ஒரு தொட்டி பாத்திரத்தை சீக்கிரம் சுத்தம் செய்ய

பாத்திரங்கள் கழுவுவது என்பது மிகவும் கடினமான வேலை என்பதால் நம்மில் பலர் அதைச் செய்ய விரும்புவதில்லை. ஆனால் இந்த எளிய வழிகளை பின்பற்றி விரைவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

ஒரு தொட்டி பாத்திரத்தை சீக்கிரம் சுத்தம் செய்ய
விளம்பரம்
Vim Dishwash Gel

ஒரு வீட்டினுடைய சுத்தம் ,சுகாதாரம்  போன்றவைகளை சமையலறை மற்றும் குளியலறைகளின் நிலையை வைத்து மதிப்பீடு செய்யலாம் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு தடவை உணவு சமைத்த பின்பு விழும் பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தமாக வைப்பது என்பது நமக்கு மிகவும் கடினமான வேலையாகும். ஆதலால் கறை படிந்த பாத்திரங்களை  கழுவுவது சாதாரண வேலையாக மாற்ற எண்ணினோம். உபயோகித்த பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுவதன் மூலம் சமையலறை சுகாதாரத்தை எளிதாக பராமரிக்கலாம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதோடு பாத்திரங்களிலுள்ள கடினமான கறை, எண்ணை பிசுக்குகள் போன்றவற்றை நீக்க சிறந்த டிஷ்வாஷ் டிடர்ஜென்ட் அவசியம். வீட்டுப் பொருட்களான  ஆப்ப சோடா,வினிகர்  போன்றவற்றை பயன்படுத்தி பார்த்ததில் எந்தவித பலன் அளிக்காததால் நாங்கள் இதை கூறுகிறோம். மேலும் பாத்திரங்களில் தங்கி இருக்கும் வாசனை நீக்குவதற்கும்  வீட்டுக் குறிப்புகள் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. ஆனால் இதை நினைத்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.  கறைப் படிந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்காக நாங்கள் சில வழிகளை முயற்சி செய்த பின் அதை  உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

1.  முடிந்தவரை உடனுக்குடன் பாத்திரங்களை சுத்தம் செய்யுங்கள்

பாத்திரங்களை உடனுக்கு உடனே சுத்தம் செய்வதனால் வேலை எளிதாக முடியும் என்பதை நாங்கள் புரிந்து  கொண்டோம். பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் உணவினை  உடனடியாக சுரண்டி  எடுத்துவிட்டால் பிறகு அதை தேய்ப்பதற்கு என்று நீண்ட நேரம் செலவழிக்க  வேண்டிய அவசியமில்லை. இதை செய்வதன் மூலம் நீங்கள்  கடினமான கறைகளை அகற்றுவதற்காக அதிக அளவில் டிஷ்வாஷிங் லிக்விட் அல்லது தண்ணீர் செலவாகாது அதே சமயம் உங்கள் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தலாம்

2.  பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் உணவு மற்றும் எண்ணெய்ப் பசையை உடனே அகற்றுங்கள்

ஒவ்வொரு முறையும் பாத்திரத்தில் மிஞ்சியுள்ள உணவை உடனடியாக அகற்றுவது நமக்கு உதவியாக இருக்கும்  என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். இதனால் வடிகாலில்  சேரும் குப்பைகளை  தவிர்க்கலாம், இது சுத்தமான குழாய்களாக இருப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும் உணவு கழிவுகளால் ஏற்படும் குழாய் அடைப்புகளை தவிர்க்க சமையலறை தொட்டியில் வடிகட்டி ஒன்றை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.

