
நீங்கள் உங்களுக்காக ஓர் அழகான ஒன்பது கஜ பட்டு சேலை வாங்கியதும், அதை எவ்வாறு சரியாக சேமித்து வைக்க வேண்டும் என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சரியாக சேமித்து வைத்தல் மற்றும் நன்றாக பராமரித்தல் மூலம் நீங்கள் உங்கள் பட்டு சேலையை ஆண்டாண்டு காலத்திற்கு அதன் நேர்த்தியை பேணி பாதுகாப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ணிடியும்.
உங்கள் பட்டு சேலையின் பளபளப்பையும் பகட்டையும் தக்கவைத்துக்கொள்வது ஒரு பெரிய பணி, அதை நீங்கள் மிகவும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். கவலைப்பட வேண்டாம். வீட்டில் உங்கள் பட்டு சேலையை துவைத்திட விளக்கமான இந்த படிப்படியான செயல்முறையை பார்க்கவும்.
உங்கள் சேலையை நேரடியாக வெயிலில் உலர்த்துவதை தவிர்க்கவும். புறஊதா (யுவி) கதிர்கள் துணியை பாதிக்கச் செய்யலாம். மற்றும் உங்கள் சேலையின் நிறம் மாறுவதற்கு வழிவகுக்கலாம்.
படி 1:
சில தயாரிப்பு வேலையை செய்யவும். ஒரு வாளியில் குளிர்ந்த தண்ணீரை நிரப்பிக்கொள்ளவும். அதில் எந்த ஒரு டிடெர்ஜென்டும் இல்லாமல் 2-3 நிமிடங்களுக்கு உங்கள் பட்டு சேலையை கைகளால் துவைத்திடவும். பின்னர், அதே வாளியில் 2 மேசைக்கரண்டி வினிகர் சேர்க்கவும் மற்றும் இந்த கரைசலில் உங்களுடைய சேலை 10 நிமிடங்களுக் கு நன்றாக ஊற வைக்கவும்..

படி 2:
உங்கள் சேலையை இந்த கரைசலில் ஊற வைத்த பிறகு, மற்றொரு வாளியில் சுத்தமான, குளிர்ந்த தண்ணீரை நிரப்பி வினிகர் வாசனை போகும்வரை சேலையை அலசவும்.
படி 3:
மற்றொரு வாளி நிறைய குளிர்ந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். 1 தேக்கண்டி ஃபேப்ரிக் சாஃப்ட்னர் (பட்டுக்கு பொருத்தமானது) மற்றும் 4-5 சொட்டுகள் பேபி ஷாம்பு சேர்க்கவும். இந்த கரைசலில் உங்கள் சேலையை கையால் துவைக்கவும் மற்றும் மீண்டும் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் அலசவும்.
படி 4:
பிறகு ஒரு உலர்ந்த டவல் எடுத்துக்கொள்ளவும் மற்றும் அதன் மீது உங்கள் ஈரமான பட்டு சேலையை வைக்கவும். மெதுவாக டவலை உருட்டவும் மற்றும் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுக்கவும். அடுத்து நிழல்படிந்த இடத்தில் சேலையை காற்றில் உ‘ர்த்தவும்.
அது முழுமையாக உலர்ந்த பிறகு உங்கள் சேலையை ஒரு மஸ்லின் துணியில் சுற்றி வைக்கவும். அதை ஓர் இருண்ட இடத்தில் சேம ித்து வைக்கவும்.
இப்போது, உங்கள் சேலையின் பளபளப்பையும் பகட்டையும் பேணி பாதுகாப்பது மிகவும் சுலபம்!