மாமிசம் மற்றும் முட்டையின் வாடையை பாத்திரத்திலிருந்து நீக்குவது எப்படி

சமைப்பது என்பது ஒரு கலை, ஆனால் அதற்கு பின்பு வரும் வேலைகள் அதிகமாகும், முக்கியமாக சமைத்த பாத்திரத்தில் இருந்து வரும் வாடை, அதுவும் இறைச்சி, மீன், மற்றும் முட்டை சமைத்தால் வாடை அதிகம். ஆனால் வாடையை போக்க வழிகள் இங்கே உள்ளன.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

அசைவ வாடையை நீக்க  | க்ளீனீபீடியா
விளம்பரம்
Vim Dishwash Gel

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டை ஆம்லெட், பட்டர் சிக்கன், அல்லது மட்டன் பிரியாணி போன்ற சமைத்த பாத்திரம் மற்றும் பரிமாறும் பாத்திரத்தில் அப்படியே வாடை போகாமல் இருக்கும், சில சமயங்களில் பாத்திரங்களை கழுவிய பின்பும் வாடை போகாமல் இருப்பது பலருக்கும் பிடிக்காத விஷயமாகும்.

கெட்ட வாடை மட்டும்மில்லாமல் அதில் படியும் கிரீஸ் அதைவிடக் கடினமானது. நம்மில் பலர் பாத்திரம் தேய்க்கும் சோப்பை பயன்படுத்துகிறோம், ஆனால் இதில் பாத்திரங்களை சுத்தம் செய்ய அதிகப்படியான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன ஆதனால் ரசாயன வாடையே அதிகம். மேலும் வாடையை போக்கும் மென்று சோப்பை பயன்படுத்தும் போது அதிக சோப்பு மற்றும் தண்ணீர் செலவாகிறது. இதை தவிர சில வீட்டு குறிப்பு சோப்/டிட்டர்ஜென்ட் போன்றவைகளை  செய்து பார்க்கின்றோம் ஆனால் எதுக்கும் போகாத வாடை மாமிச வாடையாகும்.எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு ஸ்க்ரப்ஸ் போன்ற வீட்டு குறிப்புகளையும் நாங்கள் பயன்படுத்தினோம், ஆனால், குறிப்பாக இறைச்சி அல்லது முட்டைகள் சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது இந்த குறிப்புகள் எதுவும் எங்களுக்கு உதவவில்லை. வாடையில் இருந்து தோல்வியுற்றதை தவிர்த்து, இதை அனைத்தையும் செய்யும் போது வழக்கமான சோப்பு நமது கை மற்றும் தோலில் அரிப்பு, நமைச்சல்  உண்டாக்குவது மின்றி பாத்திரத்திலும் வெள்ளை படுகிறது, இவை இரண்டுமே விரும்பத்தகாதவையாக உள்ளன.

இதை அனைத்தும் உங்களுக்கும் நடக்கிறதா? கவலை வேண்டாம் எங்களிடம் உள்ளது சுத்தமான பாத்திரங்களை பெறுவதற்கு முயற்சிக்கப்பட்டு மற்றும் பரிசோதிக்கப்பட்ட உங்களுக்கானா உதவி குறிப்புகள். பாத்திரம் பளபளக்கும் மற்றும் வாடையையும் போக்கும், இனி கவலையின்றி சமைக்கலாம்.

1.மீதமுள்ள உணவை பாத்திரத்திலிருந்து அகற்றவும். 

ஒரு நல்ல சுகாதார நடைமுறையாக, உங்கள் உணவுகளிலிருந்து எஞ்சியிருக்கும் மற்றும் உணவின் எச்சங்களை அகற்றுவது துர்நாற்றம் மேலும் பரவாமல் தடுக்க உதவுகிறது என்பது  உண்மை. இறைச்சி எலும்புகள், முட்டை ஓடுகள் போன்றவை உணவுகளுக்கு இடையில் இடமாற்றம் செய்து மற்ற பாத்திரங்களுக்கும் துர்நாற்றத்தை பரப்பக்கூடும், எனவே அவை உடனே குப்பைக்குள் செல்வதை உறுதிசெய்க!

விளம்பரம்
Vim Dishwash Gel

2. பாத்திரங்களை பிரித்து வைக்கவும்

வாடையை விட்டுச்செல்லும் உணவை சமைக்கவும் பரிமாறவும் சில பாத்திரங்கள் எப்போதும் இருக்கும், அதாவது இறைச்சி கறி தயாரிக்க பயன்படுத்தப்படும் குக்கர் அல்லது முட்டை ஆம்லெட் தயாரிக்கும் பான் போன்றவை .. எங்கள் அனுபவத்தில், கழுவுவதற்கு முன்பு மற்ற பாத்திரங்களில் இருந்து அவற்றைப் பிரித்து வைப்பது எப்போதும் அந்த நீடித்த வாசனை அடுத்த பாத்திரத்தில் பரவாமல் இருக்க உதவும்.

3.பாத்திரங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

எங்கள் விருப்பத்தேர்வில் சூடான நீரில் துர்நாற்றம் வீசும் பாத்திரங்களை விரைவாக கழுவ வேண்டும் , இப்படி செய்தால் பிடிவாதமான வாடையை அகற்ற உதவும், இது ஒரு வகை தயாரிப்பு.  பாத்திரங்களில் கிரீம் மற்றும் கிரீஸ் ஆகியவற்றால் ஏற்படும் வாசனையை சுடுநீர் அகற்றுகிறது, இதை நாங்கள் பலமுறை செய்து பார்த்ததுண்டு.

4.உங்கள் பாத்திரங்களை சரியான டிஷ் வாஷ் லிக்விட் மூலம் தேய்த்து கழுவவும் .

உங்கள் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக பெறுவதற்கான திறவுகோல் ஒரு நல்ல ஸ்க்ரப் ஆகும். ஆனால், உங்கள் பாத்திரங்களில் இறைச்சி மற்றும் முட்டைகளின் விரும்பத்தகாத வாசனை யிலிருந்து விடுபட சரியான டிஷ் வாஷ் லிக்விட் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான படியாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மிக சிறந்த டிஷ் வாஷ் விம் ஆன்டி ஸ்மெல் லிக்விட் ஆகும், இது பாத்திரங்களில் இறைச்சி மற்றும் முட்டைகளின் விரும்பத்தகாத வாசனையை அகற்றுவதில் பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்துள்ளது, மேலும் அவை நீண்ட கால மணம் கொண்டது. இதை அனைத்து இயற்கையான  புதினா, எலுமிச்சை மற்றும் இஞ்சி  கொண்டு தயாரிக்கப்பட்டது,  புதினா, எலுமிச்சை, இஞ்சி ஆகியவை அறைகளில் இருந்தும் பொருட்களிலிருந்தும் துர்நாற்றத்தை அகற்ற வீடுகளில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக எலுமிச்சை, எந்தவொரு கெட்ட வாசனையையும் புதிய சிட்ரஸ் நறுமணமாக மாற்றும்.

விம் ஆன்டி ஸ்மெல் லிக்விட் நமது கைகளில் மென்மையாக இருப்பதையும், கழுவிய பின்  கைகளை சாப்டாக வைத்திருப்பதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.  இல்லத்தரசிகள் என்ற வகையில், நம்மில் பெரும்பாலோர் எதிர்பார்க்கும் ஒரு தயாரிப்பு தரம் நீண்ட நாட்கள் வரவேண்டும் என்றே, விம் ஆன்டி ஸ்மெல் லிக்விட் ஒரு சிறு துளி அளவு இருந்தால் போதும் , நிறைய பாத்திரங்கள் சுத்தமாக்கும் என்பதைக் கண்டறிந்தோம், இது நேரத்தையும், நீரையும் சேமிக்க உதவுகிறது. எங்களுக்கு மற்றொரு பெரிய நேர்மறை என்னவென்றால், இது அனைத்து வகையான பாத்திரங்கள்-ஸ்டீல், இரும்பு, மரம் மற்றும் பலவற்றில் வேலை செய்கிறது.  குறிப்பாக மரம்  , இது மிகவும் நுண்ணிய பொருளாகும், மேலும் இறைச்சி சாறுகளை எளிதில் ஊடுருவி கொள்ளும், அவற்றிலிருந்து விரும்பத்தகாத நாற்றங்களை அகற்றுவது இன்னும் கடினமானது.  எவ்வாறாயினும், எங்களைப் பொறுத்தவரை, விம் ஆண்டி ஸ்மெல் லிக்விட் எங்கள் மர பலகையில் இருந்து இறைச்சியின் வாசனையை அகற்றுவதில் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அதில் புதினா இருப்பதால் இது சாத்தியமாகிறது.

5. கழுவி , நன்றாக பாத்திரங்களை உலரவிடவும். 

கடைசியாக பாத்திரங்களை கழுவ சாதாரண வெப்பநிலை நீரைப் பயன்படுத்துவது உணவுத் துகள்கள், இறுதி எச்சங்களையும், அதனுடன் வரும் வாசனையும் அகற்ற சிறந்தது.  விம் ஆன்டி ஸ்மெல் லிக்விட் போன்ற ஒரு பாத்திரங்கழுவி திரவத்தை தண்ணீரில் கலந்து பாத்திரம் கழுவினால் பாத்திரங்களில் எந்த எச்சத்தையும் விட்டு செல்லாமல் எளிதில் கழுவுவதை நாங்கள் கவனித்திருக்கிறோம், அதன் அற்புதமான வாசனை நீடிக்கும்.  முழு செயல்முறைக்கு பிறகு பாத்திரங்களை உலர வைக்கவும், பாத்திரங்கள் சுத்தமாகவும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

இறைச்சி மற்றும் முட்டைகளை சமைக்கும் போது, ​​அவற்றின் வாசனை உணவு வகைகளில் நீடிக்கும் போதும், ​​சுத்தம் செய்வதற்கு நிறைய பாத்திரங்கள் எஞ்சியிருந்தால், சமையல் நிச்சயமாக ஒரு சோதனையாக தெரியும் என்பதை நாங்கள் அறிவோம்.  நமது சமையலறையின் தூய்மை மற்றும் புத்துணர்ச்சியை பொறுத்தவரை நாம் அனைவரும் மிகவும் வேகமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்தி, உங்கள் உணவுகளில் இறைச்சி மற்றும் முட்டைகளின் வெறுக்கத்தக்க வாடையை பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை!

சமைத்த கையோடு விரைவில் பாத்திரங்களை கழுவ வேண்டும்.  நீங்கள் பணியை எவ்வளவு அதிகமாக தள்ளி வைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக இறைச்சி மற்றும் முட்டைகளின் துர்நாற்றம் பாத்திரத்திற்குள் செல்வது மட்டுமல்லாமல், உங்கள் சமையலறை மற்றும் வீடு முழுவதும் பரவி, ஒரு பொதுவான விரும்பத்தகாத உணர்வை விட்டுவிடும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது