உங்கள் சுவர்களில் இருந்து ஊதுவத்தி புகைக் கறைகளை அகற்றுவது எப்படி

உங்கள் சுவரின் புகைக் கறை குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அந்த கறைகளை மாயமாகச் செய்ய இந்த கட்டுரையைப் பின்பற்றுங்கள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Remove Ooodhubatti (Dhoop Batti) Smoke Stains from Your Walls
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

பெரும்பாலான தமிழ் குடும்பங்களில் மக்கள், தங்கள் பூஜை அறை / பிரார்த்தனை அறை  சுவர்களின் மூலையில் ஒரு கருமை படிந்த இடத்தைக் கவனிக்கின்றனர். இது ஊதுவத்தியில் இருந்து வரும் புகைக் கறையாகும். தினமும் அவற்றை சுத்தம் செய்யாததால், அவை காலப்போக்கில் விடாப்பிடியான கறையாக மாறிவிடுகின்றன. அவற்றை எளிதாக அகற்ற சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் இங்கே.

படிநிலை 1: திசு காகிதத்தினால் துடைக்கவும்

உலர்ந்த திசு காகிதத்தினால் புகை கறையைத் துடைத்து  புகை கறையின் உலர்ந்த மேல் அடுக்கை அகற்றவும், அவற்றை மற்ற சுத்தமான பகுதிகளுக்கு பரப்பாமல் பார்த்துக் கொள்ளவும்.

படிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும்

ஒரு வெற்று தெளிப்பு பாட்டிலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீரை நிரப்பவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சலவை சோடா / சுவர் கிளீனர்கள் / ப்ளீச் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

படிநிலை 3: தெளிக்கவும், 10 நிமிடங்கள் காத்திருக்கவும்

கறை மீது கரைசலை சமமாக தெளித்து 10 நிமிடங்கள் விடவும். 

படிநிலை 4: கறையை நன்றாக தேய்க்கவும்

இப்போது கறை மீது சிறிது தண்ணீர் தெளித்து வட்ட வாக்கில் தூரிகை கொண்டு தேய்க்கவும். 

படிநிலை 5: துடைக்கவும்

இப்போது ஈரமான துணியை எடுத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் மெதுவாக துடைக்கவும்.

படிநிலை 6: செயல்முறையை மீண்டும் செய்யவும்

மீண்டும் கறையின் மீது தண்ணீர் தெளித்து சுவர் சுத்தமாக மாறும் வரை உலர்ந்த துணியால் துடைக்கவும்.

படிநிலை 7: உலர விடவும்

இயற்கையாக உலர விடவும்.

இதோ! உங்கள் இருண்ட புகை சுவர்கள் இனிமேல் புதிது போல் மின்னும் !!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது