உங்கள் பொங்கல் களிமண் பானையை சுத்தம் செய்து பராமரிக்க எளிய வழிகள்

உங்கள் பொங்கல் பானையை சுத்தம் செய்ய யோசனைகளைத் தேடுகிறீர்களா? இது உங்களுக்கு சரியான இடம்! திறம்பட சுத்தம் செய்வதற்கான உதவிக்குறிப்புகளைக் கண்டுபிடிக்க கீழே படிக்கவும்

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Simple Ways to clean and store your Pongal Clay Pot
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

பொங்கல் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு அழகான திருவிழா. மக்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்த அறுவடைக்காக சூரிய கடவுளுக்கு நிபந்தனையற்ற நன்றி செலுத்துகிறார்கள். இந்த திருவிழாவின் மிக முக்கியமான பகுதியாக ஒரு களிமண் பானையில் பொங்கல் சமைக்கப்படுகிறது, இதை நாம் பொங்கல்பானை என்கிறோம். களிமண் பானை , பொங்கலுக்கு கூடுதல் சுவையை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. பொங்கல் சமைப்பதற்கு முன்னும் பின்னும் பொங்கல் பானையை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் அவற்றைப் பாதுகாப்பாக பராமரிக்கும் வழி ஆகியவற்றைப் பார்ப்போம்.

சமைப்பதற்கு முன் பானையை சுத்தம் செய்தல்:

படிநிலை 1: தளர்வான தூசியை துடைக்கவும்

பானை மேல் இருக்கும் தூசி அல்லது களிமண் துகள்களை உங்கள் கைகளால் துடைக்கவும் அல்லது மென்மையான தூரிகையும் பயன்படுத்தலாம்.

படிநிலை 2 சூடான நீரில் கழுவவும்

அரை வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்து பானையை சுற்றி ஊற்றவும். 15 நிமிடங்கள் காத்திருக்கவும். இது விடாப்பிடியான அழுக்கை தளர்த்தும்.

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

படிநிலை 3: தண்ணீரில் கழுவவும்

குழாய் நீரின் கீழ் பானையை கழுவி நன்கு சுத்தம் செய்யுங்கள்.

படிநிலை 4: உலர வைக்கவும்

சுத்தமான மற்றும் உலர்ந்த பருத்தி துணியால் துடைக்கவும்.

பொங்கல் பானை பயன்படுத்த தயாராக உள்ளது!

சமைத்த பின் பானையை சுத்தம் செய்தல்:

படிநிலை 1: முதலில் பானையை சூடு ஆற விடவும்.

களிமண் பானை நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதால், சமைத்தபின் பானையை சிறிது நேரம் சூடு ஆற விடவும்.

படிநிலை 2: உணவை அகற்றவும்

பானையை முழுவதுமாக காலி செய்து, அதிகப்படியான (உணவுத் துணுக்குகளை அகற்றவும்.

படிநிலை 3: திசு காகிதத்தினால் துடைக்கவும்

பொங்கலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் / நெய்யை உறிஞ்சுவதற்கு, பானையின் உட்புறத்தை ஒரு திசு காகிதத்தை கொண்டு துடைக்கவும்.

படிநிலை 4: தண்ணீரை நிரப்பி கொதிக்க வைக்கவும்

பானை நிரம்பும் வரை தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

10 நிமிடங்கள் காத்திருக்கவும். நீரின் மேல் அடுக்கில் எண்ணெய் / நெய் பிசுக்கு மிதப்பதை நீங்கள் காணலாம். பானையை ஒரு துணியால் பிடித்து தண்ணீரை மடுவில் ஊற்றவும்.

படிநிலை 6: திசு காகிதத்தைக் கொண்டு துடைக்கவும்

பானைக்கு வெளியே கரி பிடித்திருந்தால், பானை சூடு ஆறியதும் உலர்ந்த துணி அல்லது திசு காகிதத்தை கொண்டு பானையின் வெளிப்புறத்தை துடைக்கவும்.

படிநிலை 7: பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்யவும்

பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தி, பானைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு துடைக்கும் திண்டை கொண்டு நன்கு தேய்க்கவும்.

படிநிலை 8: மீண்டும் கழுவவும்

நீரின் கீழ் பானையை கழுவி உலர்ந்த துணியால் துடைக்கவும்

படிநிலை 9: உலர்த்தவும்

இயற்கையான முறையில் வெயிலில் உலரவிடவும்.

படிநிலை 10: பத்திரமாக எடுத்து வைக்கவும்

பானை உலர்ந்ததும், ஒரு செய்தித்தாளை ஒரு தனி அலமாரியில் விரித்து பானையை தலைகீழான நிலையில் கவுத்து வைக்கவும், மற்ற பாத்திரங்களுடன் சேமித்து வைப்பது பானையை உடைக்கக்கூடும்.

அவ்வளவுதான்! உங்கள் பொங்கல் பானை, அடுத்த பொங்கல் திருவிழாவிற்கு பயன்படுத்த தயாராக உள்ளது!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது