மின்னணு மொபைல் லேப்டாப் சுத்தப்படுத்துவது டோமெக்ஸ்

நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என என்றாவது எண்ணியதுண்டா? இதோ, உங்கள் மின்னணு சாதனங்களை எப்போதும் சுத்தமாக, கிருமிகள் இல்லாமல் வைத்திட சில டிப்ஸ்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

மின்னணு | மொபைல் லேப்டாப் சுத்தப்படுத்துவது | டோமெக்ஸ்
விளம்பரம்
Domex Wipes

நாம் கடைசியாக எப்போது நம் மின்னணு சாதனங்களை சுத்தம் செய்தோம், ஸ்மார்ட்போன்களை சுத்தப்படுத்தினோம் அல்லது மடிக்கணினிகளை கிருமி நீக்கம் செய்தோம் என நினைவிருக்கிறதா? இவை அனைத்தும் 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமானவை, ஆனால் அதனை கிருமி நீக்கம் செய்ய கவனம் செலுத்த மாட்டோம். அதுவும், இந்த பெருந்தொற்று காலத்தில், இந்த சிறிய சுகாதார செயல்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் தர வேண்டும். குழந்தைகளும், பெரியவர்களும் கூட இந்த சாதனங்களை உபயோகிக்கிறார்கள், எனவே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள், ரிமோட் கண்ட்ரோல்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் போன்றவை அழுக்கு மற்றும் தூசியை காந்தம் போல இழுக்கும். நம் கைகளில் இருக்கும் அழுக்கும் அதன் மேல் ஓட்டும். இப்படியே மாறி மாறி அழுக்கு ஓட்டுவது தொடரும். இதில் உண்மையான பயம் என்னவென்றால், இந்த கிருமி பரவும் சுழற்சி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும். வீட்டிலேயே சில கிருமி நாசினிகளை தயாரித்துப் பார்த்தோம் ஆனால அவை கிருமிகளை முற்றிலுமாக நீக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. எனவே, நீங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது வெளியில் வேறு எங்காவது இருந்தாலும் உங்கள் மின்னணு சாதனங்களை சுத்தமாகவும், கிருமிகளற்று வைத்திருக்கவும் சில எளிய, விரைவான உதவிக்குறிப்புகளை நாங்கள் கொடுக்கிறோம்.

1. உங்கள் சாதனங்களை சுத்தம் செய்ய எப்போதும் மென்மையான, மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துங்கள்

நம் மின்னணு சாதனங்கள் நமக்கு எவ்வளவு விலைமதிப்புள்ளவை என்பதை நாம் அனைவரும் அறிவோம் - எனவே அவற்றின் மென்மையான தன்மை காரணமாக சுத்தம் செய்யும் போது அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் கவனம் தேவை. தூசித் துகள்களை சுத்தம் செய்வதற்கும் அகற்றுவதற்கும் ஒரு மென்மையான துணியைப் பயன்படுத்துவதால், சாதனங்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அவற்றை சுத்தம் செய்கிறோம் என்பதை உறுதி செய்யலாம். தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் திரைகளில் கீறல்கள் விழுவதை தடுக்கலாம்.

2. திடமான துகள்களை முதலில் தட்டிவிடுங்கள்

விளம்பரம்
Domex Wipes

உலகம் தற்போது இருக்கும் நிலையில், நாம் மடிக்கணினியில் வேலை செய்யும் போது எதாவது சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது. குழந்தைகளும் ஆன்லைனில் படிப்பதால், சாதனங்கள் மேலும், கீ போர்ட் இடையிலும், பென்சில் சீவிய துகள்கள், அழிப்பானில் இருந்து விழும் துகலைகள் என்று குப்பை சேரும். இந்த துகள்களை நீக்க, அந்த சாதனங்களை மெதுவாக அசைப்பதன் மூலம் வெளியேற்றிவிடலாம். இதனை அவ்வப்போது செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், சாதனங்களில் குப்பை சேராது என்பதே எங்கள் பரிந்துரை. மேலும், இதைச் செய்வது, கணினி, மற்றும் ஸ்மார்ட்போன் தொடு திரையின் செயல்பாட்டை சரியாக வைக்க உதவும்.

3. திரை விளிம்புகள் மற்றும் பள்ளமான இடங்களை, காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்

நம் எல்லோருக்குமே தெரியும், மின்னணு சாதனங்களில் உள்ள இடுக்குகள், விளிம்புகள் போன்றவற்றில் இருக்கும் அழுக்கை நீக்குவது மிக சிரமம். ரிமோட் பட்டன் இடையில், தொடு திரை விளிம்பு போன்றவற்றில் சேரும் தூசியை நீக்குவது சிரமம். இதை சுலபமாக நீக்க காட்டன் பட்ஸ் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால் அதன் முனையை சிறிதளவு தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். நம் விரல்களால் தொட முடியாத சிறிய இடங்களில் உள்ள அழுக்கை நீக்க பட்ஸ்ஐ பயன்படுத்தலாம்.

4. கிருமி நீக்கும் வைப்ஸ் பயன்படுத்தவும்

மின்னணு சாதனங்களை சுத்தப்படுத்துவது மட்டுமே நமக்கு முக்கியமில்லை, அதில் படிந்திருக்கும் கிருமிகளையும் நீக்க நாம் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். மின்னணு சாதனங்களில் உள்ள அழுக்கையும் கிருமிகளையும் நீக்க, டொமெக்ஸ் ஜெர்ம் ரிமூவல் வைப்ஸ் போன்ற மல்டி பர்பஸ் துடைப்பான்கள் பயன்படுத்துவது எளிதான மற்றும் செயலாற்றக்கூடிய வழி என்று கண்டறிந்தோம். அவை எளிதாக மீண்டும் சீல் செய்யக்கூடிய பாக்கெட்களில் வருகிறது. இதை வீட்டில் மட்டுமல்லாமல் வெளியே செல்லும் போதும் பயன்படுத்துவது, இந்த கொடிய நோய் சூழலில் உதவிகரமாக இருக்கும். இது கிருமிகளை நீக்கி முற்றிலும் கிருமி இல்லாமல் வைப்பதுடன், இனிமையான நறுமணமும் தரக்கூடிய சூத்திரத்தில் அமைந்துள்ளதாக, அதன் பேக்கை படித்தபோது தெரிந்துகொண்டோம். மேலும் நம் கைகளுக்கும் இதமானதாக இருக்கும். எனவே வீட்டிலும், வெளியிலும் நம் சாதனங்களை சுத்தப்படுத்துவது நம் கைகள் வறண்டு போகாமல் இருக்கும்.

5. கேபிள் வயர்களை சுத்தமாக்க மறக்காதீர்

மின்னணு சாதனங்களைப் போலவே அதன் கேபிள் வாயர்களையும் சுத்தமாக வைப்பது அவசியம் என்று உங்களுக்குத் தெரியுமா? வயர்களில் இருந்து சாதனங்களுக்கும், சாதனங்களில் இருந்து வயருக்கும் மாற்றி மாற்றி கிருமிகள் பரவுவதை தடுக்க வேண்டும். எனவே வயர்களை கிருமி இல்லாமலால் சுத்தமாக, சிக்கல் இல்லாமல் அழகாக வைத்திருப்பது, உங்கள் சாதனங்களை சுத்தமாக வைத்திருக்க முதல் படியாகும். வயர் மற்றும் அடாப்டர்களில் இருக்கும் அழுக்கை, ஒரு நுண்துகள் துணியால் துடைத்து, சிக்கல் நீக்கியபின், டொமெக்ஸ் ஜெர்ம் ரிமூவல் வைப்ஸ் போன்ற பாதுகாப்பான துடைப்பான்களை பயன்படுத்துவது, அதனை சுத்தமாகவும், நீண்ட நாட்களுக்கு செயலாற்றவும் உதவும்.

6. சாதனங்களின் உறைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவும்

லேப்டாப் பைகள், மொபைல் போன் கவர்கள், மவுஸ் பேட்கள், டேப்லெட் கவர்கள், ரிமோட் கவர்- இவையெல்லாம் தூசி சேர்ந்து, கிருமி வளர நிறைய வாய்ப்பிருக்கும் ஹாட்ஸ்பாட் இடங்கள். இவையெல்லாம் அப்படியே சாதனங்களுக்கும் இடமாறும். எங்கள் அனுபவத்தில், அவற்றை சுத்தமாக வைத்திருப்பது நம் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கியமானது. அவற்றில் உள்ள தூசியை, ஈர துணி மூலம் நீக்கி விட்டு, கிருமிகளை அகற்ற டொமெக்ஸ் ஜெர்ம் ரிமூவல் வைப்ஸ் பயன்படுத்தலாம். பின் அவற்றை, நன்றாக காற்றில் உலர விட வேண்டும். நன்றாக உலர்ந்த பின்னேதான், உறைகளை மீண்டும் போட வேண்டும்.

உங்கள் மின்னணு சாதனங்களை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் அவற்றை கிருமிகளற்ற முறையில் வைத்திருப்பது குறித்த இந்த எளிய உதவிக்குறிப்புகளை இப்போது நாங்கள் பகிர்ந்துள்ளோம், தூய்மை மற்றும் சுகாதாரத்தை எப்போதும் பராமரிக்க உங்கள் அன்றாட வழக்கத்தில் அவற்றை செய்வீர்கள் என்று நம்புகிறோம்!

சுத்தம் செய்யும் போது உங்கள் பாதுகாப்பையும் மின்னணு சாதனங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே:

  • சாதனங்களின் கையேட்டில் உள்ள, 'எப்படி சுத்தம் செய்வது' என்பதை முதலில் படிக்கவும்.

  • நீங்கள் சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன், அனைத்து ப்ளக்கை அகற்றவும், சாதனங்களை அணைக்கவும் அல்லது பேட்டரிகளை அகற்றவும்.

  • திரவங்கள், நாமே தயாரிக்கக்கூடிய கரைசல்கள், கிளீனர்கள் அல்லது சுத்திகரிப்பாளர்களை நேரடியாக மின்னணு சாதங்களின் மீது தெளிக்க வேண்டாம்.

உங்கள் சாதனங்களை சுத்தம் செய்யும் போது தண்ணீரோ அல்லது எந்தவிதமான சுத்தப்படுத்தும் திரவமோ கொட்டுவதைத் தவிர்க்க நீங்கள் கூடுதல் கவனமாக இருக்கவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது