில் படிந்துள்ள எண்ணெய் மற்றும் கடினமான கறைகளை நீக்க ஆன்டி பாக்டீரியல் டிஷ்வாஷிங் லிக்விட்டால் கழுவ வேண்டும். எஞ்சிய உணவுகள், நீக்குவதற்கும் கடினமான எண்ணெய் பிசுக்குகள் போன்றவற்றால் உருவாகும் கிருமிகளிலிருந்து பாத்திரங்களை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் பலமுறை போராடி இருக்கிறோம். ஒட்டியிருக்கும் உணவுத்துகள்கள் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு புகலிடமாக அமைகிறது. இருப்பினும், நாங்கள் விம் டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட் பயன்படுத்திய போது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பயன்படுத்திய பிறகு எண்ணெய் மற்றும் கடினமான கறைகள்  உடனடியாக நீங்கிவிட்டது. அதில் வேம்பின் குணம் நிறைந்துள்ளது என்பதை அதன் பேக்கிங்கை பார்த்த பின் அறிந்து கொண்டோம். வேம்பில் கிருமிகளிலிருந்து காப்பாற்றும் ஆற்றல் நிறைந்துள்ளதால், நம் நாட்டில் வேம்பை கிருமி நாசினியாக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம். இதைப் பயன்படுத்திய பின் பாத்திரங்கள் நறுமணத்தோடு பளிச்சென்று மின்னுவதைக் கண்டோம். இந்த டிஷ்வாஷ் லிக்விட்-ன் சிறப்பு அம்சம் என்னவென்றால் உலர்ந்த பின் பாத்திரங்களில் எவ்வித வெண் நிற கறைகளும் இல்லை.

  3. வழிமுறை 3: பாத்திரங்களை நன்றாக உலரவிடுங்கள்

    பொதுவாக, பாத்திரங்களை கழுவிய பின் துணி அல்லது பேப்பர் டவலால் துடைத்து உலர விடுவோம். இரும்பில் சிறு  நீர்த்துளி இருந்தாலும் பான் துருப்பிடிக்கும் என்பதனால் நாங்கள் வார்ப்பிரும்பு பாத்திரங்களை உலர வைக்க நீர்த்துளிகள் முழுவதும் ஆவியாகும் வரை 30 வினாடிகள் அடுப்பில் வைத்தோம். இதனால் ஈரப்பதம் ஏதும் இல்லாமல் உலர்ந்து விட்டது என்பதை அறிந்து கொண்டோம்.

  4. வழிமுறை 4: வார்ப்பிரும்பு பாத்திரங்களை மறுபடியும் பதப்படுத்துங்கள்

    பாத்திரங்கள் காய்ந்த பின் சூட்டிலிருந்து எடுத்து, அதன் உட்பகுதியில் சில துளி சமையல் எண்ணெயை தேய்த்து பதப்படுத்துங்கள். வார்ப்பிரும்பு பாத்திரங்களை ஒவ்வொரு முறை சுத்தம் செய்த பிறகும் பதப்படுத்துதல் அவசியமானது என்பதை அறிந்து கொண்டோம். இவ்வாறு செய்வதன் மூலம் பாத்திரத்தின் மேற்புறத்தில் எவ்வித வரட்சியும் இல்லாமல் சமைப்பதற்கு ஏற்றதாக மாறிவிடும். பாத்திரங்களின் மேற்பரப்பை துடைக்க பேப்பர் டவலை உபயோகிக்க பரிந்துரை செய்கிறோம். இதன் மூலம் அதிகமான எண்ணெய் பிசுப்பை அல்லது ஈரத்தை துடைக்கலாம்.

வெட்டும் பலகைகளை சுத்தம் செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானோர் குழந்தைகளுக்கு பழங்களை நறுக்கவோ அல்லது இறைச்சியை வெட்டி பர்கர் பாட்டீஸ் தயாரிக்கவோ சமையலறையில் உள்ள மரம் அல்லது பிளாஸ்டிக் வெட்டும் பலகைகளை பயன்படுத்துகிறோம். இறைச்சி மற்றும் காய்கறி பொருட்களுக்கு என்று வெவ்வேறு வெட்டும் பலகைகளை உபயோகிப்பதன் மூலம் மாசு பரவுவதை தவிர்க்கலாம். மேலும் பலகைகளை சுத்தம் செய்வதற்காக  கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. வழிமுறை 1: வெட்டும் பலகைகளில் ஒட்டியுள்ளவற்றை நீக்க நன்றாக கழுவுங்கள்

