
உங்கள் அந்தஸ்த்தை, நேர்த்தியை மற்றும் ரசனையைக் காட்ட மார்பிள் தரை மிகவும் சிறந்த வழி. இது உங்கள் வீட்டின் அழகை உடனடியாக எடுத்துக் காட்டும். அதுமட்டுமல்ல, இது உங்கள் வீட்டை கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். ஆனால் அனைத்து இயற்கையான கற்களைப் போலவே மார்பிளிலும்கூட கறை மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும்.
கவலை வேண்டாம், அதற்கான சுலபமான தீர்வு எங்களிடம் உள்ளது.
உங்கள் தரையை பளபளவென சுத்தமாக வைத்திருக்க இந்த சுலபமான சுத்தப்படுத்தும் முறைய ை செய்துப் பாருங்கள்.
ஸ்டெப் 1:
தரையை நன்கு பெருக்கி அங்கங்கே இருக்கும் தூசை நீக்கவும்

ஸ்டெப் 2:
இப்போது உங்கள் க்ளீனிங் சொல்யூஷனை நீங்களே தயாரியுங்கள். 3 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் 2 துளி டிஷ்வாஷ் ஜெல்லை கலந்து அதை ஒரு வாளியிலுள்ள வெதுவெதுப்பான தண்ணீரில் விட்டு நன்கு கலக்குங்கள்.
ஸ்டெப் 3:
ஒரு சுத்தமான ஸ்பாஞ்ஜை எடுத்து இந்த கரைசலில் நனைத்து தரையை நன்கு தேய்க்கவும். ஸ்பாஞ்ஜை அடிக்கடி சுத்தமான தண்ணீரில் அலசி அதிலிருக்கும் அழுக்கை நீக்கவும். இது மீதமுள்ள அழுக்கை சுலபமாக உறிஞ்ச உதவும்.
ஸ்டெப் 4:
இதோ ஃபைனல் டச் கொடுக்க வேண்டிய நேரம். அழுக்கை நீக்கிய உடன் உங்கள் மார்பிள் தரை கிட்டத்தட்ட சுத்தமாகிவிடும். ஒரு உலர்ந்த துணியை எடுத்து தரையை நக்கு சுத்தம் செய்து அதிகப்படியான தண்ணீரை நீக்கவும். இதனால் பளபளக்கும் சுத்தம் கிடைக்கும்.
அவ்வளவுதான்! வீட்டிலுள்ள மார்பிள் தரையை விரைவில் பளபளக்கும் சுத்தமாக வைக்கலாம். மார்பிள் தரையை அதிகம் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அது தவறு! அடுத்த முறை உங்கள் மார்பிள் தரையை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், இந்த சுலபமான முறையை செய்து பாருங்கள். இது பலன் அளிக்கும்.
முக்கியமான ஸ்டெப்
மார்பிள் தரையில் வினிகரோ அல்லது எலுமிச்சை சாறோ பயன்படுத்தாதீர்கள். இந்த பொருள்கள் ஆசிடு என்பதால் அவை உங்கள் மார்பிள் தரையை சேதமாக்கக்கூடும்.