
தீபாவளி ஒளிமயமான பண்டிகை, கொண்டாட்டங்களும் அனைவரும் ஒன்று கூடுவதும் என ஆனந்தம் பொங்கிடும். உங்கள் வீட்டில் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய நீங்கள் இயன்றவரை முயற்சி செய்வீர்கள். அனைத்திற்கும் மேலாக புத்தம்புதிதாக தோன்றும் சுத்தமான வீட்டில் மகாலட்சுமி தாயாரை வரவேற்கும் தருணம் இது. உங்கள் வீட்டில் மிக முக்கியமாக அனைவரும் உட்காரும் பகுதி உங்கள் வரவேற்பு அறை. இதில் தான் சோபா இருக்கும். இங்கே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து உரையாடி மகிழ்வார்கள். எனவே, உங் கள் சோபா உட்கார விரும்பும் விதத்தில் பளிச்சென தோன்ற வேண்டும்.
எனவே உங்கள் சோபாவை தீபாவளிக்காக தயார் படுத்த இந்த சுத்தப்படுத்தும் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
நீங்கள் உங்கள் சோபாவை சுத்தம் செய்யும் முன்பு முதலில் அதன் மெத்தை பகுதியை பரிசோதியுங்கள் அல்லது சோபா தயாரிப்பாளர் அளித்த புத்தகத்தை பாருங்கள்.
1) மெத்தைப் பகுதியை சுத்தம் செய்தல்
1/4 கப் வினிகர், 3/4 கப் வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் 1 மேஜைக்கரண்டி டிஸ்வாஷிங் லிக்விடு அனைத்தையும் கலந்து ஒரு கரைசலை தயாரித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கறைகள் பட்டுள்ள இடத்தில் தெளியுங்கள். கறை முழுவதும் போகும் வரை சுத்தமான துணியால் தேயுங்கள். பின்பு சுத்தப்படுத்திய பகுதியில் ஒரு மைக்ரோஃபைபர் துணியால், ஒற்றி துடைத்து உலர விடுங்கள்.

2) லெதர் மெத்தை சோபாவை சுத்தம் செய்தல்
இதற்கு ஆலிவ் ஆயில் 1/2 கப், வினிகர் 1/4 கப் மற்றும் 1 மேஜைக்கரண்டி டிஸ்வாஷிங் லிக்விடு நன்கு கலந்து கரைசல் உருவாக்குங்கள். இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி கறைகள் பட்டுள்ள இடத்தில் தெளியுங்கள். கறை முழுவதும் போகும் வரை சுத்தமான துணியால் நன்கு தேய்த்து பின்பு ஒரு மைக்ரோஃபைபர் துணியால் சுத்தப்படுத்திய பகுதியில் ஒற்றி உலர விடுங்கள்.
3) ஃபாக்ஸ் லெதர் மெத்தை சோபாவை சுத்தம் செய்தல்
ஒரு பாத்திரத்தில் 2 கப் கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் விரும்பும் டிஸ்வாஷிங் லிக்விடு 4-5 துளிகள் சேர்த்து, நன்கு கலக்குங்கள். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இதை ஊற்றி நன்கு குலுக்குங்கள். இப்போது இதை ஒரு சுத்தமான துணி மீது ஸ்ப்ரே செய்து அந்த துணியால் உங்கள் சோபாவை இதமாக சுத்தப்படுத்த ஆரம்பியுங்கள். சுத்தம் செய்யப்படும் துணியில் இருந்து தண்ணீர் சொட்ட விடக் கூடாது. இதனால் மீண்டும் உங்கள் சோபாவில் ஈரக் கறைகள் படியும். பின்பு ஒரு மைக்ரோஃபைபர் துணியால் அந்த பகுதி முழுவதையும் ஒற்றி உலர விடுங்கள்.
சுலபமாக உங்கள் சோபா மெத்தையில் இருந்து கறைகளை அகற்ற இந்த உதவிகரமான குறிப்புகளை பயன்படுத்துங்கள்.