
நீங்கள் தீபாவளிக்காக வீடு முழுவதையும் சுத்தம் செய்யும்போது, பல இடங்களில் கண்ணாடிகள் இருக்கும். அவற்றையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதில் கண்ணாடிகள், டேபிளின் மேற்புறங்கள், ஜன்னல்கள், உங்கள் டிவி ஸ்க்ரீன் போன்றவை அடங்கும். தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது இவற்றையும் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
1) தூசு படிந்த கண்ணாடிகளை சுத்தம் செய்வதற்கு
ஒரு கிண்ணம் தண்ணீரில் 1 கப் வினிகர் விட்டுக்கொண்டு, பிறகு அதில் டிஷ்வாஷிங் லிக்விட்டை விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் விட்டுக் கொள்ளவும். இதை நிலைக்கண்ணாடியின் மேற்புறத்தில் ஸ்ப்ரே செய்யவும். பிறகு சுத்தமான துணியினாலோ அல்லது பழைய செய்தி தாளினாலோ சுத்தம் செய்யவும். உங்கள் நிலைக் கண்ணாடிகள் சுத்தமாக தூசு இல்லாமல் இருப்பதைப் பாருங்கள்.
2) ஜன்னல்களை சுத்தம் செய்வதற்கு
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீருடன் 1/2 கப் வினிகர் விட்டு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பாஞ்ஜை இந்த கரைசலில் நனைத்து ஜன்னல்களை சுத்தம் செய்யவும். மேலிருந்து கீழாக ஒரே நேர்க்கோட்டில் சுத்தம் செய்யவும். இதன் மூலம் அதிகப்படியான தண்ணீர் ஒரே திசையில் கீழே செல்லும். பிறகு ஒரு ஈரமான துணியால் கண்ணாடியைத் துடைக்கவும். பிறகு உலர்ந்த துணியால் துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.

3) கண்ணாடி மேஜையின் மேற்புறத்தை சுத்தம் செய்வதற்கு
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் 1/2 கப் வினிகர் விட்டு கரைத்துகொள்ளவும். ஒரு ஸ்பாஞ்சை இந்த கரைசலில் நனைத்து கண்ணாடி மேற்புறத்தை சுத்தம் செய்யவும். ஏதாவது பிசுபிசுப் பாக ஒட்டிக் கொண்டிருந்தால் அதை நன்கு தேய்த்து சுத்தம் செய்யவும். ஒரு செய்தி தாள் துண்டை எடுத்து அந்த மேற்புறத்தை சுத்தமாகத் துடைகக்வும். கடைசியாக ஒரு உலர்ந்த துணியை எடுத்து துடைத்து தண்ணீர் அடையாளங்களை நீக்கவும்.
4) டிவி மற்றும் மொபைல் ஸ்க்ரீன்களை சுத்தம் செய்வதற்கு
இவற்றை சுத்தம் செய்வதற்கு - உங்கள் மொபைல் அல்லது வேறு எதாவது கருவிகளை சுத்தம் செய்வதற்கு இந்த முறையை பின்பற்றவும். முதலில் டிவி மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும். பிறகு மூக்கு கண்ணாடியை துடைக்கப் பயன்படுத்துவதைப் போன்ற மிருதுவான உலர்ந்த துணியை எடுத்து ஸ்க்ரீனை மென்மையாகத் துடைக்கவும். துடைக்கும் போது ஸ்க்ரீனை அதிகம் அழுத்தாமல் துடைக்கவும். ஸ்க்ரீனில் அப்படியும் அடையாளங்கள் இருந்தால், 1 கப் தண்ணீரில் ½ கப் வினிகரை கரைத்துக் கொள்ளவும். பிறகு துணியை இந்தக் கரைசலில் நனைத்து கறைபட்ட பகுதியை துடைக்கவும் கடைசியாக சுத்தமான உலர்ந்த துணியால் துடைத்து தண்ணீர் அடையாளங்களை நீக்கவும். ஆனால் சாதனங்களில் ஒரங்கள் வழியாக தண்ணீர் இறங்கி ஹார்ட்வேர் உள்ளே செல்லாமல் கவனித்து செய்யவும்.
இந்த தீபாவளியில் உங்களின் சுத்தமான ஸ்கிரீன்களை பார்த்து மகிழ்ந்திடுங்கள். உங்களுக்கு கிடைத்து விட்டது!