உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்து, அதை பளிச்சென்று வைப்பது எப்படி?

பாத்திரங்களை சுத்தம் செய்வது என்பது முக்கியமான வேலைகளில் ஒன்றாகும். அதை திறம்பட சிரமமின்றி எவ்வாறு செய்யலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்வது?
விளம்பரம்
Vim Dishwash Gel

நாம் வீடுகளில் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து ஆசையோடு காத்திருப்போம், ஆனால் அதன் பின் விளைவாக சமயலறைத் தொட்டியில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை நினைத்த மாத்திரத்தில் நமக்கு மலைப்பாய் இருக்கும். அம்மாதிரியான நேரங்களில் பாத்திரங்களை எளிதாக பளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி? என்று யோசித்திருக்கிறோம். மசாலாக்களால் ஏற்படும் கடினமான கறைகள், குழம்பு மற்றும் மஞ்சள் போன்ற இந்திய சமையல் பொருட்களினால் உண்டாகும் கறைகளை நீக்குவது மிகப்பெரிய வேலையாகும். குறிப்பாக நாம் பயன்படுத்தும் லிக்விட் டிட்டர்ஜென்ட் சக்தி வாய்ந்ததாக இல்லாவிடில் சுத்தம் செய்ய அதிக நேரம்  செலவழிக்க வேண்டி இருக்கும். மேலும் நாங்கள் வீட்டுப் பொருட்களான வினிகர், காபி போன்ற பொருட்களை பயன்படுத்திப் பார்த்ததில் தீய்ந்து போன உணவுப் பொருட்கள் மற்றும் அழுத்தமான கறைகளை சரியாக நீக்க முடியவில்லை. சமையல் பாத்திரங்கள் புதியன போல் பளிச்சென்று மின்னுவதற்கு நாங்கள் சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றினோம்.

உனக்கு தேவைப்படும்:

  • தொட்டி நிரம்ப சூடான நீர்
  • ஸ்கிரப்பர்
  • டிஷ்வாஷிங் லிக்விட்
  • எலுமிச்சை
  • உப்பு
  • ஆப்ப சோடா
  • டிட்டர்ஜென்ட் பவுடர்
விளம்பரம்
Vim Dishwash Gel

சமையலறை பாத்திரங்களை கைகளால் சுத்தம் செய்வது எப்படி?

  1. வழிமுறை 1: மீதமான உணவுகளை நீக்கவும்

    பாத்திரங்களில் எஞ்சிய உணவுப்பொருட்களை குப்பைக் கூடையில் வழித்துப் போடவும். சமயலறைத் தொட்டியில் போட்டால் உணவுத் துணுக்குகள் தொட்டியின் வடிகால் குழாயில் அடைத்துக் கொண்டு  நமக்கு சிக்கலை ஏற்படுத்தும். 

  2. வழிமுறை 2: சமயலறைத் தொட்டியில் சூடான நீரை நிறப்பவும்

    சமயலறைத் தொட்டியின் வடிகால் குழாயை மூடிவிட்டு அதில் சூடான நீரை நிறப்பவும். சூடான நீர் பாத்திரங்களில் ஒட்டி இருக்கும் கடினமான கறைகளை எளிதாக அகற்ற உதவும். ஆகையால்  பாத்திரத்தை சுத்தம் செய்வதற்காக நீங்கள் அதிக நேரம் செலவழிக்கத் தேவை இல்லை. இத்துடன் 2 துளி சக்திவாய்ந்த டிஷ்வாஷிங் லிக்விட்- ஐ சேருங்கள். முடிந்த அளவு பாத்திரங்களை உடனடியாக சுத்தம் செய்யுங்கள். உங்கள் பாத்திரங்களை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைக்க விம் டிஷ்வாஷிங் ஜெல் பயன்படுத்துங்கள். 

  3. வழிமுறை 3: அழுக்கான பாத்திரங்களை ஊற வையுங்கள்

    அழுக்கான பாத்திரங்களை தொட்டியில் இருக்கும் சோப்பு நீரில் ஊற வையுங்கள். குறைந்த அளவில் அழுக்கான பாத்திரத்தை மேலாகவும், அதிக அழுக்கானவைகளை அடியில் வைக்கவும். 

  4. வழிமுறை 4: ஒவ்வொரு பாத்திரமாக தேய்க்கவும்

    பலகைகள் மற்றும் பாத்திரங்களை நீரிலிருந்து எடுத்தவுடன் விம் டிஷ்வாஷ்  லிக்விட் ஜெல்  போன்ற டிஷ்வாஷ்  லிக்விட் -ஐ ஊற்றி பிரஷ்ஷின் உதவியோடு கறைகள் அனைத்தையும் தேய்க்கவும். அடுத்து பலகைகளை உலர வைத்த பின் அதில் எவ்வித கறைகளும் இருக்காது என்பதை நாங்கள் கவனித்தோம். ஏனென்றால், கடினமான மற்றும் க்ரீஸ் போன்ற கறைகளை அகற்றக் கூடிய சக்திவாய்ந்த டிஷ்வாஷ் லிக்விட் விம் டிஷ்வாஷ் லிக்விட் ஜெல் ஆகும். இதிலுள்ள எலுமிச்சையின் சக்தி பாத்திரங்களின் அழுக்குகளை மாயமாய் மறையச் செய்கிறது.

    நாங்கள் ஒரு டீஸ்பூன் விம் டிஷ்வாஷ்  லிக்விட் ஜெல் மட்டும் பயன்படுத்தி தொட்டி நிறைய பாத்திரங்களை வெண்நிற திட்டுகளின்றி சுத்தம் செய்தோம். ஒவ்வொரு முறை சுத்தத்திற்குப் பின்னும் பாத்திரங்கள் பளபளப்பாகவும் சுத்தமாகவும் காட்சி அளித்தது. இதனால் நேரம் மற்றும் நீரையும் நாங்கள்  மிச்சம் செய்தோம். உப்பு அல்லது வேறு எந்த ஒரு தயாரிப்புகளில் பாத்திரங்களை ஊற வைக்காமல் டிஷ்வாஷ் லிக்விட் மட்டுமே பயன்படுத்தி நாங்கள் சிறந்த பலன்களை அடைந்தோம். எவ்வித சிக்கலின்றி இந்திய சமயலறைகளை சுத்தம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு  தயாரிப்பாகும். இதை நாங்கள் முயற்சி செய்து பார்த்ததில் அதன் பலன்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. 

  5. வழிமுறை 5: பாத்திரங்களை கழுவுங்கள்

    பாத்திரங்களை தேய்த்த பிறகு குழாய் நீரில் நன்றாக அலசி கழுவுங்கள். பாத்திரங்களை  சுத்தம் செய்ய பயன்படுத்திய கிளீனர் முழுமையாக போய்விட்டதா? என்பதை கவனியுங்கள்.

  6. வழிமுறை 6: பாத்திரங்களை உலர விடுங்கள்

    உங்கள் பாத்திரங்களை பஞ்சு துணி இல்லாத துணியால் துடைத்த பின்னர் உலர விடவும். அல்லது ராக்கில் வைத்து இயற்கையாக காய வையுங்கள். இவ்வாறு செய்வதால் எவர்சில்வர் பாத்திரங்களில் நீர் கோடுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மரப் பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி?

எவர் சில்வர் பத்திரங்களைக் காட்டிலும் மரப் பாத்திரங்களில் கறை தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் மரப் பாத்திரங்களில் எவ்வித கறையும், துர்நாற்றம் வீசாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

  1. வழிமுறை 1: சோப்பு நீரில் கழுவுங்கள்

    மரப் பாத்திரத்தை சூடான சோப்பு நீரில் ஊற வையுங்கள். 1 பெரிய கிண்ணத்தில் சூடான நீரில் 2-3 டீஸ்ஸ் பூன் டிஷ்வாஷ் லிக்விட்-ஐ கலக்குங்கள். ஸ்பான்ஜை பயன்படுத்தி பாத்திரத்தை தேயுங்கள். குழாய் நீரில் அலசுங்கள். கடைகளில் எளிதாக கிடைக்கும் விம் டிஷ்வாஷ் ஜெல்- ஐ நீங்கள் உபயோகித்துப் பார்க்கலாம்.

  2. வழிமுறை 2: உப்பு மற்றும் எலுமிச்சை தேயுங்கள்

    எலுமிச்சையின் அமில குணமானது வாசனையையும், உப்புடன் சேர்ந்து கறைகளை எளிதாக நீக்க உதவும். எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டுங்கள். ஒரு துண்டின் மேல் உப்பை தடவுங்கள். இப்போது கறை படிந்துள்ள மரப் பாத்திரத்தில் உப்புடன் இருக்கும் எலுமிச்சையை தேயுங்கள். உப்பு கரையும் வரை இதை செய்துக் கொண்டிருங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

  3. வழிமுறை 3 : பேக்கிங் சோடவை பயன்படுத்துங்கள்

    பேக்கிங்  சோடாவில் இருக்கும் காரத்தன்மை சுத்தம் செய்வதற்கு தோதான குணமாகும். சோடாவின் இந்த குணமானது அழுக்கை நீரில் எளிதில் கரைத்து, கறையை  முழுமையாக நீக்கவும் உதவுகிறது. கறை நீங்கவில்லை என்றால் 1 கப் எலுமிச்சை சாற்றை ½ கப் பேக்கிங் சோடாவுடன் கலக்கவும். கறை நிறைந்த பகுதியில் இந்த கலவையை தடவவும். இந்த கலவை உங்கள் பாத்திரத்தில் உடனடியாக வேலை செய்வதை நீங்கள் நேரடியாக காணலாம். எலுமிச்சை சாறின் மிச்சத்தையும் பேகிங் சோடாவை நீக்க குளிர்ந்த நீரில் கழுவவும்.

  4. வழிமுறை 4: சூரிய ஒளியில் உலர விடுங்கள்

    மரப் பாத்திரத்தை இயற்கையாக உலர வைக்க சூரியஒளியில் வையுங்கள். பாத்திரத்தில் படிந்துள்ள கறையை நீக்கவும், பாத்திரத்தில் வரும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி சூரியஒளிக்கு உண்டு.

உங்கள் சமையலறை பாத்திரங்களை டிஷ்வாஷரில் சுத்தம் செய்வது எப்படி?

  1. வழிமுறை 1: பாத்திரங்களை காலி செய்யவும்

    பாத்திரத்தில் எஞ்சி இருக்கும் உணவை நீக்குங்கள். டிஷ்வாஷரில் போடுவதற்கு முன்பு பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  2. வழிமுறை 2 : டிஷ்வாஷரில் பாத்திரங்களை வையுங்கள்

    பாத்திரங்களை டிஷ்வாஷரில் அடுக்குங்கள். கத்திகள் மற்றும் ஃபோர்க்குகளை கட்லரி கூடையில் வையுங்கள்.  கோப்பைகள் மற்றும் சூப் பவுல்களின் உட்புறத்தை சோப்பால் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக அவற்றை சரிவாக வையுங்கள். டிஷ்வாஷரின் அடிப்பாகமானது அதிக வெப்ப நிலையில் சுத்தம் செய்யும் தன்மை உடையது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், எனவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருள் வைப்பதை தவிர்க்கவும். டிஷ்வாஷரில் சுத்தம் செய்யக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே டிஷ்வாஷரில் சுத்தம் செய்யலாம். மரப் பாத்திரங்களை டிஷ்வாஷரில் சுத்தம் செய்யக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  3. வழிமுறை 3: சோப்-ஐ சேருங்கள்

    சோப்பாகவும், அலசுவதற்கு உதவும் தயாரிப்பாகவும், உப்பாகவும் செயல்படும் விம் மேடிக் டிஷ்வாஷ் ஆல் இன் ஒன் டேப்லெட்ஸ்  போன்ற டிஷ்வாஷ் டேப்லெட் - ஐ பயன்படுத்துங்கள். இது போன்ற தயாரிப்பை பயன்படுத்துவதன் மூலம் வேறு எந்த ஒரு கூடுதலான தயாரிப்பின் தேவைக்கு அவசியம் இருக்காது. 

  4. வழிமுறை 4: கழுவும் வேலையை தொடங்குங்கள்

    வெந்நீர் குழாயை திறந்த பின் பாத்திரம் கழுவும் வேலையை  தொடங்குங்கள். 

உங்கள் சமையலறை பாத்திரங்களை கிருமி நீக்கம் செய்வது எப்படி ?

  1. வழிமுறை 1: நீரை கொதிக்க விடுங்கள்

    ஆழமான பான்-இல் நீரை ஊற்றி, அடுப்பை  பற்ற வையுங்கள். நீர் கொதிக்கும் வரை காத்திருங்கள். 

  2. வழிமுறை 2: பாத்திரங்களை கொதிக்கும் நீரில் வையுங்கள்

    உங்கள் சமையலறை சாமான்களை கொதிக்கும் நீரில் அமிழ்த்தி விடுங்கள். பான்- ஐ 10 நிமிடங்களுக்கு மூடி வையுங்கள். 

  3. வழிமுறை 3: சாமான்களை எடுங்கள்

    அடுப்பை அணைத்து விடுங்கள்.  பின், உங்கள் சமையலறை சாமான்களை வெந்நீரில் இருந்து இடுக்கியின் உதவியோடு வெளியில் எடுங்கள். சாமான்களை உலர்த்தும் ராக்கில் வைத்து உலர விடுங்கள். கிருமி நீக்கம் செய்யப்பட்ட சாமான்கள் மிகவும் சூடாக இருப்பதால், அவற்றை நேரடியாக தொடுவதை தவிர்த்திடுங்கள். சமையலறை துணியை கொண்டு பாத்திரங்களை துடைப்பதால் கிருமிகள் துணியில் இருக்கும் என்பதனால் அதை இயற்கையாக உலர்த்துவது ஒரு சிறந்த தேர்வாகும்.

பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையலறை மேடை முழுவதும் சுத்தம் செய்யுங்கள். சிஃப் கிச்சன் கிளீனர் போன்ற சமையலறை கிளீனரை பயன்படுத்தலாம். முறையான பயன்பாட்டு வழிமுறைகளை அறிந்துகொள்ள பேக்கினை படிக்கவும்.

பாத்திரங்களை கழுவும் போது நீரை சேமிப்பது எப்படி? 

பாத்திரங்களை தேய்த்துக் கழுவும் போது குழாயை மூட மறக்காதீர்கள். இதன் மூலம் அதிக அளவிலான தண்ணீரை சேமிக்கலாம். பாத்திரங்களை கழுவுவதற்கு முன்பு அதில் ஒட்டியுள்ள உணவை சுரண்டி எடுத்து விடுங்கள். இதனால் நீரின் பயன்பாட்டை குறைக்கலாம். பாத்திரங்கள் உலர்ந்தவுடன் கழுவுவதைக் காட்டிலும் அதை உடனடியாக கழுவும் போது குறைந்த அளவிலான தண்ணீரே செலவாகும். எனவே, பாத்திரத்தில் இருக்கும் உணவு வறண்டு போவதற்கு முன்பு அதை கழுவுங்கள். உங்கள் சமையல் பாத்திரங்களில் படிந்துள்ள கடினமான கறைகளை நீக்க, கழுவுவதற்கு முன்பு  3-4 சொட்டு டிஷ்வாஷிங் லிக்விட் கலந்த தண்ணீரில் ஊற வையுங்கள். இதன் மூலம் கடினமான உணவுக் கறைகளை எளிதாக நீக்கிவிடலாம்.  அதே சமயம் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு குறைந்த நேரமே செலவாகும்.  

 

உங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப  ஸ்கிரப்பரை பயன்படுத்துங்கள் 

பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப ஸ்கிரப்பரை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். இதனால் பாத்திரங்களை நீண்ட காலத்திற்கு நல்ல நிலையில் பராமரிக்க உதவும்.  ஸ்டீல் / எவர்சில்வர் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஸ்கிரப்பரையோ அல்லது ஸ்டீல் ஸ்கிரப்பரையோ பயன்படுத்தலாம். விலை உயர்ந்த செராமிக் பாத்திரங்களை சுத்தம் செய்ய ஸ்பான்ஜினால் ஆன ஸ்கிரப்-ஐ பயன்படுத்துங்கள். இதனால் பாத்திரத்தில் கீரல்களை தவிர்க்கலாம். கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்ய மென்மையாக இருக்கும் ஃபோம் ஸ்கிரப்-ஐ பயன்படுத்துங்கள். அலுமினிய பாத்திரங்களுக்கு கம்பி ஸ்டீல் ஸ்கிரப்பரை உபயோகிக்கலாம். 

 நீங்கள் உங்கள் வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் உங்கள் பாத்திரங்களை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.  அதே போல உங்கள் சமையலறை துண்டுகள், ஸ்பான்ஜ் போன்ற பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அவ்வப்போது சமையலறை பிரஷ்களை மாற்றுவதற்கு மறக்காதீர்கள். 

 முக்கியமான வழிமுறை

டிஷ்வாஷ் லிக்விட்- ஐ பயன்படுத்தி உங்கள் வார்ப்பிரும்பு பான்களை சுத்தம் செய்யாதீர்கள். வெது வெதுப்பான நீரில் அவற்றை கழுவினாலே போதுமானது. இருப்பினும் அதை  நீங்கள் சுத்தம் செய்ய விரும்பினால்  சிறிதளவு உப்பை வார்ப்பிரும்பு பான் மேல் தூவுங்கள். ஸ்பான்ஜை வைத்து உப்பை துடைத்து விட்டு, மீதமுள்ள உப்பை நீக்க தண்ணீரில் கழுவுங்கள். உங்கள் பான்-இல் ஈரப்பதம் இருந்தால் துருப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம் ஆதலால் பான் சரியாக உலர்ந்து விட்டதா? என்பதை  உறுதி செய்துவிட்டு அதை வையுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது