
உங்கள் கைப்பேசி , உங்களுக்கு இன்னொரு கையை போன்றது. ஒவ்வொரு முறையும் ஒரு இடத்தை நீங்கள் தொட்டு, பிறகு உங்கள் கைப்பேசியை தொட்டால் உங்கள் கையில் இருக்கும் கிருமிகள் உங்கள் கைபேசிக்கு போய் சேர்ந்து விடும். நீங்கள் உங்கள் கைப்பேசியை மற்ற எந்த பொருளையும் விட அதிகமான முறையில் தொட்டு உபயோகப்படுத்துகிறீர்கள். உலக சுகாதார அமைப்பு, அதிகமாக தொடக்கூடிய அனைத்து பொருள்களையும் இடங்களையும் தினந்தோறும் சுத்தம் செய்து கிருமிகளை நீக்க வேண்டும் என்பதனை அறிவுறுத்தியுள்ளது. எனவே அந்த பட்டியல ில் உங்கள் கைபேசியும் சேர்த்து, தினமும் அதை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
நீங்கள், பொது இடங்களை தொட்ட பிறகு உங்கள் கைபேசியை தொட்டு விட்டால் உங்கள் கைகளை மட்டுமல்ல உங்கள் கைப்பேசியையும் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் வேறு ஒரு நபரை உங்கள் கைப்பேசியை உபயோகிக்க அனுமதித்திருந்தால் , அப்போதும் உங்கள் கைபேசியை சுத்தம் செய்ய வேண்டும்.பெரும்பாலான ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் , உங்கள் கைபேசிகளை கிருமி நாசினி கொண்ட வைப்ஸ் மூலம் துடைப்பதை பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமின்றி இரசாயன உள்ள ப்ளீச் போன்றவற்றை கைபேசிகளில் உபயோகிக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.
உங்களிடம் கிருமிநாசினி கொண்ட வைப்ஸ் இல்லையேல் கவலைப்பட வேண்டாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய செயல்முறைகளை பின்பற்றவும்.
படிநிலை 1: உங்கள் கைப ேசியின் உறையை கழற்றவும்
உங்கள் கைபேசியின் பின்னாடி உள்ள உறையை நீங்கள் கழற்ற வேண்டும் . ஏனென்றால் அந்த உறைக்கும் கைபேசிக்கும் நடுவே உள்ள இடுக்குகளில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் நிறையவே இருக்கலாம்.

படிநிலை 2 : சுத்தம் செய்யும் கரைசலை தயாரித்துக் கொள்ளவும்
1/2 கப் தண்ணீரில், 1 சொட்டு திரவ சோப் ஊற்றி, நன்கு கலந்து, ஒரு சுத்தம் செய்யும் கரைசலை தயாரித்து கொள்ளவும். ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை அந்த கரைசலில் முக்கி, நன்றாகப் பிழிந்து, அதிகபட்ச நீரை வெளியேற்றவும்.
படிநிலை 3: உங்கள் கைப்பேசியின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யவும்
உங்கள் கைபேசியின் உறையையும், திடமான மேற்புரத்தையும், துவாரங்கள் இல்லாத இடங்களிலும், ஒரு மைக்ரோ ஃபைபர் துணியைக் கொண்டு நன்றாக துடைக்கவும். ஆனால் உங்கள் கைபேசியில் இருக்கும் எந்த ஒரு துவாரத்தின் உள்ளும் ஈரப்பதம் அல்லது தண்ணீர் சென்று விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
படிநிலை 4: ஈரப்பதத்தை துடைத்து உலர வைக்கவும்
உங்கள் கைப்பேசியையும் அதன் உறையையும் ஒரு சுத்தமான மைக்ரோ ஃபைபர் துணியை கொண்டு துடைத்து உலர்த்தவும். பிறகு உங்கள் கைப்பேசியை 5 முதல் 10 நிமிடம் வரை காற்றில் உலர வைக்கவும். எந்தவித ஈரப்பதமும் அதில் மிச்சமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அவ்வளவுதான்! சுலபமாக இருக்கிறது அல்லவா? இந்த எளிமையான கைபேசியை சுத்தம் செய்யும் வழி முறைகள், உங்களை கிருமிகள் அண்டாமல் பாதுகாக்கும்.