
மழைக்காலம் முடிந்து விட்டால், நாம் குடைகளை எடுத்து வைத்து விடுவோம். ஆனால் அடுத்த மழைக்காலம் வரை அவற்றை எடுத்து வைப்பதற்கு முன்பு, சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் குடைகளை பராமரிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
ஏனெனில், அடுத்த முறை உங்களுக்குத் தேவைப்படும் போது, உங்கள் குடை புதியது போல் அழகாக இருக்கும்.
Step 1: இந்த கலவையை தயாரிக்கவும்
ஒரு குளியல் தொட்டியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பவும். நீங்கள் ஒரு வாளியையும் பயன்படுத்தலாம், ஆனால் அது குடைக்கு ஏற்ற அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும். 3 டேபிள்ஸ்பூன் திரவ சோப்பை சேர்க்கவும்.
Step 2: ஊறவைக்கவும்
உங்கள் மடித்த குடையை இந்த சவர்க்காரக்கலவையில் வைக்கவும், அதைச் சுற்றி நகர்த்தி, முழு குடையையும் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த சோப்பு கலவையில் குறைந்தபட்சம் குடையை 7-10 நிமிடங்கள் வைக்கவும்.

Step 3: துடைக்கவும்
தண்ணீர் இன்னும் சூடாக இருக்கும்போது, குடையின் மேற்பரப்பை ஒரு பஞ்சு மூலம் துடைக்கத் தொடங்குங்கள். குடை கடினமான கறைகளைக் கொண்டிருந்தால், கறை படிந்த பகுதியில் நேரடியாக சில திரவ சோப்பை சேர்க்கலாம். அனைத்து கறைகளையும் நீக்கும் வரை பஞ்சு மூலம் துடைக்கவும்.
Step 4: அலசவும்
இப்போது, உங்கள் குடையை நேரடியாக சாதாரண நீரின் கீழ் அலசவும். இது அனைத்து அழுக்கு மற்றும் சோப்பு கரைசலையும் மேற்பரப்பில் இருந்து வெளியேற்றும்.
Step 5: உலர்த்தவும்
கடைசியாக, உங்கள் குடையை உலரவைக்க வேண்டும். வெயிலில் வைத்து இயற்கையாக உலர்த்தவும்
இப்போது, உங்கள் சுத்தமான குடை, பயன்படுத்த தயாராக உள்ளது. அல்லது, இதை சேமித்து வைத்து, அடுத்த ஆண்டின் பருவ மழையின் போதும் இனிதே பயன்படுத்தலாம்.