இந்த ஆண்டு தீபாவளிக்காக உங்களுடைய திறந்த அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளை சுத்தமாக தோன்றச் செய்திடுங்கள்.

தீபாவளியின் மகிழ்ச்சி எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பதில் இருக்கிறது. திறந்த அலமாரிகளையும் இழுப்பறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும், அப்போதுதான் எடுத்த வேலை நிறைவு பெறும். எப்படி என்பதை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Give Your Closets a Clean Overhaul for Deepavali This Year!
விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

உங்களுடைய திறந்த அலமாரி எப்போதும் தூசு படியும் போக்குடையவை. இந்த பண்டிகைக் காலம்தான் தூசுகளை துடைத்தெறிந்து அலமாரியை சுத்தமாக வைத்துக்கொள்ள ஏற்றது. இதோ பின்பற்றுவதற்காக சில குறிப்புகள்!

மர அலமாரிகளுக்கு ஒருவித பளபளப்பை கூட்ட இதை முயற்சிக்கலாம். ஒரு தேக்கரண்டி முட்டையற்ற மேயோனாய்ஸ் எடுத்துக்கொண்டு அலமாரி கதவுகளை தேய்க்கலாம். பின்னர் மேயோனாய்ஸை துடைத்தெடுக்க ஒரு உலர்ந்த துணியை உபயோகிக்க மறக்க வேண்டாம். அலமாரிகளை ஃப்ரஷாக வைத்திருக்க ஒருசில அந்துருண்டைகளை போட்டு வைக்கவும். உங்களுடைய ஆடைகளை திரும்ப அடுக்கி வைக்கும் முன்பாக அடுக்கு மீது செய்தித் தாள்கள் அல்லது உறையிடும் காகிதங்களை பரப்பி வைத்து உபயோகிக்கலாம். அடுத்த முறை சுத்தம் செய்வதை இது எளிதாக்கும்.

படி 1: அலமாரியை காலியாக்கவும்

இது தான் மிகவும் எளிமையான வழி. அலமாரியிலிருந்து எல்லா பொருள்களையும் வெளியே எடுத்துவிடுங்கள். இங்கே நீங்கள் இழுப்பறைகளையும் காலி செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். செய்யும் வேலையில் அயற்சி தோன்றாமல் இருந்திட உங்களுக்கு விருப்பமான இசையை பின்னணியில் ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டிருக்கலாம். சிரமம் தோன்றாது இருக்க உன்னதமான வழி. 

படி 2: அழுக்கை நீக்கி சுத்தம் செய்தல்

இடம் காலியாக இருந்தால் சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும். அலமாரிக்குள் இருக்கும் அழுக்குகளையும் தூசுகளையும் நீக்குவதற்கு வேக்குவம் கிளீனரை உபயோகிக்கவும்.  அடுக்குகளில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தூசுகளை போக்க நீங்கள் துடைப்பானையும் உபயோகிக்கலாம். எளிதில் அணுக முடியாத மூலை முடுக்குகளை சுத்தம் செய்ய ஒரு பழைய டூத்பிரஷையும் உபயோகிக்கலாம். 

விளம்பரம்
Domex Disinfectant Floor Cleaner

படி 3: சோப்பு கரைசலை தயாரித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை சூடாக்கிக் கொள்ளவும். ஒரு வாளியில் இந்த வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளவும். மற்றும் அத்துடன் 3 தேக்கரண்டி டிஷ்வாஷிங் லிக்விட் சேர்த்துக் கொள்ளவும். இப்போது ஒரு துணியை இந்த சோப்பு கரைசலில்  முக்கி எடுத்து அலமாரி முழுவதையும் துடைக்கவும். உள்ளும் புறமும் துடைக்கவும்.

படி 4: உங்கள் அலமாரியை துடைக்கவும்

மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்துக்கொள்ளவும். ஒரு துணியை இதில் தோய்த்துக்கொண்டு, அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுத்துவிட்டு ஈரமான துணியால் அலமாரியை துடைக்கவும். பிறகு ஈரப்படிவு ஏதும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு உலர்ந்த துணி கொண்டு மீண்டும் நன்றாக துடைக்கவும்.

படி 5: கறைகளை நீக்குதல்

இவ்வாறு துடைத்து சுத்தம் செய்த பிறகும் கறைகள் இருக்குமானால், 1 கப் தண்ணீரில் 1 கப் வினிகர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான ஸ்பாஞ்சை இந்த கலவையில் தோய்த்துக் கொள்ளவும். பின்னர் கறை படிந்துள்ள பகுதியில் தேய்க்கவும். பிறகு ஈரப்படிவு ஏதும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு உலர்ந்த துணி கொண்டு மீண்டும் நன்றாக துடைக்கவும்.

அவ்வளவேதான்! உங்களுடைய அலமாரி இப்போது சுத்தமாகிவிட்டது. நீங்கள் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும்போது இசையை கேட்க மறக்க வேண்டாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது