உங்கள் தோசை கல்லை (தோசை பான்) சுத்தம் செய்ய எளிதான வழிகள்.

தோசை கல் வைத்த உங்கள் அடுப்பை அணைக்க மறந்துவிட்டீர்களா? நீங்கள் மீண்டும் தோசை கல்லை தீய விட்டு விட்டீர்களா? கவலைப்பட வேண்டாம், கரிந்து போன தோசைக்கல்லை எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Easy Steps to Clean Your Dosai Kal (dosa pan)
விளம்பரம்
Vim Dishwash Gel

தோசை தென்னிந்தியாவின் மிகவும் விருப்பமான காலை உணவு. இந்திய வீடுகளில் தோசைக்கு தனி கல் உள்ளது. வேறு எந்த சமையல் பான்களையும் போலல்லாமல், தோசை கல்லிற்கு கூடுதல் கவனிப்பு தேவை, சரியான கல் இல்லாமல் சரியான தோசையை நாம் பெற முடியாது. உங்கள் தோசை கல்லை எவ்வாறு சுத்தம் செய்து பராமரிப்பது என்பதைப் இங்கே பார்ப்போம். 

உங்கள் தோசை கல்லை சுத்தம் செய்ய பின்வரும் வழிகளை பின்பற்றவும்:

Step 1: குளிர விடவும்

முதலில் தோசை கல்லை குளிர்விக்க அனுமதிக்கவும், வெப்பம் வெளியேறும் வரை அதை ஓரமாக எடுத்து வைக்கவும்.

Step 2: கத்தி / ஸ்பூன்

கத்தி அல்லது கரண்டியால், கல்லில் ஒட்டியிருக்கும் தோசையை மெதுவாக நீக்கவும். அதிக அழுத்தம் கொடுத்து, கல்லின், மேல்பூச்சை சேதப்படுத்த வேண்டாம்.

விளம்பரம்
Vim Dishwash Gel

Step 3: ஊறவைக்கவும்

ஒரு பெரிய கிண்ணம் அல்லது வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, பாத்திரம் கழுவும் திரவத்துடன் கலந்து, அதற்குள் தோசை கல்லை வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும்.

Step 4: துடைக்கவும்

இப்போது தோசை கல்லை எடுத்து, கடினமான கறையை அகற்ற, வட்ட வாக்கில், சிராய்ப்பு இல்லாத ஸ்க்ரப்பர் கொண்டு மெதுவாக தேய்க்கவும். எண்ணெய் கறைகள் முழுமையாக நீக்குவதற்கு, உள்ளேயும் வெளியேயும் நன்கு தேய்த்து சுத்தம் செய்வதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 5: கழுவவும்

நன்றாக துடைத்த பிறகு, தோசை கல்லை குழாயில் வரும் தண்ணீரில் கழுவவும்.

Step 6: திசு காகிதம்

எந்தவொரு எண்ணெய் பிசுக்கையும் அகற்ற, உலர்ந்த திசு காகிதத்தினால் அவற்றை துடைக்கவும்.

Step 7: வெங்காய வைத்தியம்

கல்லை பயன்படுத்துவதற்கு முன், அடுத்த முறை, ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, எண்ணெயில் லேசாகத் தொட்டு கல்லில் தேய்க்கவும். கல்லில் ஒட்டிக் கொள்ளாமல் நன்றாக தோசை செய்வதற்கு இது உதவுகிறது.

உங்கள் தோசை கல் சமைக்க தயாராக உள்ளது!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது