உங்கள் கைப்பெட்டியை சுத்தம் செய்ய இந்த எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

உங்கள் கைப்பெட்டியை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதைச் செய்ய சில எளிய வழிமுறைகள் இங்கே!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Follow These Simple and Effective Steps to Clean Your Luggage
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

பயணம் செய்யும் போது, ​​நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய நம்பர் ஒன் விதி , குறைவான பெட்டிகளோடு பயணிக்க வேண்டும். நீங்கள் எடுத்துச் செல்லும் குறைவான பைகள், நீங்கள் பார்வையிடும் இடத்தை ஆராய்வதற்கு எளிதாக இருக்கும். நீங்கள் சுத்தம் செய்யவும் குறைவான சூட்கேஸ்கள் இருக்கும். நீங்கள் திரும்பி வரும்போது மூட்டைப்பூச்சிகள் அல்லது பல்வேறு நோய்களை உருவாக்கும் கிருமிகளை உங்கள் சூட்கேஸில் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் பெட்டியை ஆழமாக சுத்தம் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டுதல் இங்கே.

படிநிலை 1 : உங்கள் சூட்கேஸை காலி செய்யுங்கள்

உங்கள் சூட்கேஸை சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் அனைத்து பைகளையும் காலி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

படிநிலை 2:  உங்கள் சூட்கேஸை வேக்குவம் செய்யுங்கள்

வேக்குவம் க்ளீனர் பயன்படுத்தி உங்கள் சூட்கேஸிலிருந்து தளர்வான அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்றவும். சூட்கேஸில் உள்ள பக்க பைகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உங்களிடம் வேக்குவம் க்ளீனர் இல்லை என்றால், துணியால் தூசி தட்டவும்.

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

படிநிலை 3:  நீக்கக்கூடிய சேமிப்பு பைகளை கழுவவும்

உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் படித்து, அதற்கேற்ப பிரிக்கக்கூடிய சேமிப்பு பைகளை கழுவவும். நீங்கள் இயந்திரத்தில் கழுவினாலும், அல்லது கைகளால் கழுவினாலும், வெதுவெதுப்பான நீரில் லேசான சோப்பு பயன்படுத்துவது நல்லது.

படிநிலை 4: உட்புற லைனிங்கை சுத்தம் செய்யவும்

உங்கள் சூட்கேஸின் உட்புறம், நைலான் அல்லது வேறு சில செயற்கை பொருட்களால் செய்யப்பட்டிருந்தால், அதை ஈரமான துணியால் மெதுவாக துடைக்கவும். நீங்கள் ஒரு பஞ்சை, ஒரு சோப்பு கரைசலில் ஊறவைத்து, உட் புறத்தை துடைக்கலாம். பின்னர், சுத்தமான நீரில், நனைந்த புதிய பருத்தி துணியை கொண்டு கழுவ வேண்டும். உலர்ந்த துண்டினால் துடைக்கவேண்டும். உங்கள் சூட்கேஸில், துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கு உட் புறத்தை காற்றாட உலர விடுங்கள்.

படிநிலை 5: கறைகளை கவனியுங்கள்

தண்ணீர் மற்றும் சமையல் சோடா, ஒவ்வொன்றும் 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவும். ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். பேஸ்ட்டை கறை படிந்த இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பழைய பல் துலக்கும் தூரிகையை கொண்டு துடைத்து, ஈரமான துணியால் சுத்தம் செய்யவும். தேவைப்பட்டால், முழு செய்முறையையும் மறுபடியும் செய்யவும்.

படிநிலை 6: கைப்பிடி மற்றும் சக்கரங்களை கிருமி நீக்கம் செய்யுங்கள்

 கிருமிகள் பரவுவதைத் தவிர்க்க, ஒரு திசு காகிதத்தில் சில துளி சானிட்டீசரை ஊற்றி, உங்கள் சூட்கேஸின் பிளாஸ்டிக் கைப்பிடி / லைனிங் மற்றும் சக்கரங்களை நன்கு துடைக்கவும்.

படிநிலை 7: வெளிப்புறங்களை சுத்தம் செய்யுங்கள்

ஒரு குறுகிய விளக்குமாறு அல்லது ஒரு வேக்குவம் க்ளீனர் பயன்படுத்தி உங்கள் சூட்கேஸின் வெளிப்புறங்களிலிருந்து அழுக்கை அகற்றவும்.

படிநிலை 8: சூட்கேஸ் நடுப்பகுதியை சுத்தம் செய்யுங்கள்

தோல் சூட்கேஸ்களுக்கு, லேபிளில் உள்ள அறிவுறுத்தல்களின்படி தோல் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவும். துணி சூட்கேஸ்களுக்கு, லேசான சோப்பு மற்றும் ஈரமான துணியால் சுத்தம் செய்யுங்கள். கடைசியாக, அலுமினிய பைகளுக்கு, வெதுவெதுப்பான நீரில் நனைத்த ஒரு துண்டினால் துடைத்தால் போதும்.

படிநிலை 9: ஜிப் மற்றும் லாட்சுகள் சுத்தப்படுத்தவும்

உங்கள் சூட்கேஸ்களின் சக்கரங்கள், ஜிப் மற்றும் பிற வன்பொருள்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சோப்பு நீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி , ஒரு துணியை நனைத்து அவற்றை துடைக்கவும். உலர வைக்க, மற்றொரு சுத்தமான துணியைப் பயன்படுத்தவும். அல்லது காற்றில் உலர்த்தவும்.

நீங்கள் இப்போது அடுத்த பயணத்திற்கு தயாராகலாம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது