
நாம் நினைப்பதை விட அதிக அளவுக் கிருமிகள், நம் வீட்டுத் தரைகளில் இருக்கும். காலணிகளை அணிந்து கொண்டு நாம் நடக்கும் பொழுது, கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் உட்பட அனைத்தும் நம் காலணிகள் மூலமாக அனைத்து இடங்களுக்கும் கடத்தப்படுகிறது. வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், உணவின் மிச்சங்கள், தலையில் இருந்து விழுந்த முடிகள் எல்லாம் நிறைய வீடுகளில் தரையில் கிடக்கும். தற்போதைய சூழ்நிலையில் தரையைத் துடைப்பது, அதாவது அடிக்கடி சுத்தப்படுத்துவது மட்டும் போதாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் அடிக்கடி தரையில் உட்கார்ந்து விளையாடுவார்கள், தவழ்ந்து செல்வார்கள், மேலும் அவர்களின் விளையாடும் இடமே தரையாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு அதிக அளவு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நமக்கு ஒரு தரை சுத்திகரிப்பான் தேவைப்படுகிறது. அது தரையைச் சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றிலுள்ள கிருமிகளையும் திறம்பட அழிக்க வேண்டும். அதற்கு நாம் சில விஷயங்களை அவற்றில் கவனிக்க வேண்டும். எனவே, உங்களின் வேலையை எளிதாக்குவதற்கு ஒரு சரிபார்ப்புப் பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அது உங்கள் தரை சுத்திகரிப்பான் தனது வேலையைச் சரியாக செய்கிறதா? சிறப்பாகச் செய்கிறதா? என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
1. கிருமிகளையும், வைரஸ்களையும் உங்கள் தரை சுத்திகரிப்பான் அழிக்க வேண்டும்
வழக்கமான தரை சுத்திகரிப்பான்கள், தரையில் இருக்கும் அழுக்கு மற்றும் பிசுபிசுப்புகளில் இருந்து விடுபட உதவி செய்யும். ஆனால் நமக்கு அது மட்டுமே போதுமா? போதாது அல்லவா?. தரை சுத்திகரிப்பான்கள் தரையைப் பளபளப்பாக வைத்திருப்பதோடு, கிருமிகளையும் கொல்ல வேண்டியது அவசியம். அதற்காகத் தான் நாங்கள் டோமெக்ஸை தேர்ந்தெடுத்துள்ளோம். அதன் லேபிளில் குறிப்பிட்டிருப்பது போல, அது சோடியம் ஹைப்போகுளோரைட் என்னும் ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இதை முன்னணி சுகாதார அமைப்புகள், சிறந்த தரை சுத்திகரிப்பான் என்று பரிந்துரை செய்கிறது.
2. தரையைச் சுத்தம் செய்ய, அதிக அளவு தரை சுத்திகரிப்பானை, நீங்கள் உபயோகம் செய்ய வேண்டியது இல்லை
சில சமயங்களில், வீட்டின் தரைகள் அதிக அழுக்காக இருக்கும். அப்பொழுது நாம் வீட்டினை சுத்தம் செய்ய, அதிக அளவு தரை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்த வேண்டும் என்று தவறாக நினைக்கிறோம். அதிகமான அளவு தரை சுத்திகரிப்பானை பயன்படுத்தும் பொழுது, அது தரையில் சற்று பிசுபிசுப்பான தன்மையை விட்டுச் செல்லும் என்பதை நாங்கள் கவனித்தோம். எனவே ஒரு நல்ல தரை சுத்திகரிப்பான் என்பது, அதிக அளவில் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அதன் வேலையைச் சிறப்பாக செய்யும். அதனால் நாங்கள் டோமெக்ஸ் கிருமிநாசினி தரை சுத்திகரிப்பானுக்கு மாறினோம். இது தன்னுடைய வேலையைச் சிறப்பாக செய்யும், அதிக அளவில் இதை பயன்படுத்தத் தேவையில்லை. அதன் லேபிளில் குறிப்பிட்டுள்ள அளவு பயன்படுத்தினாலே போதும். அதாவது இரண்டு மூடி டோமெக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனரை, அரை வாளி தண்ணீரில் சேர்த்து, தரையைத் துடைத்தால் போதும், கிருமிகள் இல்லாத பளபளப்பான தரையை நாம் பெறலாம்.

3. கடினமான கறைகளை அகற்ற வேண்டும்
தரைகளில் சில சமயம் காபி, தேநீர், பழச்சாறு, ஒயின் போன்ற பிடிவாதமான கறைகள் இருக்கும். சில இடங்களில் கிரீஸ் மற்றும் நிரந்தரமான கறைகளும் இருக்கும். எந்த வகையான கறையாக இருந்தாலும், டோமெக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனரை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், அந்த கறையைச் சிரமமின்றி அகற்றிவிடலாம். கடினமான கறைகளை அகற்றுவதோடு, தரை சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக் கும் என்பதை நாங்கள் கவனித்தோம்.
4. செயற்கையான வாசனை கொண்ட தரை சுத்திகரிப்பான்கள் வேண்டாமே
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தரை சுத்திகரிப்பான்களில் செயற்கையான வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் நெடி அதிகமாக உள்ளதால், அது விரும்பத்தகாததாக இருக்கிறது. பினாயில் உபயோகப்படுத்தும் பொழுது அதிக அளவு விரும்பத்தகாத வாசனை அதிலிருந்து வந்தது. ஆனால், நீங்கள் டோமக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனரை பயன்படுத்தும் பொழுது, அது அதிகமான வாசனையைத் தருவதில்லை. மாறாக கிருமிகளை அழித்து, தூய்மையான தரைக்கு உத்திரவாதம் தருகிறது.
5. பல்வேறு மேற்பரப்புகளைச் சுத்தம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்
தரை சுத்திகரிப்பான்கள், தரையில் உள்ள கிருமிகளை அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாங்கள் அடிக்கடி பார்த்தோம். ஆனால் டோமெக்ஸ் டிஸ்- இன்ஃபெக்டண்ட் ஃபுளோர் கிளீனரை நீங்கள், பீங்கான் ஓடுகள், தளங்கள், கடினமான தரைகள் மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய உபயோகப்படுத்தலாம். இது கிருமிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல், குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் ஒவ்வொரு பொருளையும் சுத்தம்செய்ய தனித்தனியாக சுத்திகரிப்பான் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. டோமெக்ஸ் ஒன்றே அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்கிறது.
இந்த உதவிக் குறிப்புகள், உங்கள் தரை சுத்திகரிப்பான், அதன் பணியைத் திறம்பட சிறப்பாகச் செய்கிறதா? என்பதை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.