
பூஜைக்கு பித்தளை விளக்குகள் ஏற்றுவது தமிழ் குடும்பங்களில் மிகவும் வழக்கமான நடைமுறையாகும். ஒரு விளக்கு ஏற்றினால் எந்த எதிர்மறை ஆற்றலையும் நடுநிலையாக்கி, நம் வீடுகளுக்கு நேர்மறை அதிர்வுகளை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. அவை புனிதமானவை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி ஒரு ஒளிரும் உணர்வைப் பரப்புவதன் மூலம் நம் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
எண்ணெய் / நெய்யைப் பயன்படுத்தி நாம் விளக்கை ஏற்றுவதால், அது காலப்போக்கில் எண்ணெய் பிசுக்கு அதிகரித்து, கறுப்பாக மாறக்க ூடும். கீழேயுள்ள வழிமுறைகளின் உதவியுடன் பித்தளை விளக்குகளை எவ்வாறு எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
படிநிலை 1: அதிகப்படியான எண்ணெயை வடிகட்டவும்
விளக்கில் இருந்து அதிகப்படியான எண்ணெயை வடிகட்டவும்.
படிநிலை 2: திசு காகிதத்தினால் துடைக்கவும்
மீதமுள்ள எண்ணையை நீக்க திசு காகிதத்தினால் விளக்கைத் துடைக்கவும்.

படிநிலை 3: தண்ணீரில் ஊற வைக்கவும்
ஒரு கிண்ணம் சூடான நீரை எடுத்து, விளக்கை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும ்.
படிநிலை 4: தண்ணீரில் கழுவவும்
விளக்கை தண்ணீரிலிருந்து எடுத்து, குழாய் நீரின் கீழ் கழுவவும்.
படிநிலை 5: புளி கொண்டு துலக்கவும்
சிறிது அளவு புளி விழுது / ஈரமான புளி எடுத்து விளக்கு மீது அழுந்த தேய்த்து பிசுபிசுப்பை நீக்க வேண்டும். புளி விழுது விளக்கில் சில நிமிடங்கள் இருக்க அனுமதிக்கவும். புளி, பித்தளை விளக்குகளை மிகவும் திறம்பட சுத்தம் செய்யவல்லது.
படிநிலை 6: மீண்டும் கழுவவும்
மறுபடியும் குழாய் நீரின் கீழ் விளக்கைக் கழுவவும்
படிநிலை 7: எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து தேய்க்கவும்
ஒரு எலுமிச்சை எடுத்து பாதியாக வெட்டவும். வெட்டப்பட்ட மேற்பரப்பில் சிறிது உப்பு தெளித்து, விளக்கு மீது எலுமிச்சையை நன்கு தேய்க்கவும். இது விளக்குக்க ு அதிக பிரகாசத்தை அளிக்கிறது.
படிநிலை 8: பாத்திரங்களைக் கழுவும் திரவத்தினால் துலக்கவும்
நீங்கள் விரும்பினால், மீதமுள்ள பிசுபிசுப்பை சுத்தம் செய்ய, விளக்கை தண்ணீரில் கழுவி, பாத்திரங்களைக் கழுவும் திரவத்தினால் துலக்கவும்.
படிநிலை 9: இறுதி கழுவல்
இறுதியாக விளக்கை தண்ணீரில் கழுவி சுத்தமான பருத்தி துணியால் துடைக்கவும்.
அவ்வளவுதான்! உங்கள் பித்தளை விளக்கு தங்கத்தைப் போல பிரகாசிக்கிறது!