விளம்பரம்
Vim Dishwash Gel

3.  பாத்திரங்களை அளவிற்கு ஏற்ப அடுக்கி வையுங்கள்

“எந்த ஒரு விஷயத்திலும் திட்டம் தீட்டுதல்  அல்லது  அதற்கென்று ஒழுங்கான முறைகளை கடைப்பிடித்தல் என்பது  நாம் செய்யும்  வேலையை எளிதாக்கும்” என்ற உண்மையை நாங்கள்   நம்புகிறோம். இதே பழக்கமானது பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும் பொருந்தும். ஒரே மாதிரியான பாத்திரங்களை பிரித்து வகைப்படுத்துவதன் மூலம் ஒன்றோடு ஒன்று  கலந்திருக்கும் பாத்திரங்களை  பிரிக்கும் நேரத்தை குறைத்து  வேலையை சுலபமாக்கும். பாத்திரங்களை பிரமீட் வடிவில் அடுக்குங்கள்- உ-ம். மேலே சிறிய கிண்ணங்கள், தட்டுக்களில் ஆரம்பித்து அதற்குக் கீழ் பெரிய தட்டுகள், மிகப்பெரிய தட்டுகளை வையுங்கள் – டெட்ரிஸின் விளையாட்டு போல நினைத்து செய்யுங்கள். கண்ணாடி பொருட்கள் அல்லது மென்மையான பொருட்களை பாதுகாப்பாக சமையல் மேடையில் சிங்க் அருகே வைத்து கடைசியில் சுத்தம் செய்யுங்கள்.

4.  சூடான நீரில் பெரிய பாத்திரங்களை முன்கூட்டியே ஊற வையுங்கள்

அழுக்குகள் மற்றும் எண்ணெய் கறை படிந்த பாத்திரங்களை சூடான நீரில் ஊற வைப்பதன் மூலம் கறைகளை நீக்குவது சுலபம் என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டோம். உணவை சமைக்க மற்றும் பரிமாறும் பாத்திரங்களில் நீண்ட நேரம் எடுக்கும், ஏனெனில் அவை வழக்கமாக அதிகமான உணவு கறைகளை கொண்டுள்ளது.                            சுத்தம் செய்வதற்கான விரைவான செயல்திறனுள்ள ஒரே வழி, பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்பு நீரில் ஊற வையுங்கள். சூடான நீரில்  அழுக்குகள், தங்கி இருக்கும் கறைகள், எண்ணெய் சுக்குகள், மசாலா கறைகளையும் நீக்கும் சக்தி வாய்ந்த  விம் டிஷ்வாஷ்  லிக்விட் ஜெல் போன்ற  லிக்விட் டிஷ்வாஷ் ஜெல்-ஐ அதில் விட்டு  15-30 நிமிடங்கள் வரை  ஊற வைத்த பிறகு தேய்த்து எடுங்கள். இந்த லிக்விட் டிஷ்வாஷ் ஜெல் அனைத்து வகையான அழுக்குகளை நீக்குவதற்கு சிறந்த தீர்வாக அமையும். பாத்திரங்கள் உலர்ந்த பின் அதில் எந்த ஒரு  வெண்மையான கறைகளும்  இருக்காது.  விலை உயர்ந்த பொருட்களை எவ்வாறு சுத்தம் செய்வது? என்கிற கவலை இனி உங்களுக்கு வேண்டாம். நாங்கள் விம் டிஷ்வாஷ் லிக்விட் ஜெல்- ஐ  பயன்படுத்தி கண்ணாடி பொருட்கள் அல்லது விலை உயர்ந்த பீங்கான் பொருட்களை சுத்தம் செய்து பார்த்தோம். இதனால் எந்த கீறல்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை கவனித்தோம். ஆதலால் இதை எவ்வித பயமின்றி  நீங்களும் உபயோகிக்கலாம்.

5. பாத்திரங்களை வரிசைப்படுத்திவிட்டு தேய்த்து கழுவுங்கள்

பாத்திரங்களை வரிசைப்படுத்துதல் தேய்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். சுத்தமான பாத்திரத்தில் தொடங்கி அழுக்கான பாத்திரங்கள் செல்வது சிறந்தது. இதனால் எண்ணெய் பிசுக்குகள், உணவு பொருட்கள் மற்றும் கிருமிகள் பாத்திரங்களுக்கிடையே பரவுவதைத் தவிர்க்கலாம்.