    வெட்டும் பலகைகளை முதலில் சூடான நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள்

  2. வழிமுறை 2: முழுமையாகத் தேயுங்கள்

    டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட் -ஐக் கொண்டு பலகையை ப்ரஷ் அல்லது ஸ்பான்ஜினால் தேய்த்து சுத்தப் படுத்துங்கள். ஒருவேளை மேற்பகுதியில் கத்தியின் அடையாளங்கள், கீறல்கள் அல்லது பள்ளங்கள் ஏற்பட்டிருந்தால் கூடுதலாக தேய்த்து கழுவுங்கள். இதன் மூலம் இத்தகைய இடங்களில் பாக்டீரியாக்கள் வளரும் சூழலை தடுக்கலாம். வெட்டும் பலகைகளை ஒரே பக்கம் பயன்படுத்தினாலும் இருபுறமும் சுத்தம் செய்வது சிறந்தது அதிலும் குறிப்பாக இறைச்சியை நீங்கள் கையாளும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். இறைச்சியின் சாறு மறுபுறத்திலும் வழிந்து பலகையின் மறுபக்கத்தையும் அசுத்தமாக்கி விடும். விம் டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட்- ல் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருட்களான வேம்பு மற்றும் யூகலிப்டஸ்-ஆல் ஆனது. ஆதலால் இதைப் பயன்படுத்துவதன் மூலம் வெட்டும் பலகைகளில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என்பதை கண்டறிந்தோம். பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். FDA அங்கீகாரம் பெற்ற இந்த தயாரிப்பானது சமையலறை சார்ந்த அனைத்தையும் சுத்தம் செய்வதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்று கூறுகிறோம்.

  3. வழிமுறை 3: வெட்டும் பலகைகளை அலசி கழுவுங்கள்

    தேய்த்து கழுவிய பின், வெட்டும் பலகைகளை குழாய் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் பலகையில் இருக்கும் அழுக்குகளை நீக்கலாம். பிளாஸ்டிக் பலகைகளை டிஷ்வாஷரில்  கழுவலாம், டிஷ்வாஷரில்  மரத்திலான வெட்டும் பலகைகளை சுத்தம் செய்தால் அதில் விரிசல் ஏற்படலாம் ஆதலால் மரப் பலகையை கையால் கழுவ வேண்டும் என்பதைக் எப்போதுமே நினைவில் வையுங்கள்.

  4. வழிமுறை 4: வெட்டும் பலகையை உலர விடுங்கள்

    மரம் அல்லது பிளாஸ்டிக் வெட்டும் பலகைகளை சுத்தம் செய்த பிறகு சரிவாக வைப்பதனால் அது முழுமையாக காய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

சீஸ் துருவியை சுத்தம் செய்வது எப்படி ?

குழந்தைகள் விரும்பும் உணவாக சீஸ் இருப்பதால் சமையலறையில் சீஸ் துருவியை அடிக்கடி உபயோகிக்க வேண்டி இருக்கும். ஆனால் துருவியின் கண்களுக்கிடையே மாட்டிக் கொள்பவைகளை சுத்தம் செய்வது கடினம் என்பதால் அது கிருமிகள் இன்றி இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். கவலைப்படாதீர்கள், இந்த வழிமுறைகளை பின்பற்றி சீஸ் துருவியை எளிதாக சுத்தம் செய்யுங்கள்

  1. வழிமுறை 1: சோப்புத் தண்ணீரில் ஊற வையுங்கள்.

    சீஸ் துருவி போன்ற ஸ்டீல் சமையல் உபகரணங்களை டிஷ்வாஷரில் சுத்தம் செய்தால் தேய்ந்து போக வாய்ப்பு உள்ளது. ஆதலால் அவற்றை கைகளால் சுத்தம் செய்ய பரிந்துரை செய்கிறோம். உபயோகித்த உடனே சுத்தம் செய்வதால் சீஸ் அல்லது காய்கறிகள் காய்ந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்கலாம் என்று எங்களுடைய அனுபவத்தில் அறிந்து கொண்டோம். சமையல் உபகரணங்களை சுத்தம் செய்ய முதலில் வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் 30 - 40 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். சோப்புத் தண்ணீரை தயாரிக்க இரு துளிகள் விம் டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட்  போன்ற ஆன்டி பாக்டீரியல் டிஷ்வாஷிங் லிக்விட்டின் நீரில் கலக்குங்கள்.

  2. வழிமுறை 2: ஸ்பான்ஜை பயன்படுத்துங்கள்

    அடுத்ததாக, சோப்பு கலந்த ஸ்பான்ஜை உபயோகித்து துருவியில் ஒட்டிஇருக்கும் சீஸ் துகளை நீக்கவும், பிளேடுகள் இருக்கும்  பக்கத்தில் சுத்தம் செய்யவும். துருவியை கவனமாக சுத்தம் செய்வதால்  உங்கள் கை/விரல் ஏற்படும் கீறல்களை தவிர்க்கலாம். பிறகு சூடான நீரால் அலசி கழுவுங்கள்.

  3. வழிமுறை 3: துருவியை உலர விடுங்கள்

    நாங்கள் சீஸ் துருவி மற்றும் ஸ்டீல் பாத்திரங்களை உலர வைக்க  மைக்ரோ ஃபைபர் டவலினால் துடைக்கிறோம்.

விஸ்க்-ஐ சுத்தம் செய்வது எப்படி?

விஸ்க்-ஐ சுத்தம் செய்வது மிகவும் சவாலானது, அதிலும் பாக்டீரியாக்கள் வளரக்கூடிய உணவு பொருட்களான முட்டை அல்லது பிசு பிசுபிசுப்புத் தன்மை அதிகம் உள்ள ஆலிவ் எண்ணெய்யில் பயன்படுத்திய பிறகு அதை சுத்தப்படுத்தும் போது சற்றுக் கூடுதலான கவனம் அவசியம். வையர்களுக்கு இடையே இருக்கும் உணவு துகள்களை அகற்ற சோப்பில் நனைத்த ஸ்பான்ஜைக் கொண்டு சுத்தம் செய்தோம். ஆனால், சில முயற்சிகளுக்குப் பின் இறுதியாக நாங்கள் இதற்கான சிறந்த தீர்வினை கண்டறிந்தோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்கள் விஸ்கினை சுத்தம் செய்யுங்கள்.

  1. வழிமுறை 1: சோப்புத் தண்ணியை செய்திடுங்கள்

    சிறிதளவு ஆன்டி பாக்டீரியல் டிஷ்வாஷிங் லிக்விட்டை தண்ணீரில் கரைத்து சோப்புத் தண்ணியை செய்யுங்கள்.

  2. வழிமுறை 2: நீங்கள் அதைப் பயன்படுத்துவதைப் போலவே சுத்தம் செய்யுங்கள்.

    முட்டையை அடிப்பதைப் போலவே சோப்பு நீரில் நன்றாக சுழற்றுங்கள். இதனால் விஸ்க்கின் அனைத்து பறப்புகளும் சுத்தம் ஆகும்.

  3. வழிமுறை 3: நன்றாக கழுவுங்கள்

    சோப்பின் தன்மை முழுவதும் நீங்கும் வரை சூடான நீரில் சுழற்றுங்கள்.

  4. வழிமுறை 4: விஸ்க்-ஐ நன்றாக உலர விடுங்கள்

    நாங்கள் சமையலறை மேடையில் வைத்து காற்றில் உலர விடுவோம். உடனடியாகப் பயன்படுத்த வேண்டுமெனில்  சமையலறை துண்டைக் கொண்டு துடையுங்கள்.

கத்திகள், மரக் கரண்டிகள் மற்றும் சப்பாத்தி கட்டையை சுத்தம் செய்வது எப்படி ?

கத்திகள், மரக் கரண்டிகள் மற்றும் சப்பாத்தி கட்டைகள் டிஷ்வாஷரில் கழுவக்கூடாது, ஏனெனில் வெப்பம் மற்றும்  டிட்டெர்ஜென்ட்கள் அவற்றை விரைவாக சேதப்படுத்தும்.

  1. வழிமுறை 1: சோப்பு நீரில் ஊற வைக்கவும்

    விம் டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட் - ஐ நீரில் கலந்து, அதில் இந்த பொருட்களை போட்டு ஊற விடுங்கள். கத்தி வெளியில் தெரியும்  அளவிற்கு நீரில் ஊற வையுங்கள். மேலும் கூர்மைப் பகுதி எதிர்புறம் இருக்கும் மாறு ஊற விடுங்கள். இல்லையெனில் யாராவது தண்ணீருக்குள் கையை விட்டு , குறிப்பாக குழந்தைகள் வெட்டிக் கொள்ளலாம். மரக் கரண்டிகளை நீண்ட நேரம் ஊற வைக்கக் கூடாது இல்லையெனில் மர சாமான்கள் பழுதாகிவிடும் என்பதை நாங்கள் கவனித்தோம்.

  2. வழிமுறை 2 : நன்றாக தேய்த்துக் கழுவவும்

    கத்தியில் இருந்து கறையை நீக்கவோ அல்லது சப்பாத்தி கட்டையில் ஒட்டி இருக்கும் மாவை நீக்க , அவற்றை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

  3. வழிமுறை 3 : ஒழுங்காக அலசவும்

    மேற்பரப்பில் இருக்கும் சோப்பு நீங்கும் வரை அலசுங்கள்.

  4. வழிமுறை 4: உலரும் வரை துடைக்கவும்

    தண்ணீரில் கழுவிய பின் அவற்றை உலர வைக்கவும். மரக்  கரண்டி மிகவும் உலர்ந்ததாகத் தெரிந்தால் அதில் சமையல் எண்ணெயை தடவுங்கள்.

முழு சமையலறையையும் சுத்தம் செய்யுங்கள்

பாத்திரங்களை சுத்தம் செய்த பின் முழு சமையலறையையும் சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் அதாவது சமையலறையில் உள்ள வெவ்வேறு பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். சமையல் மேடை, சமையலறை தொட்டி, கேஸ் ஸ்டவ் போன்ற மேற்பரப்புகள் இதில் அடங்கும். நான்- ஸ்டிக் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

நீங்கள் நான்- ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகு அதை மாற்றுவதை உறுதிசெய்யுங்கள். ஆனால் பாத்திரம் சேதமடைந்தால், அதை பயன்படுத்தாமல் இருப்பது   நல்லது.  விண்டு போன  அல்லது கீறல் விழுந்த நான்- ஸ்டிக் பான்கள் நச்சு பொருட்களை  வெளியிடுகின்றன என்பதை நாம் அறிவோம். அதிக வெப்பத்தில் சமைப்பதால் இந்த பேன்களில் உள்ள மேற் பூச்சுகள் சேதம் அடையும். உங்கள் நான் - ஸ்டிக் பான்கள் சேதமாவதை தடுக்க, மரக்  கரண்டிகளை மட்டுமே பயன்படுத்துங்கள், ஸ்டீல்  ஸ்க்ரப்பர்களைத் தவிர்த்து விடுங்கள் , மேலும் பான்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைப்பதைத் தவிர்த்திடுங்கள். விம் டிஷ்வாஷ் ஆன்டி பாக் லிக்விட் நான்- ஸ்டிக் பாத்திரங்களுக்கு எந்த ஒரு  சேதமும்  ஏற்படாமல் அதை  திறம்பட சுத்தம் செய்கிறது என்பதை நாங்கள் கவனித்தோம். நான்- ஸ்டிக் சமையல் பாத்திரங்களை எப்போவாவது ஒரு முறை குறைந்த தீயில் பயன்படுத்தலாம்.  தினசரி சமையலுக்கு, துருப்பிடிக்காத ஸ்டீல்  பாத்திரங்கள் அல்லது வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது  நல்லது.

முக்கியமான வழிமுறை

சமையலறை ஸ்பான்ஜானது பாக்டீரியாக்கள் நிறைந்த வீட்டு பொருட்களில் ஒன்றாகும். இதனால்தான் இந்த ஸ்பான்ஜை  சுத்தப்படுத்துவது  மிகவும்  அவசியம். பாக்டீரியா பரவலை அல்லது அழுக்கின் பரவலை  தடுக்க  பாத்திரங்களுக்கு என்று ஒரு ஸ்பான்ஜும் மேடை, சிந்திய உணவை சுத்தப் படுத்துவதற்கென்று தனியாக ஸ்பான்ஜ் பயன்படுத்துங்கள். மேலும் அவ்வப்போது அதை சுத்தம் செய்யவும் மாதத்திற்கு ஒரு முறை அதை மாற்றவும் மறக்காதீர்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது