
சலவைக்குப் பிறகு உங்கள் துணிகளை உலர்த்த இரண்டு வழிகள் உள்ளன: இயந்திரத்தில் உலர்த்துதல் மற்றும் காற்றில் உலர்த்துதல். இரண்டு வழிகளும் அவ்வவற்றின் நன்மைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முறையும் உங்கள் ஆடைகளை எவ்வாறு உலர்த்துவது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். இந்த கட்டுரையில், இந்த இரண்டு உலர்த்தும் முறைகளின் நன்மைகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
விரைவாகப் பார்ப்போம்.
1) எம்பிராய்டரி காட்டன் ஆடைகள்
பருத்தி ஆடை ஒரு நுட்பமான துணி, அதற்கு கூடுதல் கவனிப்பு தேவை. உங்கள் சலவை இயந்திரத்தில் உங்கள் எம்பிராய்டரி பருத்தி ஆடைகளை உலர்த்துவதைத் தவிர்க்கவும். கண்ணாடி வேலை, கல் வேலைப்பாடு கொண்ட பருத்தி ஆடைகளை சலவை இயந்திரத்தில் உலர்த்த கூடாது. வெப்பம் மற்றும் சிராய்ப்பு ஆகியவை எம்பிராய்டரிக்கு சேதத்தை ஏற்படுத்தும். இது உங்கள் சலவை இயந்திரத்தையும் சேதப்படுத்த கூடும். இந்த ஆடைகளை பகல் நேரத்தில் உலர்த்த நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
2) ரப்பர் அச்சு கொண்ட பருத்தி ஆடைகள்
ரப்பர் அச்சு கொண்ட உங்கள் பருத்தி ஆடைகளையும் இயந்திரத்தில் உலர்த்த கூடாது. இயந்திரத்தில் உலர்த்துவது ரப்பர் அச்சில் விரிசல் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். இந்த ஆடைகளை இயற்கையான முறையில், பகல் நேரத்தில் உலர வைக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும், உலர்த்துவதற்கு முன் ஆடையை உள்ளே-வெளியே திருப்ப நினைவில் கொள்ளுங்கள். இது ரப்பர் அச்சு மற்றும் ஆடையின் நிறத்தை பாதுகாக்கும்.

3) காட்டன் சாக்ஸ்
உங்கள் காட்டன் சாக்ஸும் மென்மையானது. அதன் எலாஸ்டிக் உங்களுக்கு சரியான பொருத்தத்தை அளிக்கிறது. இயற்கையான சூரிய ஒளியில் இவற்றை உலர்த்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இயந்திரத்தில் உலர்த்தினால் அதன் எலாஸ்டிக் தளர்த்தப்பட்டு அதன் வடிவம் சேதமடையும்.
4) இழுக்கத்தக்க பருத்தி ஆடைகள்
இழுக்கத்தக்க பருத்தி ஆடைகள், பருத்தி மற்றும் எலாஸ்டேன் கலவையினால் தயாரிக்கப்படுகின்றன. பருத்தி ஆடை ஒரு காற்றோட்டமான துணி, அதே சமயம் எலாஸ்டேன் உங்கள் உடைகளுக்கு ஒரு கச்சிதமான எலாஸ்டிக் பிடிப்பையும் உணர்வையும் அளிக்கிறது. இந்த ஆடைகளை துவைக்கும் போதும், துவைத்த பின்னும் முழுமையான கவனத்துடன் கையாள வேண்டும். இவற்றை பாதி நிழலில் உலர்த்த பரிந்துரைக்கிறோம். இயந்திரத்தில் உலர்த்துவது, துணிக்கும் அதன் பொருத்தத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை உண்டாக்கும்.
அவ்வளவுதான்! உங்கள் பருத்தி ஆடைகளை சலவை செய்யும் போது , ஒரு படி கூடுதலாக கவனிக்க விரும்பினால், உங்கள் துணிகளுக்கு லேசான சோப்பையே பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் பருத்தி ஆடைகளை கைகளால் சலவை செய்ய சர்ப் எக்செல் ஈஸி வாஷை முயற்சி செய்யலாம்.
இந்த உதவிக்குறிப்புகள், உங்களுக்கு பிடித்த பருத்தி ஆடைகளுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.