உங்கள் காட்டன் சுடிதாரிலிருந்து நூல் இழைகள் பிரியாமல் காப்பது எப்படி

காட்டன் சுடிதார் என்பது பெண்களுக்கான மிகவும் வசதியான ஒரு ஆடையாகும், குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு. உங்கள் காட்டன் உடைகளை சிறந்த நிலையில் வைத்துக் கொள்ள இதோ சில வழிகள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Prevent Your Cotton Churidaar from Pilling
விளம்பரம்
Comfort core

ஒவ்வொரு இந்திய பெண்ணின் அலமாரியிலும் காட்டன் சுடிதார்கள், ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துவிடும். ஏனெனில் அது மிகவும் வசதியாகவும் , காற்றோட்டமாகவும் இந்திய ஆடைகளுடன் மிகவும் எளிதாக பொருந்த கூடியதாகவும் விளங்குகிறது. எனினும், இப்பொழுது நம் கேள்வி என்னவென்றால் அவற்றின் நூலிழைகள் பிரியாமல் எவ்வாறு காப்பது. உங்கள் காட்டன் ஆடை, ஏதாவதொரு மேற்பரப்பில் கடினமாக உராய்ந்தால் , அதன் சிறிய நூலிழைகள் வெளியே வந்து, ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் அந்த இழைகள் பஞ்சு உருண்டை போல் மாறி, ஆடையின் மேற்பரப்பில் தெரியும். இந்த நிலை உங்கள் காட்டன் சுடிதாருக்கும் வரலாம்.

இதை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே காணலாம்.

1) மென்மையாகத் துவைக்கவும்

நீங்கள் இந்த ஆடைகளை தனியே எடுத்து,  மிகவும் மென்மையான முறையில், உங்கள் கைகளால், குளிர்ந்த நீர் மற்றும் லேசான சோப்புத்தூள் பயன்படுத்தி துவைக்குமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு செய்வது, உங்கள் துணி உராய்ந்து விடாமல் காக்கும். நீங்கள் இதற்கு ஸர்ஃப் எக்ஸல் ஈசிவாஷை பயன்படுத்தலாம். மேலும் சுடு தண்ணீரை ஒருபோதும் சலவைக்கு பயன்படுத்த வேண்டாம், ஏனென்றால் அது துணி இழைகளை திறந்து, அவற்றை பிரியச் செய்து, அந்த இழைகளை ஒன்றோடொன்று சிக்கிக்கொள்ள செய்துவிடும். நீங்கள் துணி துவைக்கும் இயந்திரத்தை உபயோகிக்க எண்ணினால், அதில் மென்மையான சுழற்சியை தேர்வு செய்வதோடு, குளிர்ந்த நீரில் துவைக்கும் அமைப்பை உபயோகித்து துணிகளை சலவை செய்யவும். இதற்கு நீங்கள் சர்ஃப் எக்செல் மேட்டிக்கை பயன்படுத்தலாம், ஏனென்றால் அது நீரில் முழுமையாக கரைந்து விடுவதோடு எந்த ஒரு பொடி போன்ற மிச்சத்தையும் துணிகளின் மேல் படியவிடாது. 

2) உங்கள் ஆடைகளின் உட் பக்கத்தை வெளிப்புறமாக திருப்பவும்

நீங்கள் துவைப்பதற்கு முன், உங்கள் ஆடைகளின் உள்  பக்கத்தை வெளிப்புறமாக திருப்பவும். இவ்வாறு செய்வதனால் உங்கள் ஆடைகளின் வெளிப்புறம் பாதிப்படையாமல் இருக்கும். இச்செய்முறை உங்கள் காட்டன் சுடிதாரின் வெளிப்புறம் அதிகமாக உராய்ந்து பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

விளம்பரம்
Comfort core

3) இயந்திரத்தில் அதிகமான துணிகள் போடுவதை தவிர்க்கவும்

உங்கள் துணி துவைக்கும் இயந்திரத்தில்,  சலவைக்கு, அதிகமான துணிகள் போடுவதை தவிர்க்கவும். இதைத் தவிர்த்தால், சலவை செய்வதற்கு இயந்திரத்தில் அதிகமான இடம் கிடைக்கும் , எனவே துணிகள் ஒன்றோடொன்று உரசாமல் தவிர்க்க முடியும். துவைப்பதற்கு முன் உங்கள் காட்டன் சுடிதாரையும் மற்ற காட்டன் ஆடைகளையும், பிற வகை ஆடைகளான டெனிம், பாலிஸ்டர் போன்றவற்றிலிருந்து தனியாக பிரித்து வைக்கவும். 

4) கறைகளை மென்மையாக நீக்கவும்

உங்கள் சுடிதாரில் உள்ள கறைகளை நீக்குவதற்கு, துவைக்கும் போது அதனை அழுத்தி தேய்ப்பதை அறவே தவிர்க்கவும். அதற்கு பதிலாக உங்கள் விரல்களை பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கறைகளை நீக்குமாறு பரிந்துரைக்கிறோம். இந்த செய்முறை, துணி இழைகளை பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

5) காற்றில் உலர்த்தவும்

உங்கள் காட்டன் சுடிதாரை, ஒரு சமமான தரையில் விரித்து காற்றில் உலர வைக்கவும். ட்ரையரில் உலர்த்தினால் உராய்வு ஏற்படுவதோடு,  துணி இழைகள் பிரிந்து விடக்கூடும்.

6) அடிக்கடி உடுத்துவதை தவிர்க்கவும்

உங்கள் காட்டன் சுடிதாரின் துணி இழைகள் பிரிந்து போவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது, நீங்கள் அதை அடிக்கடி உடுத்துவதே ஆகும். ஒரே சுடிதாரை அடிக்கடி உடுத்துவதை தவிர்க்க, வேறு சில மாற்று உடைகளை உங்கள் அலமாரியில் வைத்து, அதை தேர்ந்தெடுத்து உடுத்த உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

இதுமட்டுமன்றி, உங்கள் சுடிதாரின் பிரிந்த துணி இழைகளை நீக்க, ஒரு பியூமிஸ் கல்லை எடுத்து , இழைகள் பிரிந்து மேலே வந்த இடங்களில், சமமாக தேய்க்கவும். இந்த செய்முறை துணி இழைகள் பிரிவதால் ஏற்பட்ட பஞ்சு உருண்டைகளை தளர்த்த  உதவும். அதன் பிறகு ஒரு கூர்மை அதிகம் இல்லாத ரேசரை உபயோகப்படுத்தி அந்த பஞ்சு உருண்டைகளை நீக்கவும். நீங்கள் ஒரு ஸ்க்ரப்பிங் பஞ்சை பயன்படுத்தியும் இந்த பிரிந்துபோன துணி இழைகளை நீக்கலாம், ஆனால் முதலில் அதை ஒரு சிறிய மறைவான இடத்தில் உபயோகப்படுத்தி பார்க்கவும்.

இந்த சிறிய மாற்றங்கள் மற்றும் உதவிக்குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் காட்டன் சுடிதாரின் துணி இழைகள் பிரிந்து போகாமல் நீங்கள் பாதுகாக்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது