
பெற்றோர்களான நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம், அதிலும் இந்த நோய் தொற்றுக் காலம் நம் மூளையின் துப்பறிவு திறனுக்கு அதிக அளவில் வேலைக் கொடுக்கிறது. கடையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் பூச்சிக்கொள்ளிகள், மெழுகு, இரசாயனம், கிருமிகள் மற்றும் வைரஸ்கள் மேலான அச்சம் எழுவது இயற்கையே. முன்பெல்லாம் வெறும் நீரால் பொருட்களை சுத்தம் செய்வது போதுமானதாக இருந்தது ஆனால் இன்றைய சூழலில் நாம் சில கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆப்ப சோடா மற்றும் வினிகர் போன்ற பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்யும் குறிப்புகளை முயற்சி செய்வதன் மூலம் பொருட்களில் இருக்கும் நச்சுக்களை எந்த அளவிற்கு அகற்றும் என்பது எங்களுக்குத் தெரியாது. சில முயற்சிகள் மூலம் இந்த சிக்கலுக்குத் தீர்வினைக் கண்டறிந்தோம் ஆதலால் சுத்தத்தைப் குறித்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைக்கு எல்லா சமயங்களிலும் கிருமிகளற்ற சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளை கிடைக்கச் செய்ய முடியும்.
1. இயற்கைப் பொருட்களை சரியான முறையில் சேமிக்க வேண்டியது அவசியம்
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கியவுடன் அழுகக்கூடிய பொருட்களை பிரித்து அதை ஃபிரிஜில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், இது நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கும் ஒரு குறிப்பு. வெப்பநிலையானது 40° ஃபாரன்ஹீட் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் அதன் வாங்கிய போது இருந்த தன்மை மாறாமல் எவ்வித பாக்டீரியாக்களும் வளரவிடாமல் தடுக்கும்.
எளிதில் கெட்டுப்போகாத பழங்கள் மற்றும் காய்கறிகளை அறை வெப்பநிலையில் கூடைகள், அலமாரிகளில் சேமிக்கலாம். “ஃபிரிஜ் , கூடைகள் மற்றும் அலமாரிகளை அவ்வப்போது சுத்தப் படுத்துதல் ” இது நாங்கள் உங்களுக்காக பரிந்துரைக்கும் குறிப்பாகும். இதனால் கெட்டுப்போன தேவையற்ற பழைய காய்கறிகள ் மற்றும் பழங்களை அகற்றுவதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தது. இதனால் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை வைக்க இடமும் கிடைக்கும்.
அதேசமயம் கிருமிகள்,பாக்டீரியா உடனான தொடர்பையும் தவிர்க்கலாம். இத்துடன், குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்பதில் எங்களுக்கு அதீத ஈடுபாடு உண்டு.

2. சாப்பிடுவதற்கு முன்பு இயற்கை பொருட்களால் ஆன கிளீனரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்
பொருட்களை கழுவியபின் ஈரப்பதத்துடன் சேமித்து வைப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். ஆகையால் காய்கறிகள் சமைப்பதற்கு முன்பாகவும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பாகவும் கழுவுதல் நல்லது. இரசாயனக்கலவை கொண்ட கிளீனரில் சுத்தம் செய்வதால் நமக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எங்களைப்போல் நீங்களும் பயப்படலாம். இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வாக இயற்கையான முறையில் பாதுகாப்பளிக்கும் Nature Protect’s Fruit and Vegetable Wash அமையும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இதில் எவ்வித இரசாயன கலவையும் இல்லை. வேம்பு,துளசி, எலுமிச்சை, சிட்ரஸ் போன்ற தாவரங்கள் பொருட்களால் ஆனது. மேலும் குழந்தை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு FDA அங்கீகாரம் பெற்ற தயாரிப்பாகும், எனவே இது பெற்றோரான நமக்குக் கிடைத்த சிறந்த தயாரிப்பு ஆகும். இந்த வாஷ் பயன்படுத்துவதானால் காய்கறிகள் அல்லது பழங்களின் சுவைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. இந்த வாஷ்ஷை பயன்படுத்தியபின் வெகுநேரம் வரை பழங்கள் மற்றும் காய்கறிகள் அதன் பசுமைத்தன்மை மாறாமல் இருந்ததை கவனித்தோம்.வேம்பு பழங்காலத்திலிருந்தே சிறந்த கிருமிநாசினியாகக் கருதப்பட்டு வருகிறது. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் கிருமிகளை நீக்குவதற்கு எளியவழியாக இதை பயன்படுத்தலாம்.