நீங்கள் எல்லா பாத்திரங்களையும் கைகளால் தேய்க்க வேண்டுமென்றால் pH நியூட்ரல் பார்முலா உள்ள விம் டிஷ்வாஷ் லிக்விட் ஜெல் போன்ற டிஷ்வாஷ் லிக்விடை தேர்ந்தெடுக்க வேண்டும். இதைப் பயன்படுத்தி தொட்டி நிறைய உள்ள பாத்திரங்களைத் தேய்த்தாலும் கைகள் மென்மையாக இருக்கும். தேய்பதற்கு  இவ்வளவு  பாத்திரங்கள்  இருக்கிறதே?  என்ற கவலையை விடுங்கள்!  ஒரே ஒரு ஸ்பூன் விம் டிஷ்வாஷ் லிக்விட் ஜெல் வைத்து அனைத்தையும் எளிதாக  சுத்தப்படுத்தலாம். விம் டிஷ்வாஷ் லிக்விட் ஜெல்-ஐ பயன்படுத்தி உங்களுடைய பொன்னான நேரம், தண்ணீர் மற்றும் பணம் ஆகியவற்றை மிச்சப்படுத்துங்கள்.

6.  குழாயில் இருந்து வரும் நீரில் பாத்திரங்களை கழுவுங்கள்

பாத்திரங்களை நன்றாக தேய்த்த பிறகு தொட்டி நீரில் அமிழ்த்தி கழுவுவதை விட  குழாயில் இருந்து வரும் நீரில் சுத்தம் செய்வதனால் வேலையை சீக்கிரமாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். டிஷ்வாஷ் லிக்விட் பயன்படுத்தினால் பாத்திரங்களை நன்றாக கழுவ வேண்டும். விம் டிஷ்வாஷ் லிக்விட் ஜெல்-ஐ  கொண்டு பாத்திரத்தை சுத்தம் செய்த பிறகு  எந்தவித கறையும் விட்டுச் செல்லாது. அதனால் ஒவ்வொரு நாளும் உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய இதையே பயன்படுத்துங்கள் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

7.  பாத்திரங்களை நன்கு உலர விடுங்கள்

சுத்தம் செய்த பாத்திரங்களை உலரச் செய்வதிலும் அதன் தூய்மை அடங்கி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? முக்கியமான இந்த பகுதியை நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். காற்றில் பாத்திரங்களை உலர விடுவது என்பது மிகவும் சிறந்தது. ஆதலால் ஈரமான பாத்திரங்களை உலரவைக்க தனியாக ராக்குகளை பயன்படுத்தி காற்றில் காய வையுங்கள். இதனால் ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித் தனியாக துடைத்துக் கொண்டிருக்காமல் நம் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். எனினும், அவசரமான நேரத்தில் சுத்தமான டவலினால் கண்ணாடி பாத்திரங்கள், கிண்ணங்கள் போன்றவற்றை துடையுங்கள்.

8. அடிக்கடி பத்திரம் தேய்க்கும் ஸ்பான்ஜை  மாற்றுங்கள்

ஒரே ஸ்பான்ஜ்- ஐ பல நாட்களாக உபயோகப்பதன் மூலம் பாத்திரம் சுத்தம் செய்வதற்காக அதிக  நேரம் செலவிட வேண்டி இருக்கும் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அடிக்கடி ஸ்க்ரப் பேட்ஸ்- ஐ / ஸ்பான்ஜ்- ஐ  மாற்றுவதால் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி பாத்திரங்களும் எப்போதும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பாத்திரங்களுக்கு தகுந்த ஸ்கிரப்பர்களை உபயோகித்தால் அவை நீண்ட நாட்களுக்கு  வரும். ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களுக்கு ரெகுலர் ஸ்கிரப் பேட்ஸ் பயனுள்ளதாகவும், ஸ்பாஞ்ச் அல்லது ஃபோம் ஸ்கிரப் பேட்ஸ் செராமிக் மற்றும் கண்ணாடி பாத்திரங்களுக்கும், ஸ்டீல் ஸ்கிரப் பேட்ஸ் அலுமினிய பாத்திரங்களுக்கும் உகந்தது என்று நாங்கள் அனுபவத்தில் மூலம் அறிந்து கொண்டோம்.

இந்த குறிப்புகளை நீங்கள் முயற்சி செய்வதன் மூலம், குவிந்து கிடக்கும் தட்டுகள், கிண்ணங்கள், மற்றும் பாத்திரங்களை வேகமாகவும், எளிதாகவும் சுத்தம் செய்ய முடியும்.

சிறந்த குறிப்பு: பாத்திரங்கள் தேய்ப்பதற்கும் கழுவுவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் குழாயை மூடுவது அவசியம். இல்லாவிடில், அதிக அளவிலான தண்ணீர் வீண் விரையமாகும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது