
பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்மை வந்து சேர்வதற்கு முன்பு பல கைகள் மாறியிருக்கும் என்பதை நாம் அறிந்திருப்போம், இதனால் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளின் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? எதிர்பாராதவிதமாக, இத்தகைய அசுத்தங்களை நீக்குவதற்கு வெறும் நீரால் மட்டுமே கழுவுவது போதாது என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். இதைத் தொடர்ந்து காய்கறிகளை பேக்கிங் சோடாவால் கழுவுவது, வினிகர் போன்ற பொருட்களை வைத்து சுத்தம் செய்வது போன்ற வீட்டுக் குறிப்புகளையும் கடைப்பிடித்து விட்டோம். இவ்வாறான எவ்வித முயற்சிகளாலும் உணவு பொருட்களில் இருக்கும் அசுத்தங்களை நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நீக்கமுடியவில்லை. மேற்கூறிய முயற்சிகளின் உதவியுடன் இந்தப் பிரச்சனைக்கான தீர்வானது ஒன்று இல்லை என்றும் இந்தப் பிரச்சனையை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து அவை அனைத்திற்கும் ஒருசேர தீர்வினைக் கண்டறிய வேண்டும் என்கிற முடிவினை எட்ட முடிந்தது. வீட்டிற்காக பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வரும் போது அதில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தம் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய 5 வழிமுறைகளை இங்கே காண்போம்
1) கைகளை முழுமையாக கழுவ வேண்டும்
கிருமிகள் பரவுவதை தடுப்பதற்காக உங்களின் கைகளைக் கழுவுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் சுத்தம் செய்வதற்கு முன்பு, கைகளை வெதுவெதுப்பான நீரில் சோப் போட்டு 20 விநாடிகளுக்கு கழுவுங்கள். அதே போல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்த பிறகும் கைகளை கழுவுவதும் மிகவும் முக்கியம் என்பதை எங்களின் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டோம்.
2) சரியான முறையில் சுத்தம் செய்வதற்காக காய்கறிகள் மற்றும் பழங்களை பிரிக்கவும்
காய்கறிகள் மற்றும் பழங்களின் தோலின் வகை மற்றும் உறுதித் தன்மையானது ஒன்றல்ல என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஆதலால் சுத்தம் செய்வதற்கு முன்பே அவற்றை வகைப்படுத்தி பிரித்து வைப்பது என்பது மிகவும் அவசியம். பொதுவாக நாங்கள் பழங்கள் மற்றும் காய்கறி களை - உறுதியான தோல், மென்மையான தோல், பச்சை இலைக் காய்கறிகள் என்று வகைப்படுத்துகிறோம். பழங்கள் மற்றும் காய்கறி கிளீனர் பயன்படுத்தி சுத்தம் செய்வதற்கு முன்பு அதை நீரினால் கழுவுவதன் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களின் மேலுள்ள அழுக்குகள் மற்றும் தூசிகளை நீக்கலாம். பொருட்களை சுத்தம் செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய சில எளிய வழிமுறைகள் இங்கே உள்ளன:

உறுதியான தோல்களை உடைய உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பொருட்களை குழாய் நீரின் அடியில், மென்மையான பிரஷின் உதவியுடன் சுத்தம் செய்யலாம். இதன் மூலம் சிறிய துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கலாம்.
தக்காளி, காளான் போன்ற மென்மையான பொருட்களை குழாய் நீரின் அடியில், விரல்களால் தேய்த்து கழுவலாம்
முட்டைக்கோஸ், கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளின் வெளிப் புற இலைகளை முதலில் நீக்க வேண்டும் . அதே சமயம் வதங்கிய, அழுகிய, அல்லது நிறம் மாறிய இலைகளையும் நீக்க வேண்டும். இவை அனைத்தையும் நீக்கிய பின் நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
3) இயற்கையான பழம் மற்றும் காய்கறி கிளீனரை பயன்படுத்தலாம்
சமீபகாலமாக நுகர்வவரான நாம் ஒரு பொருளை தீவிர ஆராய்ச்சிக்கு பிறகே அதை வாங்குகிறோம், அதிலும் குறிப்பாக நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் எவ்வித இரசாயனங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கிறோம். பெற்றோரான நாம் நம் குழந்தைகளின் உணவிற்கு அதிக கவனம் செலுத்துகிறோம். காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல் துளைகளாலனது என்பது நாம் அறிந்த ஒன்று. எனவே அதை சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதனால் இயற்கை பொருட்களாலான கிளீனரை வெகுநாட்களாக மார்க்கெட்டில் நாங்கள் தேடி வந்தோம்.
அப்போது எந்த ஒரு இரசாயனமும் இல்லாத Nature Protect’s பழங்கள் மற்றும் காய்கறிகள் கிளீனரை நாங்கள் பயன்படுத்திப் பார்த்த பிறகே இதை உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். வேம்பு, துளசி, எலுமிச்சை, சிட்ரஸ் போன்ற இயற்க்கைப் பொருட்களால் ஆனது. வேம்பில் பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு சக்தி அதிகம், ஆதலால் வேம்பானது பழங்கள் மற்றும் காய்கறிகளைத் சுத்தப் படுத்தும் குணங்களை உடைய இயற்கை கிருமிநாசினி ஆகும். இதில் குளோரின், பிளீச், ஆல்கஹால் போன்ற இரசாயன பொருட்கள் இல்லாத காரணத்தால் எங்களுக்கு இந்தக் கிளீனரைப் பிடிக்கும். இந்தக் கிளீனரை வைத்து சுத்தம் செய்த பிறகு, பழங்கள் மற்றும் காய்கறிகள் அதன் பசுமைத் தன்மை மாறாமல் இருந்ததை நாங்கள் கவனித்தோம். உங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் கிருமிகளை நீக்குவதற்கான எளிய, வசதியான வழி இதுவே! கிளீனர் பாக்கிங்-ல் உள்ள நெறிமுறைகளை பின்பற்றி இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
4) சமையலறை மேடை மற்றும் பாத்திரங்களை தூய்மையாக வைத்திருங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் நறுக்கும் பலகை, பாத்திரங்கள், சமையலறை மேடை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்னும், பயன்படுத்திய பிறகும் சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டோம். இதனால் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோலை சீவும் போதும் நறுக்கும் போதும் அதிலிருந்து ஏற்படக்கூடிய தூய்மைக்கேடை தடுக்க இது எங்களுக்கு உதவுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தப்படுத்தும் வழிமுறையில் இந்த செய்முறையானது மிகவும் முக்கியம்.
இறைச்சி மற்றும் இதர அசைவ உண்ணுபவர்களின் கவனத்திற்கு, அசைவ உணவிற்கு என்று தனியாக கத்தி, நருக்கும் பலகைகள் பயன்படுத்துங்கள். அதேப் போல பாத்திரங்களை சுத்தம் செய்கையில் பாத்திரம் கழுவும் ஜெல் கொண்டு அதை சுத்தப்படுத்திய பின் சூடான நீரால் கழுவுங்கள்.
5) உணவுபொருட்களை வைக்கும் இடத்தின் சுத்தத்தை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்
பொதுவாக நாம் காய்கறிகளை ஃபிரிஜில் சேமித்து வைப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளோம், ஆதலால் அவ்வப்போது பழைய, கெட்டுப்போன தேவையற்ற பொருட்களை நீக்கி ஃபிரிஜை சுத்தப் படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதனால் புதிதாக வாங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகள் வைக்க இடமும் கிடைக்கும் அதே சமயம் பிற பொருட்களில் இருக்கும் கிருமிகளுடன் ஏற்படக் கூடிய தொடர்பையும் தவிர்க்கலாம். சமைப்பதற்காக பொருளை ஃபிரிஜிலிருந்து எடுத்த பிறகும் அதை சமைப்பதற்கு/பயன்படுத்துவதற்கு முன்பும் பழம் மற்றும் காய்கறி கிளீனரால் சுத்தப்படுத்த மறக்காதீர்கள். சில சமயம் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருக்கலாம், அவைகளை சுத்தப்படுத்துவதற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்தலாம் இதன்மூலம் பாக்டீரியா, தூசி மற்றும் இதர கிருமிகளிலிருந்து காக்கலாம்.
எல்லா நேரங்களிலும் சுத்தமான சுகாதாரமான உணவை பெறுவதற்காக நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மேற்கூறிய எளிய உதவிக்குறிப்புகளை பின்பற்றுங்கள்.