
பீங்கான் தரை ஓடுகள் வீட்டிற்கு மிகவும் அழகு சேர்க்கும் ஒன்றாகும். பார்ப்பதற்கு கண்கவரும் வண்ணம் இருக்கும் இவை , நீர் உட்புகாத தன்மை கொண்டிருப்பதோடு நன்கு நீடிக்கும் தன்மையும் கொண்டது. இவை இரண்டு வகைப்படும்: பளபளப்பான ஓடுகள் மற்றும் மெருகிடப்படாத ஓடுகள்.
பளபளப்பான ஓடுகளின் மேல் கண்ணாடி அடுக்கு இருப்பதால் அவை மென்மையாக இருப்பதோடு சுலபமாக சுத்தம் செய்யவும் வல்லது. ஆனால் மெருகிடப்படாத ஓடுகளில் கண்ணாடி அடுக்கு இல்லாததால் அதன் மேல் படியும் அழுக்கு மற்றும் தூச ியை சுத்தம் செய்வது மிகவும் சிரமமாகும்.
எனினும் கவலை வேண்டாம். சரியான முறையில் சுத்தம் செய்தால், மெருகிடப்படாத தரை ஓடுகளும் தங்கமாய் மின்னும்.
கீழ் உள்ள முறைகளை பின் பற்றவும்:
Step 1: சுத்தம் செய்யும் கலவையை உருவாக்குக
தரை ஓடுகளில் உள்ள கறையை போக்குவதற்கு மிகவும் சக்திவாய்ந்த கலவையை உருவாக்க வேண்டும். ஒரு வாளியில் முக்கால்வாசி நீரைநிரப்பி, அதில் ஒரு கிண்ணம் வினிகர் மற்றும் 2 தேக்கரண்டி சோப்புதூள் சேர்த்து நன்றாக கிளறவும். மரத்திலான கரண்டி அல்லது சுத்தமான துணியைக்கொண்டு கிளற வேண்டும். ரப்பர் கையுறைகளை பயன்படுத்த மறக்க வேண்டாம்.

Step 2: நன்கு தேய்க்கவேண்டும்
துடைக்கும் திண்டு கொண்டு நீரூற்றி தரையை நன்கு தேய்க்கவேண்டும் . தூசு, மாசு ஏதேனும் இருந்தால் அகன்றுவிடும்.
Step 3: தரையைசுத்தம்செய்தல்
சுத்தமான துணியை, செய்து வைத்த கலவையில் முக்கி, தரை முழுவதுமாக நன்கு துடைக்க வேண்டும். அச்சு மற்றும் பூஞ்சைகளை கூட இந்த கலவை அகற்றிவிடும் . துணியை பலமுறை பிழிந்து தரை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும்.
Step 4: காத்திருத்தல்
கடினமான கறை இருக்கும் பட்சத்தில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் அந்த கலவையை தரையில் ஊற விடவேண்டும்.
Step 5: நீரூற்றி கழுவுதல்
இந்த கரைசல் உடன் முழு பகுதியையும் நீங்கள் சுத்தம் செய்தப் பிறகு சுத்தமான துணியைக்கொண்டு நீரூற்றி தரையை நன்கு துடைக்க வேண்டும்.
மேற்கண்ட முறையில் சுத்தம் செய்தால், உங்கள் வீட்டின் தரை பிரகாசமாக ஒளிரும். செய்து பாருங்களேன்!