சுத்தமான தரைகளுக்கான குறிப்புகள்

இப்பொழுது நோய்த்தொற்று எங்கும் பரவி இருப்பதால், வீட்டை சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவும் கவனமாகச்செய்ய வேண்டிய ஒரு வேலையாக மாறியுள்ளது. நம் வீட்டின் தரைகளில் படிந்துள்ள கிருமிகளை நீக்கம் செய்து, மற்றும் அவற்றை வைரஸ் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்கச் சிறந்த வழி என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

சுத்தமான தரைகளுக்கான குறிப்புகள்
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

தரைகளைச் சுத்தம் செய்வதை பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, சாதாரணமாகச் சுத்தம் செய்வதற்கும், மற்றும் கிருமிகளை நீக்கும் வகையில் சுத்தம்செய்வதற்குமான வித்தியாசத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சுத்தப்படுத்துதல் மூலமாக நம்மால் கிருமிகளை அழிக்க முடியாது. சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாக தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் சுத்தமாக வைத்திருத்தல் மட்டும் போதாது. ரசாயனத்தைப்பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிருமிநாசினிகள் மூலமாக நாம் தரைகளில் படிந்துள்ள கிருமிகளை அகற்றலாம். தரைகளைச் சுத்தப்படுத்த உதவும் தரைசுத்திகரிப்பான்கள், எல்லாமும் ஒரே விதமாக இருப்பதில்லை. அவற்றில் சிலகிருமிகளை அழிப்பதில் ஆற்றல் மிகுந்ததாக இருக்கலாம். எனவே எந்த தரை சுத்திகரிப்பான் வாங்கினால், அது தரையில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிக்கும் என்பதைப் பற்றி, நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் வீட்டில் கொரோனா வைரஸால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது நோய் எதிர்ப்புச் சக்தி சற்றுக் குறைவாக இருக்கும் குழந்தைகள் இருந்தாலோ, கிருமிகள் இல்லாமல் தரையைச் சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது.  உங்கள் தளங்களையும் பிற மேற்பரப்புகளையும் கிருமி நீக்கம் செய்து அவற்றைச் சுத்தமாகவும், வைரஸ் இல்லாததாகவும் வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

1. அடிக்கடி சுத்தம் செய்வதை உறுதிசெய்தல்

நீங்கள் உங்கள் வீட்டின் தரைகளை எத்தனை முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கையையும், உங்கள் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளின் எண்ணிக்கையையும் பொறுத்து அமையும். பொதுவாக சமையலறை, குளியலறை, சாப்பாட்டுப்பகுதி, நுழைவாயில் போன்ற  பகுதிகளை நாம் அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். அதனால் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இந்தியாவில் தரைகளைச் சுத்தம் செய்ய, தண்ணீரில் ரசாயனம் கலந்த மருந்துக் கலவையை ஊற்றி தினமும் துடைப்பது என்பது வாடிக்கையாக இருக்கிறது.  தரைகளில் கார்ப்பெட் போன்ற விரிப்புகள் எதுவும் இல்லாததால், தரைகள் விரைவில் அழுக்கடைந்து காணப்படுகிறது. அதனால் அவற்றை அடிக்கடி நாம் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. முழு வீட்டையும் நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டாலும், அதிகமாக உபயோகப்படுத்தும் இடங்களை மட்டும் அடிக்கடி கிருமிநாசினி கொண்ட தரை சுத்திகரிப்பான் மூலம் சுத்தம் செய்வது நல்லது. நீங்கள் வீட்டில் இருந்தால், அடிக்கடி உபயோகப்படுத்தும் இடங்களையும் கூட சுத்தம் செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

2. சரியான தரை சுத்திகரிப்பானைத் தேர்வு செய்தல்

வீட்டில் உள்ள குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்த பின்பு, தரையில் உள்ள கிருமிகளை நாம் அழிக்க வேண்டும். கடையில் கிடைக்கும் சாதாரண தரை சுத்திகரிப்பானைப் பயன்படுத்திய போது, அவை தரையில் உள்ள அனைத்து கிருமிகளையும் முற்றிலுமாக நீக்கவில்லை. பின்னர், டோமெக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனர் நாங்கள் உபயோகப்படுத்தினோம். இது பினாயிலை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் வழக்கமான கிளினர்கள் விட்டுச்செல்லும் கிருமிகளையும் கொல்லும் என்று அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தது. சோடியம் ஹைபோகுளோரைட் கொண்டு இது தயாரிக்கப்படுவதால், தரைகளைச் சுத்தம் செய்ய CDC இதை பரிந்துரை செய்கிறது. ஆன்ட்டிமைக்ரோபியல் செயல்பாட்டுக்குப் பெயர் பெற்ற இது, எந்த நச்சுப் பொருட்களையும் விடுவதில்லை, எல்லாவற்றையும் சுத்தமாக அழித்து விடுகிறது. தண்ணீரின் கடினத்தன்மை மாறினால், அதைப்  பொறுத்து இதன் ரசாயனத்தன்மை மாறுவதில்லை. அதனால் எல்லாவித தண்ணீரிலும் இதனை உபயோகம் செய்யலாம். சோடியம் ஹைப்போகுளோரைட், என்னும் ரசாயனம் கொண்டு இது தயாரிக்கப்படுவதால், இது விலை மலிவாகவும் கிடைக்கிறது, அதே சமயம் அதிக செயல்திறன் கொண்டதாகவும் இது விளங்குகிறது. அதனால்தான், முன்னணி சுகாதார நிறுவனங்கள், அழுக்கான தரைகளையும், மேற்பரப்புகளையும் சுத்தம் செய்ய டோமெக்ஸை பரிந்துரை செய்கிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலும், மற்றும் அடிக்கடி டோமெக்ஸை உபயோகப்படுத்துவதன் மூலமும், இதை நீங்கள் உண்மை என்று கண்டறியலாம். தரை சுத்திகரிப்பானை உபயோகப்படுத்தும் முன்பு, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முதலில் படிக்க வேண்டும். இதனால் கிருமிநாசினித் தயாரிப்பு, எவ்வளவு நேரம் தரையில் இருந்தால், அது சரியான முறையில் கிருமிகளை அழிக்கும் என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

3. வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சரியான அளவில் தரை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துதல்

தரைகளைத் துடைக்கும் பொழுது, பக்கெட்டில் சூடான நீரை நிரப்புங்கள். ஏனெனில் சூடான நீர், குளிர்ந்த நீரை விட விரைவாகவும், நன்றாகவும்  சுத்தம் செய்யும். இரண்டு மூடி டோமெக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனர் அரை வாளி தண்ணீரில் ஊற்றவும். அதிக அளவு தரை சுத்திகரிப்பான் உபயோகிப்பதன் மூலமாக, இன்னும் நன்றாகச் சுத்தப்படுத்தலாம் என்று தவறாக நினைத்துக் கொண்டு அதிக அளவில் தரை சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டாம். டோமெக்ஸ் பாட்டிலின் லேபிளில் குறிப்பிட்டுள்ளபடி சரியான அளவு தரை சுத்திகரிப்பான் உபயோகம் செய்யவும். ஏனெனில் அதிக அளவு தரை சுத்திகரிப்பானை நீங்கள் உபயோகப்படுத்தும் பொழுது, அது நன்றாகச் சுத்தம் செய்வதில்லை. மேலும் இதனால் வீடு துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியினையும் நீங்கள் அடிக்கடி அலச வேண்டி வரும்.

4. மற்ற மேற்பரப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய ஒரு சுத்திகரிப்பானைப் பயன்படுத்துங்கள்

டோமக்ஸ் கிருமிநாசினி தரை சுத்திகரிப்பான் மூலம் தரையை மட்டுமன்றி மற்ற மேற்பரப்புகளையும் சுத்தம் செய்யலாம். எனவே டோமக்ஸ் ஒரு நல்ல கிருமிநாசினிக்கான சரியான எடுத்துக்காட்டு ஆகும். டோமெக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனர் என்பது பல்நோக்குத் தரை சுத்திகரிப்பான் ஆகும். ஏனெனில் அது பல்வேறு விதமான தரைகளையும், மேற்பரப்புகளையும் சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவற்றிலுள்ள கிருமிகளையும் நீக்குகிறது. இதனால் நாம் ஒவ்வொரு பொருட்களையும் சுத்தம் செய்ய தனித்தனி சுத்திகரிப்பான் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. டோமக்ஸ்டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர்கிளீனர் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தாலே போதும். இதை நீங்கள் உபயோகப்படுத்தும் முன்பு, அதை ஒரு சிறு பகுதியில் உபயோகப்படுத்திப்பார்க்கவும். அது ஏதாவது கரைகளை விட்டுச் செல்கிறதா? என்பதைப் பரிசோதித்த பின்பு, அதை பயன்படுத்தவும். நாங்கள் பயன்படுத்திப் பார்த்தவரை, அது எல்லா மேற்பரப்புகளையும் நன்றாகச்சுத்தம் செய்தது.

இனி எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உங்களின் தரைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வதால், அவை கிருமிகள் இல்லாததாகவும், மற்றும் பளபளப்பாகவும் இருக்கும். எனவே விரைந்து சுத்தம் செய்திடுங்கள்.

ரகசியக்குறிப்பு: இந்தியாவின் சிறந்த பிராண்டுகளை இங்கே இலவசமாகப் பெற்று, அதனையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது