வீட்டு வேலை ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கலாம்

நீங்கள் உங்கள் வீட்டையும் உங்கள் உடலையும் கச்சிதமாக வைத்துக் கொள்ள சுவாரஸ்யமான சில உதவிக் குறிப்புகளை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்தில் உள்ளீர்கள். இந்த கையேட்டை பின்பற்றி மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Did You Know Housework Can Be A Great Workout? Find Out More
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

உங்கள் வீட்டிற்கு வேலை செய்ய ஆட்கள் வராததால் வீட்டு வேலைகள் குவிந்து உங்களுக்கு பெரும் பாரமாக இருக்கிறதா? அதேசமயம் உங்களால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? உங்கள் வீட்டை நீங்கள் சுத்தம் செய்யவும், கிருமிகளை நீக்கவும், செய்யும் வேலைகளே உங்களுக்கு பெரிய உடற்பயிற்சி ஆகும். இந்த கட்டுரையில் நீங்கள் செய்யும் சாதாரண வீட்டு வேலைகள், எவ்வாறு உங்கள் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு உங்கள் வீட்டையும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்பதனைக் காணலாம்.

1) நேர்த்தியான முறையில் பொருட்களை நீக்கவும்

ஒரு சுத்தமான வீட்டை பெறுவதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, நேர்த்தியான முறையில் பொருட்களை நீக்குவதே ஆகும். நீங்கள் குனிந்து ஸ்குவாட் செய்து, பொம்மைகளையும், புத்தகங்களையும், பேப்பர்களையும், துணிகளையும், தரை, சோஃபா, மெத்தைகள் போன்ற இடங்களில் இருந்து எடுப்பது ஒரு சிறந்த யோசனையாகும். ஸ்குவாட் செய்வது உங்கள் உடலுக்கு ஒரு சிறந்த பயிற்சியாகும்.

2) சுத்தம் செய்ய வேண்டும்

உலக சுகாதார அமைப்பு (WHO), நாம் அதிகமாக தொடக் கூடிய இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கிருமிகளை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.இது மேஜைகள், நாற்காலிகள், கதவு கைப்பிடிகள், கேபினட் கைப்பிடிகள், போன்றவையாகும். நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதன் இருமினால் அல்லது தும்மினால், அந்த நீர் துகள்களில் இருக்கும் கிருமிகள், மூன்று அடி தூரம் வரை செல்லும். அதுமட்டுமின்றி அவை அருகில் இருக்கும் இடங்கள் மீதும் படிந்துவிடும். இதை சுத்தம் செய்வதற்கு, வழக்கமாநன வீட்டு சோப்புதூள் மற்றும் தண்ணீரை பயன்படுத்தலாம். எனவே அந்த இடங்களை கிருமிகளிலிருந்து சுத்தம் செய்வதற்கு ஒரு தகுந்த பீளீச் சார்ந்த (சோடியம் ஹைப்போ குளோரைட்) கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் டொமக்ஸ் தரை கிளீனரை பயன்படுத்தலாம். இது கிருமிகளை நேர்த்தியாக கொன்றுவிடும். எப்பொழுதும் முதலில் அதன் தன்மையை சோதிக்க, ஒரு சிறிய மறைவான இடத்தில் அதை உபயோகப் படுத்திப் பார்க்க வேண்டும். 

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

நீங்கள் இவ்வாறு சுத்தம் செய்யும் பொழுதும், கிருமிகளை நீக்கும் பொழுதும், உங்கள் உடல் நன்றாக பயிற்சி பெறுகிறது. ஒரு எடுத்துக்காட்டாக, நாம் தரையைப் பெருக்கும் போதும் , துடைக்கும் போதும் , தூசித் துகள்களை மூலை முடுக்கில் இருந்து நீக்கும் போதும்,  மேஜை நாற்காலிகள் போன்ற தளபாடங்களை தள்ளிவைத்து செய்வோம். அதுவே நம் உடலிற்கு ஒரு வகையான உடற்பயிற்சி ஆகும். கூடுதலாக நீங்கள் சற்று கடுமையான உடற்பயிற்சியை விரும்பினால், நின்றுகொண்டு தரையை துடைப்பதற்கு பதிலாக ஸ்குவாட் செய்துகொண்டு துடைக்கலாம்.

3) பாத்திரங்களை கழுவுதல்

கிருமிகள் நம் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் வரும் நீர் துகள்களின் மூலம் பரவுகின்றது. எனவே வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனியான தட்டுகள்,   கப்புகள், கிண்ணங்கள், கரண்டிகள்,  போன்ற பாத்திரங்களையும் க்ராகரியையும் பயன்படுத்துவது நல்லது. அனைவருக்கும் தனித் தனியான பாத்திரங்கள் இருந்தால், அதை சுத்தம் செய்வது எளிதாகிவிடும். பாத்திரங்களை கழுவும் பொழுது நின்றுகொண்டு இரண்டு கைகளையும் தோள் பட்டைகளையும் உபயோகித்து கழுவ வேண்டும். நின்று கொண்டிருப்பது நாம் சோஃபாவில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டே இருப்பதை விட அதிக கேலரியை கரைக்கும்.அதுபோக பாத்திரங்களை தேய்த்துக் கழுவுவதால் நம் கைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.

4) துணிகளை துவைத்தல்

உங்கள் துணிகளை தினமும் சுத்தமாக துவைப்பது, கிருமிகளிடமிருந்தும், நோய்த் தொற்றில் இருந்தும், உங்களை பாதுகாக்கும். உங்கள் வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் இருந்தாலும் சில துணிகள் மென்மையாக மற்றும் சாயம் போகக் கூடியதாக இருப்பின், அதை நீங்கள் கைகளால் துவைக்க நேரிடும். அதைப் போன்ற துணிகளை உங்கள் குளியலறை தரையில்  உட்கார்ந்து கொண்டே  துவைக்கலாம். நீங்கள் உங்கள் துணிகளை ஒரு பேஸினில் துவக்க எண்ணினால் சில நேரங்களுக்கு நின்று கொண்டு துவைப்பதும், உடலுக்கு நல்ல பயிற்சியே ஆகும். இந்த இரண்டு முறையிலும் உங்கள் கைகளுக்கும், தோள்களுக்கும், கீழ் உடல் பாகங்களுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.

பார்த்தீர்களா! வீட்டை விட்டு வெளியே போக முடியாத இதுபோன்ற சமயங்களில், வீட்டு வேலைகள் கூட நமக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமைந்து விடுகிறது!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது