
உங்களின் தினசரி வாழ்க்கைப் பழக்கங்களால் சுவர்களில் அழுக்கும் கறைகளும் படிகின்றன. இதனால் சுவர்களின் அழகு மங்கி விடுகிறது. கவலைப்படாதீர்கள், அவற்றை துடைத்து சுத்தம் செய்ய இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
கறையை அகற்றும் நடைமுறையில் மிக முக்கியமானது இயன்ற வரை கறையை உடனே அகற்றுவதே. நீங்கள் எவ்வளவு விரைவாக அகற்றுகிறீர்களோ அந்த அளவு அதை அகற்றும் வழியும் சுலபம்.
உங்கள் பெட்ரூம் சுவர்களில் படிந்த அழுக்கான கை கறைகளை அகற்ற கீழே குறிப்பிட்டுள்ள குறிப ்புகள்படி செய்யுங்கள்.
1) டிஷ்வாஷிங் லிக்விட் + வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள்
முதலில் உங்கள் சுவர்களில் உள்ள பெயிண்ட் பற்றி சிந்தியுங்கள். உங்கள் சுவர்களில் வாட்டர்ப்ரூஃப் பெயிண்ட் அடித்திருந்தால் நீங்களே அவற்றை வாஷ் செய்து விடலாம். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொண்டு அதில் 4-5 துளிகள் டிஷ்வாஷ் லிக்விட் ஊற்றுங்கள். நன்கு கலக்கிய பின்பு இந்தக் கரைசலில் ஒரு சுத்தமான ஸ்பாஞ்ச்-ஐ நனைத்து அதன் மூலம் சுத்தப்படுத்த ஆரம்பியுங்கள்.

உங்கள் சுவர்களில் வாட்டர்-ப்ரூஃப் பெயிண்ட் அடித்திருக்காவிட்டால் உங்களுக்கு ஒரு அனுபவம் மிக்க பணியாளரின் உதவி தேவைப்படும்,
2) வினிகர் + பேக்கிங் சோடா பயன்படுத்துங்கள்
பெரும்பாலான கறைகளை சோப் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் சுத்தப்படுத்தும் சரியான கரைசலை தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். 1 கப் வினிகர் மற்றும் 1/4 கப் பேக்கிங் சோடா எடுத்துக் கொண்டு ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் நன்கு கலந்து சுத்தப்படுத்தும் கரைசலாக்கி கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துணியை இந்தக் கரைசலில் முக்கி உங்கள் சுவர்களை துடைத்து சுத்தம் செய்யுங்கள்.
முதலில் மேலிருந்து ஆரம்பித்து மெல்ல மெல்ல கீழ் நோக்கி துடைக்க வேண்டும். இதனால் எந்த அழுக்கு அடையாளங்கள் இருந்தாலும் மறைந்து விடும். இதனால் நீர் சொட ்டி கறை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
3) பேக்கிங் சோடா + வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள்
நீங்கள் பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து ஒரு பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் இந்தக் கறைகளை அகற்றலாம். ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் 1/4 கப் பேக்கிங் சோடா கலந்து கரைசல் ஆக்கிக் கொள்ளுங்கள். மேலிருந்து கீழ் வரை கறைகள் மீது இந்தக் கரைசலை இதமாகத் தேயுங்கள். பின்பு ஒரு சுத்தமான உலர்ந்த துணியால் துடைத்து சுத்தம் செய்யுங்கள்.
உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் உங்கள் வீட்டின் சுத்தமான அழகான சுவர்களை பாராட்டும் போது அது உங்களுக்கு பெருமையாக இருக்கும் அல்லவா. அதன் பின் எங்களுக்கு நன்றி கூறுங்கள்!