3. பொருட்களை கையாள்வதற்கு முன்பு சமையலறையை சுத்தம் செய்யவும்
சமையலறை தொட்டி, பாத்திரங்கள், காய்கறி வெட்டும் பலகைகள் மற்றும் மேடை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். இதே நடைமுறையை, முன்னேற்பாடுகள் மற்றும் சமையல் முடித்த பின்னும் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு போன்ற தோல் நீக்கிய பழங்கள் / காய்கறிகள் உட்பட அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சுத்தப் படுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால் தோலை சீவும் போதோ அல்லது அவற்றை நறுக்கும் போது அதில் இருக்கும் அசுத்தங்களானது பழங்கள் அல்லது காய்கறியினுள் செல்வதை தடுக்கலாம். பச்சை உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சிகளை ஒரே சமயம் கையாளும் போது அதற்கென்று தனித்தனியாக வெட்டும் பலகைகள் , கத்தி மற்றும் பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.
4. வீட்டுக் குறிப்புகள் முயற்சிப்பதை தவிர்க்கவும்
பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு முதலில் அதன் மேலுள்ள மண்,அழுக்குகள், தூசிகள் போன்றவற்றை நீரினால் கழுவுகிறோம். இதற்குப் பின் காய்கறிகளை ஆப்பசோடாவால் கழுவுவது, வினிகர் போன்ற பொருட்களால் சுத்தம் செய்லாம் போன்ற வீட்டுக்குறிப்புக்களை முயற்சி செய்யத் தோன்றும், ஆனால் இந்தப் பொருட்கள் எந்த அளவிற்கு அசுத்தங்களை நீக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் “இதற்கு பதிலாக எவ்வித இரசாயனமும் இல்லாத, குழந்தைகளுக்கு பாதுகாப்பான Nature Protect’s Fruit and Vegetable வாஷை பயன்படுத்துங்கள்” என்கிற பரிந்துரையை அளிக்கிறோம். இந்தத் தயாரிப்பை பயன்படுத்தும் முறியானது மிகவும் எளியது அதனாலேயே இது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பின் கவரில் உள்ள நெறிமுறைகளை பின்பற்றி பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்யுங்கள்.
5. குழந்தைகளை ஈடுபடுத்தும் செயலாக இதை மாற்றுங்கள்
தற்சமயம் தொற்று நோய் பரவல் காரணமாக குழந்தைகள் வீட்டில் இருப்பதால் படிப்பு, விளையாட்டோடு சேர்த்து வீட்டு வேலைகளையும் கற்றுக் கொள்கின்றனர். இதோடு பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலையையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். இந்த செயலைக் கற்றுத்தருவதன் மூலம் மரம் மற்றும் செடிகளின் எந்தப் பகுதியில் இருந்து பொருட்கள் வருகிறது என்கிற பாடத்தினை அவர்களுக்குக் கற்றுத் தரலாம். உதாரணமாக காரட், முள்ளங்கி போன்றவை வேரிலிருந்து கிடைக்கிறது. புதினா கீரை வகையைச் சார்ந்தது என்று கூறலாம். இதன் மூலம் குழந்தைகள் பல புதிய வார்த்தைகள், உருவங்கள், தன்மைகள், நிறங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்த வேலைகளில் வளர்ந்த குழந்தைகளையும் ஈடுபடுத்தாலாம்.