
நாம் அனைவரும் சோபா அல்லது ஏதாவது ஒரு ஃபர்னிச்சர் மீது அமர்ந்து பல மணிநேரங்களை தினமும் செலவழிக்கிறோம். ஆனால் அதை கடைசியாக முழுசாக சுத்தம் செய்தது எப்போது? வீட்டினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் அன்றாடம் பேணிக்காக்க வேண்டும் என்பதை தொற்று நோய் காலம் நமக்கு நன்கு புரிய வைத்திருக்கிறது. என்னதான் நாம் அடிப்படை சுத்தம் தினமும் செய்து வந்தாலும் , நாம் பயன்படுத்தும் பொருட்களின் பல்வேறு மேற்பரப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை செய்வதினால் நம்மையும் நம் குடும்பத்தை கிருமிகளிலிருந்து காக்கலாம். DIY கிருமிநாசினிகள் மற்றும் வீடுகளை சுத்தம் செய்ய ஸ்ப்ரேக்களை நாங்கள் பயன்படுத்தினோம் ஆனால் அவை கிருமிகளை அழிக்கும் திறன் வாய்ந்தவை என்று எங்களால் உறுதியாகக் கூற முடியவில்லை.
இவற்றை செய்ய நீண்ட நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும் என்றும் உங்களை சோர்வடையச் செய்யும் வேலையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நாங்கள் ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு அத்தியாவசியப் பொருட்களை கிருமிகளற்றதாக்குவதற்கு சில எளிய வழிகளை சோதித்துப் பார்த்த பின் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
1. உங்கள் ஃபர்னிச்சர் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
நாம் அதிகம் பயன்படுத்தும் சோபா கிருமிகள் வளர்வதற்கான புகலிடமாகும் .பல சமயங்களில் அதில் நீர் போன்ற பொருட்கள் சிந்தி இருக்கலாம், உணவுப் பொருட்கள், உடம்பின் எண்ணெய்ப் பசை, செல்லப் பிராணிகளின் ரோமம் மற்றும் இன்னும் பல மாசுக்கள் படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இதன் விளைவாக ஃபர்னிச்சர் மேல் பயன்படுத்தும் கவர்களை வாரத்திற்கு ஒருமுறையிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது குறைந்த இடைவெளியில் தூசு அகற்றும் கருவி மூலம் சுத்தம் செய்வது அவசியமாகும். அத்துடன் சேர்த்து ஆல்கஹால் அடிப்படையிலான ஸ்ப்ரே- ஐ பயன்படுத்தி காபி மேசைகள்,உணவு சாப்பிட பயன்படும் மேசைகள், நாற்காலிகள், படுக்கைகள் போன்ற பலவற்றையும் மறக்காமல் தினமும் சுத்தம் செய்கிறோம். பல்வேறு மேற்பரப்புகள் மற்றும் ஃபர்னிச்சர் போன்றவைகளை பாதுகாப்பாக கிருமிகளை நீக்கம் செய்ய டோமெக்ஸ் ஜெர்ம் கில் ஸ்ப்ரே -ஐ நாங்கள் தேர்ந்தெடுத்தோம். லேபிளைப் பார்த்து இதில் கலந்துள்ள ஆல்கஹால் அளவு உலகின் முன்னணி சுகாதார அமைப்புகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டோம். ஆதலால் எல்லா மேற்பரப்புகளிலுள்ள கிருமிகளையும் கொல்லும் சக்தி வாய்ந்தது என்று கூறலாம்.
2. உங்கள் சமயலறை மற்றும் படுக்கையறையில் உள்ள கிருமிகளை அகற்றுங்கள்

சமையல் மற்றும் படுக்கை அறைகளை அன்றாடம் சுத்தம் செய்தாலும் கிருமிகள் இல்லை என்பதை உறுதியாக கூற முடியுமா? சமையல் மேடைகள், சமையலறைத் தொட்டிகள் வீட்டு உபகரணங்களான மைக்ரோவேவ், ப்ரிட்ஜ் போன்ற பொருட்கள் காபினெட் கைப்பிடிகள், ஸ்டவ் மற்றும் ஓவன் நாப்ஸ் போன்ற இடங்களில் கிருமிகள் இருக்கலாம். படுக்கையறையில் விரிப்புகளை அடிக்கடி மாற்றுவது மட்டுமே போதுமானது என்று நினைக்கிறோம் ஆனால் நாம் பயன்படுத்தும் மெத்தைகளில் கூட கிருமிகளின் புகலிடமாக இருக்கலாம். ஆதலால் நாங்கள் டோமெக்ஸ் ஜெர்ம் கில் ஸ்ப்ரே -ஐ தொடர்ச்சியாக எல்லா மேல்பரப்புகளுக்கும் பயன்படுத்தி வீட்டை முடிந்தவரை பாதுகாப்பாக வைக்கிறோம். இது கை அடக்கமாக இருப்பதால் பயன்படுத்துவது எளிது. நன்றாக குலுக்கி மேல்புறமாக பிடித்துக்கொண்டு மேல்பரப்புகளில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆம், இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். நாங்கள் இதை மெத்தையின் மேல் மற்றும் பல்வேறு வகையான மேல்பரப்புகளுக்கும் பயன்படுத்தி இருக்கிறோம். ஸ்ப்ரே செய்த பின் துடைக்கத் தேவையில்லை மேலும் பயன்படுத்திய பின் இது மிகச்சிறந்த நறுமணம் வீசும்.
3. கேட்ஜெட்கள் மற்றும் பொம்மைகள் கிருமிகள் வளர்வதர்க்கான புகலிடம்
நீங்கள் அடிக்கடி தொடும் இடங்களில் கிருமிகள் அதிகம் இருக்கும். உங்கள் கேட்ஜெட்களை ஒரு நாளில் பலமுறை பயன்படுத்துவதால் அதில் கிருமிகள் நிறைய இருக்கும். டெலிவிஷன், TV ரிமோட், பிளே ஸ்டேஷன், லேப்டாப், மொபைல் ஃபோன் போன்றவைகளும் இவற்றில் அடங்கும். மேலும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆதலால் இது போன்ற அனைத்து மேல்பரப்புகளையும் கிருமிகளின்றி நீக்க தினமும் டோமெக்ஸ் ஜெர்ம் கில் ஸ்ப்ரே பயன்படுத்துங்கள். அதிசயிக்கும் அளவிற்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மின்னணு சாதனங்களுக்கும் பயன்படுத்தலாம். பலவகைகளில் உபயோகிப்பதால் சீக்கிரம் காலியாகிவிடும் என்ற தயக்கம் வேண்டாம் ஏன்னென்றால் இந்த ஸ்ப்ரே நாங்கள் நினைத்ததைவிட அதிக நாட்கள் நீடித்தது என்பது நமக்கு ஒரு வெகுமதி.
4. கதவு கைப்பிடிகள் மற்றும் ரைலிங்க்ஸ் போன்றவற்றை சுத்தம் செய்தல் அவசியம் என்பதை மனதில் வையுங்கள்
நாம் சுத்தம் செய்யும் போது கதவின் கைப்பிடிகள், ரைலிங்க்ஸ் போன்றவைகளை விட்டுவிடுவோம். அவ்வாறு தவறிய இடங்களில் கிருமிகள் வளரும் இடமாக இருக்கும். கதவின் கைப்பிடிகள், ரைலிங்க்ஸ், காபினெட் கைப்பிடிகள், லைட் ஸ்விட்ச், விளக்குகள் இவை அனைத்தும் அடிக்கடி தொட்டு பயன்படுத்தும் இடங்களாகும். இவற்றை டோமெக்ஸ் ஜெர்ம் கில் ஸ்ப்ரே போன்ற நம்பகமான பொருளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மிகச்சிறந்த நறுமணத்தை அளித்து மேல்பரப்புகளின் கிருமிகளை, சோப்பு மற்றும் நீர் இல்லாமல் அழிப்பதால் இதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.
5. உங்கள் வீட்டில் இருக்கும் ஈரப்பதத்தை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்
அதிக அளவிலான ஈரப்பதம் கிருமிகளை ஈர்க்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக மழைக் காலங்களில் நாம் கவலை அடைவதற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாகும். முறையாக ஃபான்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்கலாம் அதே சமயம் வீட்டை கிருமிகள் இல்லாமல் வைத்திருப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்பதை நாங்கள் கவனித்தோம். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வையுங்கள். இதனால் சூரியவெளிச்சமும் இயற்கைக் காற்றும் வீட்டிற்குள் நுழையும். இதை செய்வதன் மூலம் வீட்டை உலர்வாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் காற்றோட்டத்தை அதிகரிக்கும், இத்துடன் காற்றில் கலந்திருக்கும் கிருமிகளின் இருப்பை தடுக்கும்.
6. வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்குங்கள்
பொருட்கள் அதிகமாக இருக்கும் இடங்களை சுத்தம் செய்வது என்பது மிகக் கடினமான வேலை, இதனால் அந்த இடத்தில் அதிக அளவிலான கிருமிகள் இருக்கக்கூடிய வாய்ப்புக்களும் அதிகம். இதற்காக சமையலறை அலைமாறியிலிருந்தும் ஃபிரிஜிலிருந்தும் காலாவதியான உணவுப் பொருட்களை நீக்கினோம், உடைந்த பேனாக்கள், தீர்ந்துபோன டிஷ்யூ பேப்பர் பெட்டிகள், பழுதடைந்த சார்ஜர்கள், பழைய ஆடைகளை நன்கொடை செய்வது, பழைய அல்லது பயன்படுத்தாத ஃபர்னீச்சர் ஆகியவற்றை அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டோம். இவ்வாறு வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை களையும் வழக்கத்தை தொடங்கினோம். இதுபோன்ற சுலபமான வழிமுறைகளை கடைபிடித்த பின் வீடு விசாலமாக காட்சி அளித்ததோடு மட்டுமல்லாமல் எங்கள் வீட்டை கிருமிகளற்றதாக வைக்க உதவியது.
இந்த உதவிக் குறிப்புகள் உங்கள் ஃபர்னீச்சர்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை கிருமிகளற்றதாக வைத்திருக்க உதவும்.
ஆதாரம் - CDC